Digital Time and Date

Welcome Note

Wednesday, July 10, 2013

மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய

மின்சாரம் தேவையில்லை
செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்
ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு

ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.

நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும்.

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. செல்போனில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் செல்போனை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை.

அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக செல்போனை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். செல்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது.

செல்போன் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது.
அரச இலை காம்பை பேட்டரிக்கும் செல்போனில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது. இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார். அதை யாரும் நம்பவில்லை.

அதன்பிறகு செல்போன் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது செல்போனிலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை செல்போனின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் செல்போன் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது.

மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும்.

அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை செல்போனில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும்.

வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்து பேசலாம் என்கிறார் ரவி.

நன்றி அமர்க்களம் 

No comments:

Post a Comment