ஒரு துளுக்க பையனின் கடிதம்…
வணக்கம் கமல்,
நலமா… அடகில் இருந்த வீட்டை மீட்டாகிவிட்ட்தா… பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவிட்டீர்களா… அனைதிலிருந்தும் மீண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்… அப்படியில்லை என்றால் விரைவில் எல்லா பிரச்சனைகளும் தீர வேண்டும் என எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்…!!!
இந்த கடிதம் உங்கள் பிரச்சனைகளை மட்டும் கேட்க அல்ல கமல்… இது என் பிரச்சனைகளை உங்களிடம் சொல்ல…!
ஆங்கில ஊடகங்களும் அது தரும் செய்திகளையும் படித்து விட்டு, வல்லாதிக்க அரசுகள் தரும் தரவுகளை மட்டும் வைத்து கொண்டு படம் பண்ணும் உங்களிடம் சில வார்த்தைகள் இந்த துளுக்க பையன் பகிற விரும்புகிறேன்…
நிச்சயம் என்னை நீங்கள் ஒரு மதவாதியாக பார்க்க வேண்டாம்…!
என் மதத்தை பொருத்த வரை வெள்ளிகிழமை கூட தொழுகைக்கு செல்லாத, இஸ்லாம் ஹராம் என்று சொல்லும் சினிமாவிலும் மற்றும் ஊடகங்களிலும் பணி புரியும், அரபு மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கும், இன அடையாளங்களை புரிந்துகொள்ளாமல் ஏகத்துவம் பேசுபவர்களை எதிர்க்கும் ஒருவன் …!!!
இஸ்லாமியர்களின் மொழியில் நானும் ஒரு காஃபீர் தான்…!!!
சரி விடுங்கள்… விசயதிற்கு வருவோம்…!
உங்கள் படங்களால் நான் தொடர்ந்து பாதிக்க படுவதை நீங்கள் என்றாவது உணர்கிறீர்களா…?
என் சிறு வயதில் நான் அதிகம் சந்தித்த வார்தை
துளுக்க பய… துளுக்க பய… அப்போது ஏன் என்னை அப்படி அழைக்கிறார்கள் என்று புரியவில்லை என் உயரத்தால் என்னை அப்படி அழைகீறார்கள் என்று பல நாட்கள் நான் எண்ணி இருக்கிறேன்…!!!
ஆனால் நான் சார்ந்த மதத்தால் தான் அப்படி அழைக்கபடுகிறேன் என்று வெகுநாட்களுக்கு பிறகு தான் புரிந்தது…? ஆனால் அது எனக்கு பெரிய விஷயமாக தெரிந்த்தில்லை ஆனால் அந்த வார்தைக்குள் புதைந்திருக்கும் அரசியல் புரிந்த பின்பு, நான் உங்களால் எப்படி பார்க்க படுகிறேன் என்பதும் புரிந்தது…!
நான் ஒரு கூரியர் அனுப்ப வேண்டுமென்றால்க்கூட அனுப்புனர் பெயரில் என் பெயரை போட அச்சமாக இருக்கிறது கமல்… ‘கவர் உள்ள என்ன வச்சுருக்கப்பா…?’ என்று கேட்கும் கூரியர் கடைகாரனின் வன்மத்தை என்றாவது சந்தித்து இருகீறீகளா நீங்கள்…? வீடு கொடுக்கும் போது கூட என் அடையாளத்தை மறைத்தே வீடு பெற வேண்டி இருக்கிறது… அது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா… மனித உரிமைகள் பற்றி தொடர்ந்து பேசும் நீங்கள் இதுவெல்லாம் மனித உரிமை மீறல் இல்லை என்பீர்களா…?
எனக்கு தனிப்பட்ட முறையில் நீங்கள் மிகவும் நெருக்கமானவராக இருந்தீர்கள்… உங்களை எனக்கு மிகவும் பிடித்தது… உங்கள் ‘ஹே ராம்’ படத்தை நான் இது வரை உறுதியாக 100 முறைகளுக்கு மேல் பார்த்துள்ளேன்… அதை பார்த்து தான் நான் ஊடக துறைக்கு வந்தேன்…! அந்த படத்தில் உள்ள ஒவ்வொரு வசனமும் எனக்கு மனப்பாடம் கமல்… “நாங்கள் மட்டும் வெளியிலிருந்து வர வில்லை… உங்கள் கடவுளும் கைபர் போலன் கனவாய் வழியாக வெளியிலிருந்து தான் வந்தார்” என்று ஒரு இஸ்லாமியனான சாருகான் ஹேராம் படத்தில் பேசுவார்… அந்த வசனத்தை வைக்க ஒரு ஆசாத்திய துணிச்சல் வேண்டும் அந்த துணிச்சல் முன்பொரு காலத்தில் உங்களிடம் இருந்தது கமல்…!
