Digital Time and Date

Welcome Note

Sunday, July 21, 2013

இந்திய நிதி அமைப்பில் இருக்கும் வரிகள்!!

வரிகள் என்பது முன்வரையற்ற விகிதங்கள் மற்றும் சீரான இடைவெளியில் அரசாங்கத்துக்கு நாம் கட்டும் பணம். இந்த வரிப்பணம் தான் அரசாங்கத்தின் முக்கியமான வருவாய். இதனை வைத்து வரி கட்டுபவர்களுக்கு அரசாங்கம் பல வகையான சலுகைகளை அளிக்கின்றன. முக்கியமாக இரண்டு வகை வரிகள் உள்ளது; ஒன்று நேர்முக வரி, இன்னொன்று மறைமுக வரி. நேர்முக வரியை சென்ட்ரல் போர்டு ஆப் டைரக்ட் டாக்சஸ் (CBDT) என்ற குழுவும், மறைமுக வரியை சென்ட்ரல் போர்டு ஆப் எக்ஸ்சைஸ் அண்ட் கஸ்டம்ஸ் (CBEC) என்ற குழுவும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.


நேர்முக வரிகள்

நேர்முக வரிகள் என்பது வரி கட்டுபவரின் தனிப்பட்ட கடன் பொறுப்பாகும். இந்த பணம் அவர்களிடம் இருந்து நேரடியாக வசூல் செய்யப்படும். மேலும் யார் மீது வரி விதிக்கப்பட்டிருக்கிறதோ அவர் தான் இந்த வரியை கட்ட வேண்டும். இந்த நேர்முக வரிகளின் பிரிவுகளை பார்க்கலாம்:


வருமான வரி

வருமான வரி என்பது முக்கியமான நேர்முக வரியாகும். இதனை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. இதனை டி.டி.எஸ் (TDS) என்றும் சுருக்கமாக அழைப்பார்கள். குறிப்பிட்ட அளவிற்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டியிருக்கும்.


சொத்து வரி

நம் நிகர சொத்து மதிப்பு 30 லட்சங்களை தாண்டினால், 30 லட்சத்திற்கு மேலான பணத்திற்கு 1% விகிதத்தில் வரி கட்ட வேண்டும். குறிப்பு - வருடத்திற்கு ஒரு கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு கூடுதல் கட்டணமாக 10% விகிதம் வரி வசூலிக்கப்படும் என்று 2013-2014 பட்ஜெட்டில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.


மூலதனலாப வரி

உங்கள் சொத்து அல்லது பங்குகளை விற்கும் போது கிடைக்கும் மூலதன லாபத்திற்கும், வரி விதிக்கப்படுகிறது. நீண்ட கால மூலதன லாபத்திற்கும் சிறிய கால மூலதன லாபத்திற்கும் வரி விகிதங்கள் மாறுபடும்.


கொடை வரி/வாரிசு உரிமை வரி


50,000 ரூபாய்க்கு மேல் ஒரு தனி நபரிடம் இருந்தோ அல்லது எச்யுஎஃப்-விடம் (HUF)இருந்தோ ஒருவர் அன்பளிப்பு பெற்றிருந்தால் கோடை வரி செலுத்த வேண்டும். அனால் இரத்த சொந்தங்களிடம் இருந்து பெற்ற பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கல்யாண பரிசுகள் மற்றும் வாரிசுகளுக்கு வந்தடையும் பணத்திற்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வாரிசு உரிமை வரி என்று முன்பு இருந்தாலும் அதை அரசாங்கம் திருப்பி பெற்று விட்டது.



கார்பரேட் வரி 

இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி விகிதத்தை பொருத்து அவர்களின் வருமானத்தின் மீது வரி வதிக்கப்படும். அரசாங்கத்தின் வருவாய்க்கு இதுவும் முக்கிய மூலமாக விளங்குகிறது.

மறைமுக வரிகள்

நேர்முக வரிகளை போல் அல்லாமல், மறைமுக வரிகளின் தாக்கமும் வரி விழுநிலையும் ஒருவரையே சாராமல் பல நபர்கள் மேல் விழும்.

இந்த வரிகள் பல வகையான நபர்களிடம் பெறப்பட்டாலும் இதனை கட்டும் பொறுப்பு இதனை வசூல் செய்பவரிடம் இருக்கிறது. வரி கட்டுபவர்கள் மறைமுக வரியை தங்களின் வாடிக்கையாளர்களிடம் பெற்றுக்கொண்டு அரசாங்கத்திடம் கட்டி விடுகின்றனர்.

உதாரணதிற்கு நாம் எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு வாட் (VAT) கட்டுகிறோம் அல்லவா? அதே போல் ஹோட்டலில் உண்ணும் போது சேவை வரி என்று கட்டுகிறோம் அல்லவா? இந்த பணம் எல்லாம் அரசாங்கத்திடம் சேவை அளிப்பவர்களின் மூலம் போய் சேரும். இவ்வகை மறைமுக வரிகளை பற்றி விலாவரியாக இப்போது பார்க்கலாம்


சேவை வரி

வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் பணத்தில் சில விகிதம் சேவை வரிக்காக வசூலிக்கப்படும். குத்தகைக்கு விடுதல், இணையதளம், போக்குவரத்து போன்றவைகளுக்கு சேவை வரிகள் வசூலிக்கப்படும்.


சுங்க வரி

சுங்க வரி என்ற மறைமுக வரி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும் விதிக்கப்படும் வரியாகும். பல வகையான பொருட்கள் மற்றும் துறைகளை பொருத்து வரி விகிதம் மாறுபடும். குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதி/இறக்குமதியை ஊக்கப்படுத்த இந்த விகிதத்தை ஒவ்வொரு அரசாங்கமும் மாற்றிக் கொண்டே இருக்கும்.

 
எக்ஸ்சைஸ் வரி

எக்ஸ்சைஸ் வரி (Excise Duty)எனப்படும் மறைமுக வரி, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, நம் நாட்டின் பயன்பாட்டிற்கு உபயோகப்படும் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரியாகும். சுங்க வரியை போல் இதற்கும் பல விதிமுறைகள் உள்ளன. இதுவும் ஒவ்வொரு அரசாங்கத்தால் மாறிக் கொண்டே தான் இருக்கும்.

 
விற்பனை வரி மற்றும் வாட் (VAT)



இந்திய சந்தையில் பொருட்களை வாங்கவும் விற்கவும் விதிக்கபடும் வரிதான் விற்பனை வரி. ஒரு வாடிக்கையாளராக சந்தையில் இருந்து நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் விற்பனை வரி கட்ட வேண்டும். இப்போது விற்பனை வரியுடன் சேர்ந்து மதிப்புக் கூட்டு வரி எனப்படும் VAT-டும் வசூலிக்கப்படுகிறது. இது நாட்டில் ஒருசீரான முறையை கொண்டு வருவதற்கு விதிக்கப்படும் வரியாகும்.

பங்கு பரிமாற்ற வரி (STT)

 பங்கு பரிமாற்ற வரி என்பது பங்குச்சந்தையின் மூலம் பங்குகளை வாங்குவதாலும் விற்பதாலும் விதிக்கப்படும் வரியாகும். பங்குகள், டிரைவேடிவ்ஸ், மியுச்சுவல் பண்ட் போன்ற நிதி சார்ந்த பல வகையான பொருட்களை பரிமாற்றுவதால் இந்த வரி வசூலிக்கப்படும்.
 
நன்றி அமர்க்களம் தளம்

No comments:

Post a Comment