நாயகம் (ஸல்) அவர்களின் முதல் ஜும்ஆ
படிங்க தோழர்களே
நாயகம் (ஸ்ல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த
போது மதீனாவுக்கு வெளியே குபா என்னுமிடத்தில் தங்கினார்கள். மக்காவில்
விட்டு வந்த ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களை எதிர்பார்த்தேதான் அவ்வாறு நாயகம்
(ஸல்) அவர்கள் தங்கியிருந்தார்கள்.
பதினாகு நாட்களுக்கு பின்னர் ஹஜ்ரத்
அலீ (ரலி) அவர்கள் சுகமே வந்து சேர்ந்தார்கள். இதற்கிடையேநாயகம் (ஸல்)
அவர்கள் குபாவில் ஒரு பள்ளிவாசலை நிர்மாணிக்க அஸ்திவாரமிட்டு
பதினான்குநாட்களுக்குள் சரித்திரப்பிரசித்தமான அப்பள்ளிவாசலை கட்டி
முடித்தார்கள். தாங்களும் மற்ற கூலி ஆட்களுடன் சேர்ந்து கொண்டு அயராது
உழைத்து அக் கட்டிடத்தை எழுப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.
நாயகம்
(ஸல்) அவர்கள் முதன்முதலாக நிர்மாணித்த பள்ளிவாசல் இதுவேயாகும். இதைப்பற்றி
இறைவன் குர்ஆனில் பக்தியின் மீது அஸ்திவாரமிடப்பட்ட முதல் பள்ளிவாசல்
என்று சிறப்பித்து கூறியுள்ளான்.குபாவில் பதினான்கு நாட்கள் தங்கியிருந்த
பின்னர் நாயகம் (ஸ்ல்) அவர்கள் ஜும் ஆ தொழுகையை இங்கேயே நிறைவேற்றினார்கள்.
தொழுகைக்கு முன்னர் நாயகம் (ஸ்ல்) அவர்கள் முஸ்லீம்களுக்கு வணக்கத்தின்
முக்கியத்துவம் பற்றியும்பக்தி, நேர்மை ஆகியவற்றின்அவசியம் பற்றியும்
அழகியதோர் உபதேசம் செய்தார்கள்.இதற்குத்தான் ஜும்ஆ வின் குத்பா என்று
கூறப்படும். நாயகம் (ஸ்ல்) அவர்கள் முதல் ஜும்ஆத் தொழுகையும் முதல்
குத்பாவும் இதுவேயாகும்.
3)ஜும்ஆ வின் சிறப்பு பற்றி நாயகம் (ஸ்ல்) அவர்கள் கூறியது என்ன் ?
சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஜும் ஆ நாளாகும்.
அத்தினத்திலேயே ஆதம் நபி (அலை) படைக்கப்பட்டு அதிலேயே அவர்கள்
சுவர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டார்கள். அத்தினத்திலேயே சுவர்க்கத்தில்
இருந்து வெளியேற்றவும் பட்டார்கள்.இறுதி நாளும் ஜும்மா தினத்திலேயே நிகழும்
என்று நாயகம் (ஸ்ல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
No comments:
Post a Comment