Digital Time and Date

Welcome Note

Monday, March 11, 2013

ஆன்ரொய்ட் இயங்கு தளம் : தெரிந்ததும் தெரியாததும்!

அன்ரொய்ட் இயங்கு தளம் : தெரிந்ததும் தெரியாததும்!

முழுமையாக வாசிக்கவும்

உலகிலேயே சிறந்த மனிதனுக்கான விருதினை அள்ளி மனிதர்களில் சிறந்த மனிதன் என்ற உயரிய இடத்தினை மனிதர்கள் வழங்கும் அளவிற்கு மக்களின் தோள் கொடுக்கும் தோழனாய் இருக்கும் கணனிக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக இயங்குதளமே அன்ரொய்ட்.

ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் அனுபவிக்கும் வகையில் வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பத்தினால், உலகின் அத்தனை விடயங்களையும் அறிந்துகொண்டாலும் நம்மிடையே சர்வசாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் சில விடயங்கள் பற்றி தெரியாமலேயே அவற்றுடன் உறவாடிக்கொண்டிருக்கின்றோம். அதில் ஒன்றுதான் இந்த 'அன்ரொய்ட்' இயங்குதளம். 

ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் கணனிகளுக்கான சிறந்த இயங்குதளம் எது என்றால் பள்ளிக் குழந்தைகள் போல ஒருமித்து அதிகமானோர் கூறும் பதில் அன்ரொய்ட். ஆனால் இவ்வியங்குதளம் தொடர்பான அடுத்தடுத்தடுத்த கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு தயாராக இருப்பவர்கள் வெகுசிலரே.

உண்மையில் இயங்குதளம் என்பது குறித்த ஒரு சாதனத்தின் உயிர் எனலாம். உடலிலிருந்து உயிர் நீங்கினால் அல்லது நீக்கினால் உடல் இயக்கம் பூச்சியமாகவிடும். இது போன்றே குறித்த சாதனங்களின் உயிர் நாடியாகவே இயங்குதளங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு இயங்குதளமே அன்ரொய்ட் இயங்கு தளம்.

இவ்வியங்குதளத்தின் சொந்தக்காரன் இணையத்தில் தனக்கென தனியிடம் பதித்துள்ள தேடல் பொறி இணையத்தளமான கூகுள் நிறுவனமே. ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் கணனிகளின் அறிமுகத்தின் போதே கூகுள் நிறுவனம் அவற்றின் வளர்ச்சி பின்னாளில் அசாதரமாணமாக இருக்குமென உணர்ந்து அவற்றிற்கான சந்தையில் ஊன்றுவதற்கு தகுந்த தருணத்தை பார்த்துக்கொண்டிருந்தது. 

அப்போது இந்த அன்ரொய்ட் இயங்குதளம் மூலம் நுழைவதே சிறந்த வழி எனக் கண்டுகொண்டு அன்ரொய்ட் இயங்குதளத்துடன் சேர்ந்து கூகுள் நிறுவனமும் 2007 நவம்பர் 5ஆம் திகதி சந்தையில் அறிமுகமானது.

அன்ரொய்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு பின்னர் கூகுள் நிறுவனத்தினால் வாங்கப்பட்டு அண்மையில் கூகுளினினால் நிர்வகிக்கப்படும் ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் கணினிகளுக்கென பிரத்தியேகமாக லினக்ஸ் கேணல் அடிப்படையில் ஜாவா மொழியில் எழுதக் கூடிய ஒரு திறந்த மூல (Open Source) இயங்கு தளமே அன்ரொய்ட்.

ஓப்பன் சோர்ஸ் இயங்கு தளம் என்பனால் இலகுவில் வளர்ச்சியடையக்கூடிய சாதக தன்மையை அன்ரொய்ட் கொண்டுள்ளது. மேலும் இதன் மூலம் 'Apps' எனக் கூறப்படும் 700 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்ளிகேசன்களை கூகுள் நிறுவனத்தினால்; நிருவகிக்கப்படும் அன்ரொய்ட் மார்க்கெட் எனும் இணையத்தளத்தில் இன்று தரவிறக்கம் செய்யக் கூடியதாக உள்ளது.

இவ்விணையத்தளத்தில் சில எப்ஸ் இலவசமாகவும் சில எப்ஸ் கட்டணத்திற்கும் பெறக்கூடியதாக இருக்கின்றது. மேலும் அன்ரொய்ட் இயங்கு தளத்தினை கொண்ட சாதனங்களை பயன்படுத்த அன்ரொய்ட் மார்க்கட்டில் இணைய வேண்டும். அவ்வாறு இணையும் பட்சத்திலே அங்கே காணப்படும் எப்ஸ்களை தரவிறக்க முடியும்.

