Digital Time and Date

Welcome Note

Thursday, March 7, 2013

உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....!

வெனிசுலா அதிபர் ஹுகோ சாவேஸ் அசாத்திய துணிச்சல் கொண்டவர். சைமன் பொலிவர், சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ போன்ற போராளிகளின் வழியில் வந்தவர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா. பொதுச் சபையில் பல நாட்டுப் பிரதிநிதிகள் கூடியிருந்தபோது, அப்போதைய அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டினார். 

அப்போது புஷ் அவையில் இல்லை என்றாலும், உலகின் வல்லரசு நாட்டின் அதிபரை அந்த நாட்டிலேயே வைத்து கடும் சொற்களைப் பயன்படுத்திப் பேசுவது என்பது சாதாரணமாக யாரும் செய்யத் துணிகிற செயல் கிடையாது. சாவேஸ் அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. இது தொடர்பாக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தபோதும், தனது பேச்சில் இருந்து பின்வாங்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ மறுத்துவிட்டார். 

"அமைதியாக இருக்கும் நாடுகளில் கலகத்தை உருவாக்கி, குண்டுகளை வீசும் ஆளை எப்படி அழைப்பீர்கள்?' என்று திருப்பிக் கேட்டார். "கொடுங்கோலன், போதைப் பொருள் கடத்துபவன் என்றெல்லாம் புஷ் என்னை வசை பாடியபோது இந்த அக்கறை எங்கேயிருந்தது?' என்று சாதுர்யமாக வாதிட்டார். இப்படிப் பேசுவதும் நடந்து கொள்வதும்தான் சாவேஸின் குணம். 

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும்போதுஅவற்றின் செயலுக்கு துணிச்சலாக எதிர்வினையாற்ற வந்த புரட்சியாளராகத்தான் பார்க்கப்பட்டார். இப்போதும் பார்க்கப்படுகிறார்.முதலாளித்துவம், எதேச்சதிகாரம் பற்றி வெறுமனே பேசிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், சாவேள்ஸ போன்ற ஒருசிலர்தான் அவற்றை முழு அக்கறையுடன் எதிர்க்கிறார்கள்.தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவை 'கோமாளி' என்றும் வெனிசுலா அதிபர் சாவேஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
வெனிசுலா அதிபர் ஹுகோ சாவேஸ் சமீபத்தில் மரணம் அடைந்தது நினைவிருக்கலாம் .

No comments:

Post a Comment