இறுதி நபியின் இறுதி பேருரை வரலாற்றுச் சிறப்புமிகக நிகழ்வு'இக்ரஃ - நீர் ஓதுவீராக'' என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ரமளானில் தொடங்கி வைத்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் அந்தக் குர்ஆனைமுழுமையாக ஓதிக் காட்டி மறு பதிவு செய்து கொள்வார்கள். (புகாரி 3554) ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரமளானில் திருக்குர்ஆனை இரு முறை மறு பதிவு செய்கின்றார்கள். (புகாரி 4998) அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாட்கள் எண்ணப்படத் துவங்கி விட்டது என்பதற்கு இது ஓர் அறிகுறியானது. இது வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வல்ல இறைவனால் கடமையாக்கப்பட்ட அனைத்து வணக்கங்களிலும் வழிகாட்டி விட்டிருந்தார்கள். எஞ்சியிருந்தது ஹஜ் என்ற இறுதிக் கடமை மட்டுமே! அந்த ஹஜ் கடமையை அவர்கள் நிறைவேற்றிய பயணத்தின் ஊடே தான் அரபா நாளில் இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்'' என்ற (5:3) வசனம் அருளப்பட்டது. ஓதுவீராக' என்று துவங்கிய திருக்குர்ஆன் ஓதி முடிக்கப்பட வேண்டிய இறுதிக் கட்டம் வந்து விட்டது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்தியது. அதற்கு ஏற்றது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறி விட்டார்கள். இதனால் பிரியப் போகும் தந்தையிடம் பிள்ளைகள் எப்படி நடப்பார்களோ அது போல் நபித்தோழர்களும் பிள்ளைகளிடம் விடை பெறப் போகும் தந்தை எப்படி நடந்து கொள்வாரோ அது போன்று நபி (ஸல்) அவர்களும் நடந்து கொண்டார்கள். அதனால் நபி (ஸல்) அவர்களின் இந்த ஹஜ் பயணம் நபித்தோழர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தோழர்கள் தங்கள் பார்வையில் இருந்து நபி (ஸல்) அவர்களின் எந்தச் செயலும் தவறி விடாதவாறும் காதுகளில் விழாமல் எதுவும் தப்பி விடாதவாறும் பார்வைகளைக் கூர்மையாக்கி காதுகளை நன்கு தீட்டிக் கொண்டு பதிவு செய்து கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருபத்து மூன்று ஆண்டு காலத்தில் ஆற்றிய தூதுப் பணியின் மொத்தத் தொகுப்பை தனது ஹஜ்ஜின் இறுதிக் கட்ட ஐந்து நாட்கள் பயணத்தில் சத்தாக சாறாகப் பிழிந்து தந்தார்கள். அதனால் அது வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இறுதி நபியின் இறுதிப் பேருரை என்ற பெயரிலும் அரபா பேருரை என்ற பெயரிலும் நூல் வடிவில் வெளியாகியுள்ளன அட்டைகளாக வெளியிடப்பட்டு வீடுகளில் தொங்க விடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பல வெளியீடுகளில் ஆதாரக் குறிப்புகள் இன்றி மொட்டையாகக் காட்சியளிக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணிமொழிகள் என்றால் அவற்றுக்கு அணி சேர்ப்பது அவற்றின் அடியின் ஆதாரமாக இடம் பெறும் நூல்கள் தான். இந்தக் குறையை நீக்கும் வகையில் ஏகத்துவ வாதிகளின் வெளியீடுகளில் இவை இன்றியமையாதவை என்பதைக் கருத்தில் கொண்டு இறுதி நபியின் இறுதி (ஹஜ்) பேருரை என்ற தலைப்பில் வெளியிடுகின்றோம். விடைபெறும் ஹஜ் ; உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2286 நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். உடனே அவர்கள் இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்க மக்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். அவர்கள் (இது) புனிதமிக்க நகரமாகும்!'' என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?'' என்றதும் மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது புனிதமிக்க மாதமாகும்'' எனக் கூறிவிட்டு உங்களுடைய இந்தப் புனித நகரத்தில் உங்களுடைய இந்தப் புனித மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!'' எனக் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் தாம் ஹஜ் செய்த போது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கு மத்தியில் நின்று கொண்டு இது மிகப் பெரிய ஹஜ்ஜின் தினமாகும்'' என்று கூறினார்கள். மேலும் இறைவா! நீயே சாட்சி!'' என்று கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள். எனவே மக்களும் இது (நபியவர்கள் உலகை விட்டு) விடை பெற்றுச் செல்கின்ற ஹஜ்ஜாகும்'' என்று பேசிக் கொண்டார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர) நூல்: புகாரி 1742 தூதுச் செய்தி நிறைவுறுதல் என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! இது அவர்கள் தமது சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்'' என்று இப்னு அப்பாஸ் (ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரி1739 நீங்கள் (மறுமையில்) என்னைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அப்போது நீங்கள் என்ன (பதில்) சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். உங்கள் தூதுச் செய்தியை எடுத்து வைத்து விட்டீர்கள். அதை நிறைவேற்றி விட்டீர்கள். உங்கள் சமுதாயத்திற்கு நன்மையை நாடினீர்கள். உங்கள் மீதுள்ள பொறுப்பை ஆற்றி விட்டீர்கள் என்று நாங்கள் சான்று பகர்வோம்'' என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர். அப்போது அவர்கள் தமது ஆட்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தியும் பின்னர் அதை மக்களை நோக்கித் தாழ்த்தியும் யா அல்லாஹ்! நீயே சாட்சி! யா அல்லாஹ்! நீயே சாட்சி!'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ர) நூல்: முஸ்லிம் 2137 சகோதரத்துவம் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரனாவான். நூல்: ஹாகிம் 318 பாகம்: 1 பக்: 171 நீங்கள் மறுமையில் உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள்'' அறிவிப்பவர்: அபூபக்ரா நுஃபைஃ பின் ஹாரிஸ் (ரலி) நூல்: புகாரி 4406 மனித உரிமைகள் பற்றி நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்'' என்று பல தடவை கூறினார்கள். நூல்: புகாரி 1739 அறிந்து கொள்ளுங்கள்! உங்களது இந்த நகரத்தில் உங்கள் இந்த மாதத்தில் உங்களது இந்த நாள் எப்படிப் புனிதமானதாக விளங்குகின்றதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும் உங்கள் செல்வங்களையும் புனிதமான வையாக ஆக்கியுள்ளான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு நான் (இறைச் செய்தியை உங்க ளிடம்) சேர்த்து விட்டேனா?'' என்று கேட்டார்கள். மக்கள் ஆம் என்று பதிலளித்தனர். இறைவா! நீ சாட்சியாக இரு!'' என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் உங்களுக்கு என்ன நேரப் போகின்றதோ!'' அல்லது அந்தோ பரிதாபமே! கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறை மறுப்பாளர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள்'' என்று சொன்னார்கள். நூல்: புகாரி 4403 மனமுவந்து தராத தன் சகோதர முஸ்லிமின் பொருள் எதுவும் அடுத்த முஸ்லிமுக்கு ஆகுமானது அல்ல. அறிவிப்பவர்: அம்ர் பின் அல் அஹ்வல் (ரலி) நூல்: திர்மிதீ 3012 ஹாகிம் 318 அண்டை வீட்டுக்காரனுக்குச் சொத்தில் பங்களித்து விடுவார்களோ என்று கூறுமளவுக்கு அண்டை வீட்டுக்காரனைப் பற்றி அறிவுரை செய்கிறேன் என அதிகமாக வயுறுத்தினார்கள். நூல்: தப்ரானீ 7523 பாகம்: 8. பக்: 111 வேண்டாம் இன வெறி! மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும் ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும் ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும் ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை இறையச்சத்தைத் தவிர! நூல்: அஹ்மத் 22391 அறியாமை அகலட்டும்! அறியாமைக் காலத்து அனைத்துக் காரியங்களும் என் இரு பாதங்களுக்கடியில் போட்டுப் புதைக்கப்படுகின்றன. நூல்: முஸ்லிம் 2137 சீர்திருத்தத்தைத் தன்னிருந்து துவங்குதல் குழிக்குள் போகட்டும் பழியுணர்ச்ச்சி அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதல் ரத்து செய்யப் படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ அப்துல் முத்தபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்) அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2137 திர்மிதீ 3012 அபூ தாவூத் 1628 2896 இப்னுமாஜா 3046 3065 இப்னுகுஸைமா வட்டி ஒரு வன்கொடுமை அறியாமைக் காலத்து வட்டி (இன்று) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதல் நான் ரத்து செய்யும் வட்டி (எனது பெரிய தந்தை) அப்பாசுக்கு வர வேண்டிய எங்களுடைய வட்டியாகும். (இன்று) அந்த வட்டி அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றது. நூல்கள்: முஸ்ம் 2137 திர்மிதீ 3012 அபூதாவூத் 1628 2896 இப்னுமாஜா 3046 3065 இப்னு குஸைமா கடன் பற்றி... இரவல் (திருப்பிச்) செலுத்தப்பட வேண்டியதாகும். (பிறரது) கடனுக்குப் பொறுப்பேற்றவனும் கடனாளியோ கடன் நிறைவேற்றப்பட வேண்டியது ஆகும். நூல்கள்: திர்மிதீ 1186 அபூதாவூத் 2046 இப்னுமாஜா 2396 அஹ்மத் 21263 வாரிசுரிமைச் சட்டங்க்கள ; (தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும் போது குழந்தை பிறக்கின்றதோ அவருக்கே அக்குழந்தை உரியது. விபச்சாரம் செய்தவருக்கு இழப்பு தான். அவர்களின் விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது. தன் தந்தை அல்லாதவரை தந்தை என்று குறிப்பிடுபவர் தன் எஜமான் அல்லாதவருடன் தன்னை இணைத்துக் கொள்பவர் ஆகியோர் மீது இறுதி நாள் வரை தொடரும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதீ 2046 சொத்துரிமை உடைய ஒவ்வொருவருக்கும் அவரது சொத்துரிமையை (பாகப்பிரிவினை சட்டத்தின் மூலம்) அல்லாஹ் வழங்கி விட்டான். எனவே சொத்துரிமை பெறுபவருக்கு இனி மரண சாசனம் இல்லை. அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி) நூல்: இப்னுமாஜா 2705 ஒருவரது பாவத்தை மற்ற்றவர் சுமகக மாட்டார் தீங்கிழைப்பவன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான். தந்தை செய்யும் குற்றத்திற்கு மகன் பொறுப்பாளியாக மாட்டான். மகன் செய்யும் குற்றத்திற்குத் தந்தை பொறுப்பாளியாக மாட்டார். நூல்கள்: திர்மிதீ 2085 3012 இப்னுமாஜா 3659 ஆட்ச்சியாளருக்குக் கட்டுப்ப்படுதல் காது மூக்கறுந்த கன்னங்கருத்த அடிமை உங்களுக்கு ஆட்சியாளராக நியமிக்கப்பட்டு அவர் உங்களை அல்லாஹ்வுடைய வேதத்தின்படி வழிநடத்தினால் அவருக்குச் செவிசாய்த்துக் கட்டுப்படுங்கள். நூல்கள்: முஸ்ம் 3422 திர்மிதீ 1628 கணவன் மனைவியின் கடமைகளும் உரிமைகளும் பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை அமானிதமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். (திருமணம் முடியுங்கள் என்ற) அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே அவர்களது கற்புகளை அனுபவிக்கின்றீர்கள். நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. இது உங்கள் மனைவியர் உங்களுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். இதற்கு மாற்றமாக அவர்கள் நடந்தால் காயம் ஏற்படுத்தாத வகையில் அவர்களை அடியுங்கள். நீங்கள் நல்ல முறையில் உணவும் உடையும் உங்கள் மனைவியருக்கு வழங்க வேண்டும். இது நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். நூல்: முஸ்ம் 2137 