பணம் செலுத்தி தரவிறக்கம் செய்யும் எப்ஸ் பயனருக்கு பிடிக்கவில்லையாயின் கொள்வனவு செய்து 15 நிமிடத்திற்குள் எப்ஸ் இனை திருப்பிச்செலுத்தி பணத்தினையும் மீளப்பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த எப்ஸ்களை அன்ரொய்ட் மார்க்கெட்டில் மட்டுமல்லாது மூன்றாம் தரப்பு இணையத்தளங்களிலும் பெறலாம்.

இவ்வாறு பயனருக்கு இலகு வழிகளை ஏற்படுத்தியுள்ளதனால் தற்போதைய நிலவரத்தின் படி ஒரு நாளைக்கு 1.3 மில்லியனிற்கும் அதிகமான அன்ரொய்ட் சாதனங்கள் புதிதாக செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே அன்ரொய்ட் ஏற்படுத்தியிருக்கும் தேவையை சற்று எண்ணிப்பாருங்கள். 

ஏ.ஆர்.எம், எம்.ஐ.பி.எஸ், ஒ86 போன்ற வன்பொருள் ஆதாரத்திற்கு ஆதரவளிக்கும் அன்ரொய்ட் இயங்குதளமானது. பீட்டா பதிப்பிலிருந்து தற்போது ஜெல்லிபீன் 4.2 பதிப்பு வரையிலும் பயனர்களின் தேவைக்கேற்றவாறு பல்வேறு மாற்றங்களை செய்து வெளியிட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வெளிவரும் புதிய பதிப்புக்களை நினைத்தவுடன் பயனர்கள் புதிப்பித்துக்கொள்ள முடியாது. பயனர்கள் கைவசம் உள்ள ஸ்மார்ட் போன் அல்லது டெப்லட் கணனி மாதிரிக்கு குறித்த நிறுவனங்கள் புதிய பதிப்பின் வசதியினை வழங்கும் போதே இதனை பழைய பயனர்கள் புதிப்பித்துக்கொள்ள முடியும்.

இது வரையில் வெளியான அன்ரொய்ட் இயங்கு தளத்தின் குறிப்பிடத்தக்க பதிப்புகளாக அன்ரொய்ட் 1.0, கப் கேக் (அன்ரொய்ட் 1.5), டொனட் (அன்ரொய்ட் 1.6), ஈகிளயர் (அன்ரொய்ட் 2.0), புரொயோ (அன்ரொய்ட் 2.2), ஜின்ஜர்பிறட் (அன்ரொய்ட் 2.3), கொனிகொம்ப் (அன்ரொய்ட் 3.0), ஐஸ் கிரீம் சேன்விச் (அன்ரொய்ட் 4.0) மற்றும் ஜெல்லிபீன் (4.2) வெளிவந்துள்ளது. பதிப்புக்கள் ஒவ்வொன்றிற்கும் கூகுள் இனிப்பான உணவின் பெயர்களையே சூட்டிவருகின்றது. 

