Digital Time and Date

Welcome Note

Monday, May 14, 2012

வயிறு சுத்தமா இருந்தா ஜீரணம் ஈசியாகும்!


அஜீரணக்கோளாறு என்பதை இன்றைக்கு பெரும்பாலானவர்களை வாட்டி வதைக்கிறது. உண்ணும் உணவு ஜீரணமாகாவிட்டால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும். வயிறு வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு மனிதர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்பொழுதுதான் ஜீரணமண்டலத்தின் இயக்கம் எளிதாக இருக்கும்.

வயிற்றை சுத்தமாக்கும் உணவுகள்
...
பச்சை காய்கறிகள் வயிற்றை சுத்தாக்கும். கீரைகள், செலரி, புருக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும். அதேபோல் காரட், வெங்காயம், பச்சைபட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைடிரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை.

தினசரி 2 வாழைப்பழம்

சிட்ரஸ் பழங்கள் ஜீரணமண்டலத்தை எளிதாக வைக்கும். பழங்களில் உள்ள உயர்தர நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது. எலுமிச்சை, ஆரஞ்ச், திராட்சை, ஸ்ட்ராபெர்ரீஸ் போன்றவை ஜீரணமண்டலத்திற்கு ஏற்ற உணவுகள். அதேபோல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவதும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

தானிய உணவுகள்

தானிய உணவுகள், கோதுமை ப்ரெட், போன்றவை எளிதில் ஜீரணமாகும். தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதேபோல் தினசரி உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாக தண்ணீர் அவசியம் பருகவேண்டும். இது போல் பால், பழரசங்களை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த உணவுகளை தவறாமல் உட்கொள்வதன் மூலம் ஜீரணமண்டல கோளாறு ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இதுபோன்ற எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை உண்பதன் மூலம் தேவையற்ற கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும் தொப்பை ஏற்படாது வயிறு ப்ளாட்டாக இருக்கும்.
See More

கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே...!



கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே...!

வியர்வையும், உடலுக்...குள் வறட்சியும் என நம்மை வாட்டி வதைத்து விடும். இதில் முக்கியமாக தொண்டை வறட்சி... குளிராக எது கிடைத்தாலும் குடித்துவிடுவோம். கோடைகாலத்தில் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் வைத்து விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக, அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்.

இந்த கலரான குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரிதான் சேருமே தவிர, வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் டாக்டர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவையும் அமோகமாக விற்பனையாகின்றன. இவற்றை தவிர்ப்பதும் நல்லது.

எண்ணெயில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்ப்பதுதான் நல்லது.

வெளியில் சென்றால் கையோடு ஒரு பாட்டிலில் சுத்தமான குடிநீரை எடுத்து செல்லுங்கள். இல்லையென்றால், இயற்கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள்.

மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லதுதான். அதேநேரம், அவற்றில் சேர்க்கப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்தவரை, அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வதுதான் சிறந்தது.

ஆரோக்கியமான உடல் நலத்திற்கு.



மருத்துவ செய்தி.

ஆரோக்கியமான உடல் நலத்திற்கு.


... சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை.

கீரை: கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்க வேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள்.

அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறு சிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.

பால் மற்றும் பால் பொருட்கள்: இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன.

பசும் பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச் செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப் போக்கு நோய்கள் குறையும்.

மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணைய் ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும்.

தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணைய் குளிர்த் தன்மை உடையது.

தண்ணீர்: நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது.

குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது.

அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது.

எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும்.

பயறு வகைகள்: பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும்.

பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும்.

பெருங்காயம் தேக வாயுவை குறைத்து வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.

தடை செய்யப்பட்ட தீமைகள்..



1.ஷிர்க் எனும் இணைவைத்தல்

2..சூன்யம், ஜோதிடம் மற்றும...் குறிபார்த்தல்

3..கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நன்மை செய்வதாக நம்புதல்

4.பாதுகாப்பு வேண்டி தாயத்து, கயிறு, வளையம் அணிதல்

5.துர்ச்சகுனம் பார்த்தல்

6.முகஸ்துதி (பிறருக்கு காண்பிப்பதற்காக அமல் செய்தல்

7.காலத்தை ஏசுதல்8.அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிடுதல்

9.கப்றுகளில் கட்டங்கள் எழுப்புதல்

10.கப்று…களுக்காக விழா நடத்துதல்

11.சமாதி வழிபாடு……………..

12.அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்தல்

13. இறைவனல்லாத பிறரை (அவுலியா, இறைநேசர்கள் போன்றவர்களை) அழைத்து உதவி தேடுதல்

14.அல்லாஹ் அல்லாதவர் ஹலாலை ஹராமாக்குவதையும் ஹராமை ஹலாலாக்குவதையும் ஏற்றுக்கொள்ளுதல்

15.தொழுகையை விட்டுவிடுதல்

16.தொழுகையில் பொடுபோக்காக, அலட்சியமாக இருத்தல்

17.அவசர அவசரமாக தொழுதல்

18.அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல்

19.வேண்டுமென்றே ஜமாஅத் தொழுகையை தவறவிடுதல்

20.தொழுகையில் இமாமை முந்துதல்

21.கொலை செய்தல்

22.விபச்சாரம் செய்தல்

23.வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டி சம்பந்தமான தொழில்களில் பணிபுரிதல்………………..…

24.மது அருந்துதல்

25.சூதாட்டத்தில் ஈடுபடுதல்

26.பொய் பேசுதல்

27.திருடுதல்

28.லஞ்சம் கொடுத்தல், லஞ்சம் வாங்குதல்

29.பொய்சாட்சி கூறுதல்

30.அவதூறு கூறுதல்

31. அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல்

32.கர்வம் கொள்ளுதல்33.தற்பெருமை, ஆணவம் கொள்ளுதல்

34.அளவு நிறுவையில் மோசடி செய்தல்35.அநீதி இழைத்தல்

36.புறம் பேசுதல்

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......




மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

...
ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.


அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.


முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."


இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."


மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."


வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.


அதில் ஒருவன் தைரியமாக முன் வந்து, "அரசே..! நாங்கள் தங்கள் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.


1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.


2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும் தான்..! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக..!


3. உலகையே வென்றவன் சாகும் போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக....!!!
See More