பெண்களிடம் நன்மைகளைப் போதியுங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக (இருக்கிறார்கள்). இ(ல்லறத்)தைத் தவிர வேறு எதையும் நீங்கள் உரிமையாகப் பெறவில்லை. அவர்கள் தெளிவான மானக் கேட்டைச் செய்தாலே தவிர! அவர்கள் அவ்வாறு செய்தால் படுக்கையிருந்து ஒதுக்குங்கள் காயமின்றி அடியுங்கள் அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் வேறு எந்த வழியிலும் அவர்களிடம் வரம்பு மீறாதீர்கள். நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமை உங்கள் மீது இருக்கின்றது. உங்கள் மனைவியர் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உண்டு. உங்கள் மனைவியர் உங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நீங்கள் வெறுக்கும் வகையில் அடுத்தவர்களுடன் உங்கள் படுக்கைகளைப் பகிர்ந்து விடக் கூடாது உங்களுக்குப் பிடிக்காதவர்களை உங்கள் வீடுகளில் அனுமதிக்கக்கூடாது. அறிந்து கொள்ளுங்கள்! அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உடைகளிலும் உணவிலும் தாராளமான முறையில் நடந்து கொள்வதே நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்யும் கடமையாகும். நூல்கள்: திர்மிதீ 1083 3012. இப்னுமாஜா 1841 கணவனின் அனுமதியின்றி தன் கணவன் வீட்டில் எதையும் ஒரு பெண் செலவு செய்யக் கூடாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.உணவும் அப்படித் தானா?'' என்று கேட்கப்பட்ட போது அது தான் பொருட்களில் மிகச்சிறந்தது'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) நூல்: திர்மிதீ 606 நிறைவான முஃமின் எவரது நாவு கையின் தொல்லைகளிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகின்றார்களோ அவரே முஸ்லிம் ஆவார். நூல்கள்: பஸ்ஸார் 2435 தப்ரானீ 3444 பாகம்: 3 பக்: 293 மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் அபயம் அளிப்பவரே முஃமின். நூல்கள்: பஸ்ஸார் 2435 இப்னு ஹிப்பான் 4862 பாகம்:11 பக்:203 குற்றங்களையும் தவறுகளையும் விட்டு ஒதுங்கிக் கொள்பவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார். நூல்: இப்னு ஹிப்பான் 4862 பாகம்:11 பக்:203 அல்லாஹ்வுக்குக் கட்டுப் படுவதில் தனது உள்ளத்துடன் போராடியவரே தியாகி (ஷஹீத்) ஆவார். நூல்கள்: நூல்: இப்னு ஹிப்பான் 4862 பாகம்:11 பக்:203 உங்களுடைய இறைவனை அஞ்சுங்கள். உங்கள் ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுங்கள். உங்கள் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள். உங்களின் பொருட்களில் ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்களில் அதிகாரம் உடையவருக்குக் கட்டுப்படுங்கள். உங்களது இறைவனின் சுவனத்தில் நீங்கள் நுழைந்து விடுவீர்கள். நூல்கள்: திர்மிதீ 559 அஹ்மத் 21140 ஹாகிம் 19 பைஹகீ அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காதீர்கள் அல்லாஹ் கண்ணியப்படுத்திய உயிரை நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள் திருடாதீர்கள் விபச்சாரம் செய்யாதீர்கள். நூல்கள்: அஹ்மத் 18219 ஹாகிம் 8033 பைஹகீ 15620 சிறுசிறு வணக்கங்க்களில் அலட்ச்சியம் உங்களுடைய பூமியில் தான் வணங்கப்படுவதை விட்டும் ஷைத்தான் நிராசையாகி விட்டான். ஆயினும் அதைத் தவிர நீங்கள் சாதாரணமாகக் கருதி (விட்டு) விடும் உங்கள் வணக்கங்களில் தான் வழிபடப்படுவதை அவன் பொருந்திக் கொண்டான். (எனவே சிறிய அமல்களை விட்டு விடாமல் கவனமாக இருங்கள்) நூல்: ஹாகிம் 318 பாகம்: 1 பக்: 171 அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய இந்த ஊர்களில் ஒரு போதும் தான் வணங்கப்பட மாட்டோம் என்று ஷைத்தான் நிராசையடைந்து விட்டான். எனினும் நீங்கள் கேவலமாகக் கருதும் அமல்கள் மூலம் அவனுக்கு ஒரு வழிபாடு