Digital Time and Date

Welcome Note

Monday, July 22, 2013

அல்சர் பிரச்சனையை சரிசெய்யும் உணவுகள்!!!

அல்சர் என்பது சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால், இரைப்பையில் செரிமானத்திற்காக சுரக்கப்படும் அமிலமானது அதிகரித்து, இரைப்பை மற்றும் உணவுக்குழலை அரித்து, புண்ணாக்குவதோடு, எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் இந்த அல்சரை எச். பைலோரி என்னும் பாக்டீரியாவும் உண்டு பண்ணும். இத்தகைய அல்சர் வந்தால், கடுமையான வயிற்று வலியுடன், வாந்தி, செரிமானமின்மை, சீரற்ற குடலியக்கம், நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படும்.

இந்த எச். பைலோரி என்னும் பாக்டீரியா செரிமான பாதையை மெல்லியதாக்கி, பலவீனமடைய செய்து, வயிற்றையே பெரிய பாதிப்புக்குள்ளாக்கிவிடும். நிறைய மக்கள் இந்த அல்சர் பிரச்சனையை குணமாக்குவதற்கு ஆன்டி-பயாட்டிக்குகளை எடுத்துக் கொள்வார்கள். இருப்பினும், அல்சரை குணப்படுத்துவதற்கு இயற்றை வைத்தியத்தை விட சிறந்தது எதுவும் கிடையாது. அதிலும் உணவுகள் மூலம் குணப்படுத்த முடியாதது எதுவும் இல்லை.

ஆம், ஒருசில உணவுகளில் அல்சரை குணப்படுத்தும் இயற்கையான ஆன்டி-பயாட்டிக்குகள் நிறைந்துள்ளன. ஆகவே அத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், அல்சரை எளிதில் குணப்படுத்த முடியும். இப்போது அல்சரை குணப்படுத்தும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பின்பற்றி வந்தால், அல்சர் பிரச்சனையைப் போக்கலாம்.
 
தேன் 
தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இதனை உணவில் சேர்த்து வந்தால், அல்சரை உண்டு பண்ணும் எச். பைலோரி பாக்டீரியாவை அழித்து, அல்சரை குணமாக்கலாம்.  
 
தயிர் 
தயிரில் உள்ள இயற்கையான பாக்டீரியா, வயிற்றில் அல்சரை உருவாக்கும் கிருமிகளை அழித்து, கடுமையான வலியுடன் கூடிய அல்சரில் இருந்து நிவாரணம் தரும். ஆகவே அல்சர் இருந்தால், தயிரை அதிகம் சாப்பிட்டால், விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம்.
 
 செரில்
செரிலில் வயிற்று அல்சரை குணப்படுத்தக்கூடிய காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக இயங்கி, செரிமானப் பிரச்சனை நீங்கும்.

முட்டைகோஸ்
முட்டைகோஸில் அமினோ அமிலங்கள், எல் குளூட்டமைன் மற்றும் ஜெபர்னேட் போன்ற அல்சரை சரிசெய்யும் பொருட்கள் அதிகம் உள்ளது. இவை அல்சரை குணமாக்குவதோடு, செரிமான மண்டலத்தை சுற்றி ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, இனமேல் அல்சர் வராமல் தடுக்கும். 
 
வாழை
வாழையில் அல்சரை குணமாக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும்.
 
கைக்குத்தல் அரிசிகைக்குத்தல் அரிசியில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் வளமாக நிறைந்துள்ளது. எனவே அல்சர் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிட்டு வந்தால், அல்சர் குணமாவதோடு, அதில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களால், உடலியக்கங்கள் அனைத்தும் சீராக இயங்கும். 
 
சீஸ்
சீஸில் எண்ணற்ற ஆரோக்கியமாக பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுப் பொருளை அதிகம் சாப்பிட்டால், அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து, அல்சர் எளிதில் குணமாகிவிடும்.

பூண்டு
பூண்டுகளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை உணவில் சேர்க்க உடலில் நோயை ஏற்படுத்தும் அனைத்து பாக்டீரியாக்களும் அழிந்துவிடும். குறிப்பாக அல்சர் உள்ளவர்கள், பூண்டுகளை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

சிட்ரஸ் பழங்களை தவிர்க்கவும்
பழங்களில் அசிட்டிக் பொருள் இல்லாத பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், வயிற்று அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் நீங்கிவிடும். முக்கியமாக, அசிட்டிக் பழங்களான ஆரஞ்சு, தக்காளி அல்லது அன்னாசி போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.  
 
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்குகள சாப்பிட்டாலும், அல்சரை சரிசெய்ய முடியும். ஆனால் அந்த உருளைக்கிழங்கை ப்ரெஞ்சு ப்ரைஸ் அல்லது எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அவை அல்சரை அதிகரித்து, பெரும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.

http://www.amarkkalam.net

No comments:

Post a Comment