Digital Time and Date

Welcome Note

Sunday, July 21, 2013

இக்கட்டான நிலையில் நோக்கியா!



ஒரு காலத்தில் எப்படி இருந்த நிறுவனம், இப்போது இப்படி ஆகிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு நொக்கியா தள்ளப்பட்டுள்ளது.எங்கு பார்த்தாலும் செம்சுங், அப்பிள் பற்றியே பேசப்படுகின்றது. இதுமட்டுமன்றி நொக்கியாவின் கோட்டையான வளரும் சந்தைகளிலும் அண்ட்ரோய்ட் வரவேற்பைப் பெறத்தொடங்கியுள்ளது. அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகள் குறைந்த விலைகளிலும் கிடைக்கின்றது அதனுடன் இயக்குவதற்கும் இலகுவாக உள்ளது. இவை நொக்கியாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. விண்டோஸ் மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகளை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ள போதிலும் அது எந்தளவு தூரத்திற்கு பாவனையாளர்களின் உபயோகத்திற்கு இலகுவாக இருக்கப்போகின்றது என்பது சற்று சந்தேகத்துக்குரியது.


இந்நிலையில் இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டுப் பகுதியின் நிதியியல் அறிக்கைகளை நொக்கியா வெளியிட்டுள்ளது. எதிர்ப்பார்க்கப்பட்டதைப் போல இரண்டாம் காலாண்டுப் பகுதியிலும் நொக்கியாவால் பெரியளவில் சோபிக்க முடியாமல் போயுள்ளது. இரண்டாம் காலாண்டுப் பகுதியில் சுமார் 7.4 மில்லியன் லுமியா போன்களை நொக்கியாவால் விற்பனை செய்ய முடிந்துள்ளதுடன் இது முதலாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது 32 % அதிகரிப்பாகும். லுமியா வரிசை போன்களின் விற்பனை அதிகரித்துள்ள போதும் மொத்த நொக்கியா போன்களின் விற்பனை குறைவடைந்துள்ளதுடன் இதனால் 115 மில்லியன் யூரோக்கள் நட்டமேற்பட்டுள்ளது.

எனினும் லுமியா விண்டோஸ் போன்களின் உதவியுடன் நொக்கியாவின் டிவைஸ் மற்றும் சேர்விஸ் பிரிவானது 2.7 பில்லியன் யூரோக்களை பெற்றுக்கொண்டுள்ளது இது கடந்த வருடத்துடன் இதே காலாண்டுப்பகுதியுடன் ஒப்பிடும் போது 24 % வீழ்ச்சியாகும்.

குறைந்த விலை 'ஆஷா 501' போனானது மொத்த விற்பனையில் நம்பிக்கையளிப்பதாக நொக்கியா தெரிவிக்கின்றது. அதேபோல் நொக்கியாவின் லுமியா 520 அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சீனா போன்ற நாடுகளில் நல்லவரவேற்பைப் பெற்றுள்ளதாக நொக்கியா தெரிவிக்கின்றது.இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் நொக்கியா குழுமத்தின் மொத்த விற்பனையின் மூலம் 11.5 பில்லியன் யூரோக்கள் வருவாயாக வந்துள்ளது எனினும் இதேகாலப்பகுதியை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது 22% வீழ்ச்சியாகும்.

கடந்த வருடம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டமடைந்ததாக நொக்கியா அறிவித்திருந்ததுடன் லுமியா போன்களின் விற்பனை அதிகரித்திருந்தகாவும் தெரிவித்தது. நட்டத்தை சமாளிக்கும் பொருட்டு நொக்கியா நிறுவனத்தில் 440 பேர் தமது தொழிலை இழக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நன்றி அமர்க்களம் தளம் 

No comments:

Post a Comment