உருவாகும். அதன் மூலம் அவன் திருப்தியடைவான். அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் நூல்: திர்மிதீ 2085 தஜ்ஜ்ஜால் பற்றிய எச்ச்சரிகை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி அல் மஸீஹுத் தஜ்ஜாலைப் பற்றிக் கூறத் தொடங்கினார்கள். நீண்ட நேரம் அவனைப் பற்றியே கூறினார்கள். அப்போது அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றி) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத்தூதர்களும் எச்சரித்தனர். மேலும் (என் சமுதாயமாகிய) உங்களிடையே தான் அவன் (இறுதிக் காலத்தில்) தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும் நிச்சயமாக உங்கள் இறைவன் உங்களுக்குத் தெரியாதவன் அல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் - இதை மூன்று முறை கூறினார்கள் - உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். (தஜ்ஜால் எனும்) அவனோ வலது கண் குருடானவன். அவனது கண் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 4402 குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்ப்பற்றுதல் உங்க ளிடம் ஒன்றை விட்டுச் செல்கின்றேன். அதை நீங்கள் கடைப்பிடிக்கும் போதெல்லாம் வழி கெடவே மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும். நூல்: முஸ்ம் 2137 ஒன்றை நான் உங்களிடம் விடுகின்றேன். அதைப் பற்றிப் பிடிக்கின்ற வரை ஒருபோதும் நீங்கள் வழிகெட மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமும் அவனது நபியின் வழிமுறையுமாகும். நூல்: ஹாகிம் 318 பாகம்: 1 பக்கம்: 171 அழைப்புப் பணியின் அவசியம் ; இங்கு வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியை எடுத்துக் கூறி விட வேண்டும். ஏனெனில் வருகை தந்திருப்பவர் தன்னை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அந்தச் செய்தியை எடுத்துச் சொல் விடக் கூடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ர) நூல்: புகாரி 67 |
Digital Time and Date
Welcome Note
Friday, May 25, 2012
இறுதி நபியின் இறுதி பேருரை வரலாற்றுச் சிறப்புமிகக நிகழ்வு
அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

அழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இருவருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆண்களின் தலைமுறையையே அஸ்தமிக்கச் செய்யும் தன்மை கொண்டுள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
பக்க விளைவு மருந்துகள்
தலைமுடி குறித்த கவலை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அதிகம் இருக்கிறது. கவலை, மன அழுத்தம், ரசாயன கலவைகொண்ட ஷாம்பு, சோப்பு பயன்படுத்துவது, மாசடைந்த சுற்றுச் சூழல் போன்றவைகளினால் இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்களின் தலைமுடி உதிர்ந்து வழுக்கைத் தலையாக மாறிவருகிறது. வழுக்கையாக இருந்தால் திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்படுமோ? பெண்ணுக்கு பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே அநேகம்பேர் தவிக்கின்றனர். முடி உதிராமல் தடுக்கவும், தலைமுடி நன்றாக வளரவும் ரசாயனக் கலவைகள் அடங்கிய எண்ணெய்களையோ, கிரீம்களையே வாங்கி உபயோகிக்கின்றனர். ஒரு சிலர் மாத்திரைகளையும் உட்கொள்கின்றனர். அழகை அதிகரிக்க அவர்கள் உபயோகிக்கும் அந்த மருந்துகளில் தான் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்பது அநேகம் பேருக்கு தெரிவதில்லை.
அமெரிக்காவிலும், பிரான்ஸ் நாட்டிலும் தலைமுடி வளர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்பட்ட புரோபேஷியா என்ற மருந்து ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.
