Digital Time and Date

Welcome Note

Friday, July 5, 2013

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

இப்புடி சொல்லி சமூகப் பிளவுக்கும், நிற வெறிக்கும் , சாதி பாகுபாடுகளுக்கும் அன்றே முடிவு தந்து விட்டு சென்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிச்சென்ற இந்த வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு..!!

நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை.

இஸ்லாத்தை பொறுத்தவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர்ன்னு யாருமில்லங்க யாரு இறைநம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்றாரோ அவரே இறைவனிடத்தில் உயர்ந்தவர். பிறப்பாலோ அல்லது செய்யும் தொழிலாலோ ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ ஆக முடியாது. .. !! இஸ்லாத்தை பத்தி நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு கொஞ்சம் டவுட்டு வரும் இல்லையா? முஸ்லிமல்லாத பலர் இஸ்லாத்தின் இந்த சமத்துவம் குறித்து சொன்னவற்றில் சிலவற்றை கீழே சேர்த்து இருக்கிறேன் பாருங்கள்.. :)

பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.
-டாக்டர் அம்பேத்கார்.

இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சித்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையை போன்று வேறேந்த மதமும் – அவற்றின் மத கருத்தோட்டம் எதுவாயினும் சரியே கடைபிடிக்கவில்லை.
டாக்டர் சர். சி. பி. இராமசாமி ஐயர் -[EasternTimes, 22 டிசம்பர், 1944.]

எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.
கவிக்குயில்" sarojini-naidu

இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.
- அறிஞர் அண்ணா

இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது.
அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். முஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.
– ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர்.

உங்கள் சகோதரி
ஷர்மிளா ஹமீத்

No comments:

Post a Comment