Digital Time and Date

Welcome Note

Sunday, June 30, 2013

விக்கல் என்றால் என்ன? சுவாரசியமான தகவல்கள்

விக்கல், யாரோ தம்மை நினைப்பதால் வருகிறது என்று முதலில் நம்
முன்னோர்கள் கூறியதை, இன்றும் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் விக்கலானது, நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றானது மூச்சுப் பாதையின் மிகக் குறுகிய இடைவெளியில் செல்வதால் ஒருவித விநோத ஒலி உண்டாகும். அந்த ஒலி தான் விக்கல். இந்த விக்கல் வருவது இயல்பு.

ஒரு சிலருக்கு விக்கலானது அடிக்கடி வரும். இதற்கு முறையான மருத்துவ
ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால் சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மூளைக் காய்ச்சல், நீரிழிவு நோய், குடல் அடைப்பு போன்றவற்றின்
அறிகுறியாகவும் விக்கல் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக காரம் உள்ள உணவுகள் சாப்பிடும்போது விக்கல் வரும். அளவுக்கு மீறி
அல்லது அவசர அவசரமாக உணவு உட்கொண்டாலும் விக்கல் வரும். மேலும் தேவையான அளவிற்குத் தண்ணீர் குடிக்காத போதும் விக்கல் வருவதுண்டு.

விக்கல் தொடர்ந்து வரும் போது கண் வறண்டு போதல் மற்றும் மயக்கம்
ஏற்படலாம். இப்படி பிரச்சனை உள்ளவர்கள் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளாக சாப்பிட வேண்டும். காய்கறி, பழங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம். தினமும் 4 முதல் 8 லிட்டர் தண்ணீர் வரை அருந்தவும். வைட்டமின்கள் அதிகம் நிறைந்த உணவுகள், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள், எண்ணெயில்
பொரித்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்கவும். வறட்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சூடான உணவுகள் தவிர்த்து எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவும்

facebook

No comments:

Post a Comment