“சோவீயத் உடைந்துவிட்டதால் கம்யூனிசம் அழிந்து விட்டது சொல்லும் நீங்கள்… தாஜ் மஹால் உடைந்துவிட்டால் காதல் அழிந்துவிடும் என்று சொல்வீர்களா…” என்பது போன்ற கூர்மையான வசனங்கள் உங்கள் படத்தில் மட்டுமே சாத்தியமாக இருந்தத காலம் ஒன்று இருந்த்து கமல் ஆனால் இப்போது என்ன ஆனாது கமல், நிச்சயம் நான் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உங்கள் படங்கள் இருக்க வேண்டும் என சொல்ல வில்லை அது என் எண்ணமும் அல்ல இங்கு யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல…!
ஆனால் அமெரிக்க தரும் ஆதாரங்களை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் படம் எடுக்கிறீர்கள் அதை எதிர்த்தால் இங்கு கருத்துரிமை இல்லை என்கிறீர்கள்… அது எப்படி முறையாகும்… சரி நானும் அமெரிக்க தரும் இலங்கை அரசின் போர் குற்றம் குறித்தான தரவுகளை கொண்டு ஒரு படம் எடுக்கிறேன் அதை இந்த அரசு அனுமதிக்குமா…? சீனாவையும் பாகிஸ்தானையும் விமர்சித்து வசனங்களும், காட்சிகளும் வைத்தால் அனுமதிக்கும் சென்சார் போர்ட், இலங்கை குறித்து வசனங்கள் வைத்தால் அதை தடை செய்வது ஏன்…?
படைபாளிக்கான சுதந்திரம் குறித்து பேசும் நீங்கள்… இதற்காகவும் போராடுங்கள்… ஏன் அப்போது உங்கள் இதழ்கள் மெளனித்து விடுகின்றன…?
அமெரிக்க குறித்த உங்கள் பார்வை மாறி இருக்கலாம்… அதை நீங்கள் ஒரு புனிதர்களின் தேசமாக கருதலாம் அது பிழை அல்ல… எப்படி கம்யூனிஸம் பேசுவதற்கு இங்கு உரிமை உள்ளதோ அதை அளவு உரிமை கேபிடலிஸம் பேசுவதற்கும் உள்ளது ஆனால் உங்கள் நிலைபாடு என்ன கமல்… நீங்கள் மரணதண்டனை வேண்டாமென்று விரும்பாண்டியும் எடுகிறீர்கள்… மரண தண்டனை வேண்டும் என்று உன்னைபோல் ஒருவனும் எடுக்கிறீர்கள்… உங்கள் முகம் என்ன கமல்…! அதை தெளிவு படுத்தி விடுங்கள்… முற்போக்கு வேடமிடாதீர்கள்…!!!
உங்களை போல் எனக்கும், காந்தியை பிடிக்கும் கமல் (உங்களுக்கு இப்போது அவரை பிடிக்கிறதா என்று தெரியவில்லை ஹே ராமில் அவருடன் சேர்த்து அவர் மீதான பிரியங்களையும் கொன்று விட்டீர்களா என்று தெரியவில்லை) ஆனால எதுவாயினும் நான் காந்தியை நேசிக்கிறேன் கமல்… அவரிடம் இருந்த உண்மை எங்களிடம் மறித்து விட்டது… நீங்கள் 24 மணி நேரமும் அரிதாரம் பூசி பழகிவிட்டீர்கள்…!
உங்களிடமிருந்து இனி எந்த ஒரு நேர்மையான படைப்பையும் எதிர்பார்க்க முடியாது…?
மிகவும் வேதனையாக இருக்கிறது இதை எழுத… ஆனால் அது தான் உண்மை கமல்…!
மேலும், நிச்சயம் உங்கள் சினிமா தடை செய்யபட்டதை நான் விரும்பவில்லை… இனி எந்த சினிமாவும் தடை செய்ய படுவதையும் நான் விரும்பவில்லை.. ஆனால் உங்கள் படதிற்கு எதிராக போராடுவதை நான் ஆதரிப்பேன்… படம் எடுப்பது உங்கள் கருத்து சுதந்திரமென்றால் அதை எதிர்ப்பது அவர்கள் கருத்து சுதந்திரம் கமல்…!
பின் குறிப்பு:
மரண தண்டனைக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நண்பர்களே… ரிசானாவுக்கு அளிக்க பட்ட தண்டனை குறித்த உங்கள் நேர்மையான கருத்து என்ன… இந்தியாவில் நடந்தால் பதறும் நீங்கள், அரபு தேசத்தில் நடந்தால் ஏன் மெளனித்து விடுகிறீகள்…?
விஸ்வரூபம படதிற்கு எதிராக அணி திரண்ட நீங்கள், தமிழகத்தின் தலையாய பிரச்சனையான காவிரி பிரச்சனையில் உங்கள் பங்களிப்பு என்ன…?
நான் இஸ்லாமிய தனி நபர்களை குறிப்பிடவில்லை, தமிழகத்தில் உமர் போன்றவர்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது நான் இஸ்லாமிய இயக்கங்களை குறிப்பிடுகிறேன்…!
என்னை பொருத்த வரை நீங்களும் கமலை போன்று ஒரு சுயநலவாதி தான்…!

No comments:
Post a Comment