Digital Time and Date

Welcome Note

Tuesday, July 30, 2013

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்

எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென programming செய்திட வேண்டும் என்பதே பலரது கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.
 
இவை தவிர programming ஒரு சவாலாக உள்ளது. பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே programming பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.
 
இதன் பெயர் Code Academy. Programme எழுதுவதனை codingஎனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் account திறக்கும் முன்னர் programming எப்படி இருக்கும் என நமக்கு மிக மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.
 
நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும் பாடம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகநம்மை programming என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கும் அளவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
 
ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப்படுகின்றன.
 
Programming செய்திடும் பயிற்சியில் நமக்கு Tips தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில் நாம் பெறும் மதிப்பெண்கள் அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது இவைகள் அனைத்தும் கற்றுக் கொள்ளும் செயல்பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் programming கற்றுக் கொள்ளலாம் அதுவும் இலவசமாக.
 
இணையதள முகவ்ரி - http://www.codecademy.com/#!/exercises/0


நன்றி அமர்க்களம்

No comments:

Post a Comment