இவ்வியங்குதளத்தின் மூலம் பயனர்கள் அனுபவிக்ககூடிய பல வசதிகள் ஏனைய இயங்கு தளத்திலிருந்து சற்று மேம்பட்டதாக உள்ளது. தற்போதுள்ள அன்ரொய்ட் இயங்குதளத்திலுள்ள விஷேட அம்சங்களாக, 
•  இதன் ப்ளட் போம் பெரிய அளவு வீ.ஜி.ஏ, 2டி, 3டி போன்றவற்றிற்கு இணங்கும் வண்ணம் அமைந்துள்ளமை
•  அதிகளவிலான கோப்புகளை சேகரிக்கக்கூடிய வசதி
•  குறுந்தகவலிற்கு (SMS) புதிய உருவம் கொடுத்துள்ளது. த்ரட்டட் (Threaded SMS) எனப்படும் நவீன குறுந்தகவல் அனுப்பும் முறையில் செயற்படும் தன்மை.
•  க்ளௌட் தொழில்நுட்பம் (Cloud Technology) அறிமுகம் செய்யப்பட்டது.
•  GSM/EDGE, IDEN, CDMA, EV-DO, UMTS, Bluetooth, Wi-Fi, LTE, NFC and WiMAX போன்ற தொடர்பாடல் முறைமைகளுக்கு ஆதரவளிக்கும் திறன் வைபை ஹொட் ஸ்பொட்
•  அதிக மொழிகளுக்கு இணங்கும் ஆற்றல்
•  Multi touch மற்றும் Multi task முறையை கையாளக்கூடிய வசதி
•  ஜாவாவிற்கு இசைவதுடன் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட வீ.எம் அமுலாக்கத்தை சிறப்பாகக் கொண்டுள்ளது.
•  H.263, H.264 (3GPஇல் அல்லது MP4), MPEG-4 SP, AMR, AMR-WB, AAC, HE-AAC (MP4இல் அல்லது 3GP), MP3, MIDI, OGG வோர்பிஸ், WAV, JPEG, PNG, GIF, BMP போன்ற வடிவங்களுக்கு ஆதரவளிக்கின்து
•  திறந்த மூல வெப்கிட் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட உலவி காணப்படுகின்றது. அசிட்3 சோதனையில் இந்த உலவி 93/100 மதிப்பெண்களை எடுத்தமை குறிப்பிடத்தக்கது
•  வீடியோ/நிழற்பட கேமராக்கள், தொடுதிரைகள், ஜிபிஎஸ், வேக அளமானிகள், காந்தவியல்மானிகள், (வன்பொருள் திசைஅமைவு, வரிசை படுத்துதல், பிக்சல் வடிவ நிலைமாற்றத்துடன்) துரிதப்படுத்தப்பட்ட 2டி பிட் பிலிட்கள் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட 3டி கிராபிக்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளமை
•  ஸ்க்ரீன் சொட் வசதி
•  குரல் வளி கட்டளை வசதி
•  வைபை ஹொட் ஸ்பொட்
என இன்னும் ஏராளமான சிறப்பம்சங்களை அன்ரொய்ட் இயங்குதளம் கொண்டுள்ளமையால் ஏனைய இயங்கு தளத்துடன் இருந்து சற்று விலகி மேம்பட்ட ஒரு இயங்கு தளமாகவே இது காணப்படுகிறது.

பயனர்களின் தேவைகள் பலவற்றை உணர்ந்து அதற்கேற்ற வகையில் பல உத்திகளின் மூலம் நிறைய வசதிகளை தன்னகத்தே கொண்டிருந்த போதும் ஒரு சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது.

•  அனிமேட்டட் .gif கோப்புகளுக்கு ஆதரவளிப்பதில்லை
•  ஜாவா SE மற்றும் ME போன்ற நிலைநாட்டப்பட்ட ஜாவா தரங்களை பயன்படுத்துவதில்லை. ஜாவா இயங்கு தளங்களுக்காக மற்றும் அன்ரொய்ட் இயங்கு தளங்களுக்காக எழுதப்பட்ட ஜாவா பயன்பாடுகள் பலவற்றுள் ஒத்தியல்பைத் தடுக்கிறது
•  அன்ரொய்ட் பல்வேறு பதிப்புகளில் வேலை செய்யும் பயன்பாடுகளைப் பராமரிப்பது மிகவும் கடினம் என உருவாக்குனர்கள் தெரிவித்தனர், ஏனெனில் அடுத்தடுத்த பதிப்புகளிடையே பல்வேறு தகுதியுடைமை பிரச்சினைகள் உள்ளன.

இது போன்ற மேலும் ஒரு சில குறைபாடுகளுடன் இந்த அன்ரொய்ட் இயங்கு தளம் காணப்பட்டபோதும் மிகப்பெரியளவில் இன்று மக்களை தன்வசம் ஈர்த்துள்ளது. 

இன்றைய தலைமுறையினரின் உள்ளங்கவர் ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட் போன்ற இலத்திரனியல் சாதனங்களில் இவ் அன்ரொய்ட் இயங்கு தளத்தினையே பெரிதும் எதிர்ப்பார்ப்பதனால் வரும் நாட்களில் தற்போதைய இடத்தினை விட மிகப் பெரும் இடத்தினை தக்க வைக்கும் ஆற்றல் அன்ரொய்ட் இற்கு உண்டு என்பதனால் பயனர்கள் அனைவரும் முடிந்தளவு இவ்வியங்குதளத்தின் சாதக பாதக நிலைமைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் இதனை அனுபவித்து மகிழலாமே...!

http://www.facebook.com/pages/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/176557375832279?ref=hl