
தெரு முழுவதும் நடந்தே தான் செல்ல வேண்டும். அதனால் தான் "வாக்கிங் ஸ்டீரீட்' என்று பெயர். "வாக்கிங் ஸ்டீரீட்' இரவு வாழ்க்கைக்கு பெயர் பெற்ற தெரு. இந்த தெருவில் தான் பார்கள், பப்கள், டிஸ்கொதேக்கள், மசாஜ் பார்லர்கள், ரஷ்ய நடனங்கள், பாலியல் சார்ந்த மேஜிக்குகள் என அனைத்துமே இருக்கும். தாய்லாந்து உணவு வகைகள், இந்த தெருவில் எப்போதும் கிடைக்கும். தலைநகர் பாங்காக்கிற்கு வருபவர்களை விட, பட்டாயாவுக்கு, சுற்றுலாப் பயணிகள் அதிகம் வர, இந்த "வாக்கிங் ஸ்டீரீட்டே' காரணம்.
உலகில் உள்ள பணக்காரர்கள், தங்கள் பணத்தை தாய்லாந்தில் வந்து தான் கொட்டுகின்றனர். அவர்களின் பணத்தைக் கவரும் தாய்லாந்து, தற்போது உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் முன்னணிக்கு வருகிறது.
amarkalam
No comments:
Post a Comment