Digital Time and Date

Welcome Note

Thursday, July 25, 2013

கேன்சர் விளக்கம்
பேரைச் சொன்னாலே நமக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய், புற்றுநோய் தான். இந்நோயின் வகைகளை வரிசைப்படுத்திச் சொன்னால் வாய் வலிக்கக் கூடிய அளவுக்கு இதன் பட்டியல் நீளமானது. இந்நோயை இரண்டு விதமாகப் பார்க்கலாம்...

1. புற்றுநோய் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்...

2. புற்றுநோய் வந்துவிட்டால் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள்...

உலக அளவில், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன? அதற்கு செய்ய வேண்டியது என்ன? என்னென்ன உணவுப்பொருட்களில் வழக்கமான ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் தவிர, புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. புற்றுநோய் வந்துவிட்டால் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள்:

இந்தியாவில் புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்காக செலவழித்து 6 லட்சம் முதல் 8 லட்சம் பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறைந்த வருமானம் உடைய குடும்பத்தினர் தங்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை சர்க்கரை நோய்க்கு செலவழிக்கின்றனர்.

இத்துடன் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர் அக்குடும்பத்தில் இருந்தால் செலவு எங்கோ போய் நிற்கிறது. அதனால், புற்றுநோய் வருமுன் காப்பதே சிறப்பாகும். இதற்கு ஒரே வழி புற்றுநோய் வரக்கூடிய வழிகளை எல்லாம் அடைப்பதுதான். இது மிக மிகச் சுலபமானதும் சாத்தியமானதும் ஆகும்.

மான்செஸ்டர் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த புரொபசர் ரோசலி டேவிட், இயற்கையான சூழ்நிலையில் கேன்சர் உண்டாக வாய்ப்பில்லை என்கிறார். மாசு, உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் போன்றவற்றுக்கு காரணமான மனிதரால் உண்டாவதே நோய்கள் என்கிறார்.

பன், பிஸ்கட், கேக் வாரத்துக்கு இரண்டு மூன்று முறை சாப்பிடும் பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதுவே, வாரம் மூன்று முறைக்கு மேல் சாப்பிடும் பெண்களுக்குக் கட்டிகள் உருவாகும் வாய்ப்பு இன்னும் அதிகமாம்.

அதிகப்படியான இனிப்பு, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து, என்ட்ரோ மெட்ரியத்தில், செல்களின் அபரிதமான வளர்ச்சியைத் தூண்டி விடுகிறது. வாரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கார்பனேட்டட் பானங்களை அருந்துபவர்களுக்குக் கணையப் புற்றுநோய் வாய்ப்பு அதிகம் என்கின்றனர்.

தினசரி சுமார் 2.5 லிட்டர் தண்ணீர் குடித்தால், சிறுநீர்ப் பையில் ஏற்படக்கூடிய புற்றுநோயைத் தவிர்க்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் தினசரி, பாட்டில் குளிர்பானம் அருந்துபவர்களுக்கு அதில் உள்ள அதிகளவு சர்க்கரை காரணமாக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.

பழச்சாறு எடுத்து சர்க்கரை கலக்காமல் அதன் இயற்கைச் சுவையில் அருந்துவதும், அப்படியே பழமாகச் சாப்பிடுவதும் நல்லது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சென்னை அடையார், கேன்சர் இன்ஸ்டிடியூட் தலைவரும், பிரபல புற்றுநோய் மருத்துவருமான டாக்டர் வி. சாந்தா அவர்கள் சில வருடங்களுக்கு முன் சொன்னது:

``அதிகப்படியான உப்பின் பயன்பாடு புற்றுநோயைத் தோற்றுவிக்கும். அதனால், அதிகப்படியான உப்பின் பயன்பாட்டையும், கருவாடு, உப்பில் காய வைத்த ஊறுகாய்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்'' என்று கூறியுள்ளார்.  புற்றுநோயை எதிர்க்கும் உணவுப்பொருட்கள்:

காளானில், எர்கோதியோனீன் - ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், லென்ட்டினான் ஃபைட்டோ கெமிக்கல், செலீனியம், வைட்டமின் `டி' வைட்டமின் `சி', நார்ச்சத்து உள்ளன. தக்காளி, பரங்கிக்காய், கேரட் போன்றவற்றில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகளை விட, அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் வெள்ளைப்பட்டன் காளானில் உள்ளன.

வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள், இலவங்கப்பட்டை போன்ற இதர ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகளுடன் சமைக்கும்போது காளானின் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் சக்தி அதிகரிக்கிறதாம்.
 
நன்றி சேனை தமிழ் உலா