ஹார்மோன் பாதிப்பு
பிரான்ஸ் நாட்டில் மட்டும் 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி பல மாதங்களுக்குப்பின்னர் அவர்களை சோதனை செய்தபோது அந்த ஆண்களுக்கு ஆண்மைகுறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.
இதற்கு காரணம் புரோபேஷியாவில் உள்ள பினஸ்டிரைடு (Finasteride) என்ற பொருள் டெஸ்ட்ரோஜன் என்ற ஆண்மைச் சுரப்பினைத் தடுப்பதுதான் என்று புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் கூறியுள்ளார்.
ஆண்களுக்கு ஆபத்து
புரோபேஷியா மருந்தினை உபயோகிப்பதன் மூலம் எழுச்சி நிலை குறைதல், தாம்பத்ய உறவின் போது உற்சாகம் இழத்தல், இயலாமை உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மருந்தினை உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் அமெரிக்கா, ப்ரான்ஸ் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டின் சுகாதார உற்பத்தி பாதுகாப்பு அமைப்பின் தலைவரான டொமினிக் மாரஞ்சி கூறியதாவது, புரோபேஷியா மருந்தின் அளவைக் குறைத்துப் பயன்படுத்தலாம், அவ்வாறு நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் 3 சதவீதம் தான் இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.
நம் ஊரிலும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிராமல் தடுக்கவும் இந்த எண்ணெயை பூசுங்கள், இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என தினசரி விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே எந்த மருந்தில் என்ன பக்கவிளைவு உள்ளது என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையெனில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்

பாம்பு கடித்துச் சிகிச்சை செய்ய தாமதமாகி கடிப்பட்டவன் மயங்கி விழுவதுண்டு. உயிரும் போய்விட நேரிடும். இந்நிலையில் கண்கள் மேல் நோக்கி இருக்குமானால் உயிர் போக கூடிய நிலையில் இருக்கிறார்கள் என அறியவும். கண்களானவை பக்கங்கள் நோக்கி இறங்குமானால் உயிரானது பக்கங்களில் ஒடுங்கி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் கண்கள் கீழ் நோக்கி இருக்குமானால் உயிருக்கு கொஞ்ச நேரத்திற்கு ஆபத்து இல்லை என அறியலாம்.
விஷப்பரீச்சை
விசத்தினால் பாதிக்கப்பட்டு பேச்சு - மூச்சில்லாமல் இருப்பவனை உயிர்ப்பரீட்சை செய்து பார்ப்பது எப்படி.
கடிப்பட்டவர்களின் உடலில் பிரம்பு கொண்டு அடிக்கும் போது உடல் தடித்துவிட்டால் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சை செய்யலாம். மேலும் சுத்தமான குளிர்ந்த நீரை பாம்பு கடித்தவர்களின் மேல் கொட்டும் போது உடம்பு குளிர்ச்சியடைந்து ரோமம் சிலிர்த்தால் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சையை தொடரலாம்.
தலைமயிரைப் பற்றி இழுத்தால் வலியுடன் அசைவு ஏற்பட்டாலும் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சை செய்யலாம். தும்பை இலை - 10 கிராம். அகத்தி இலை - 10 கிராம். முருங்கை இலை - 10 கிராம். பெருங்காயம் - 10 கிராம். வசம்பு - 10 கிராம். உள்ளி - 10 கிராம். மிளகு -10 கிராம். இவைகளைத் தட்டி மூக்கிலும் காதிலும் விட உணர்வு வருவதுடன் விஷம் இறங்கும்.
வெற்றிலை - 10 கிராம். தும்பை இலை - 10 கிராம். அகத்தி இலை - 10 கிராம். பெருங்காயம் - 10 கிராம். வசம்பு - 10 கிராம். மிளகு - 10 கிராம். இவற்றுடன் சிறு குழந்தை சிறுநீர் விட்டு தட்டிப்பிழிந்து சாறு எடுத்து காதிலும் மூக்கிலும் நசியம் செய்ய விஷம் நீங்கும்.
தலை ரோமத்தைக் கருக்கி பசு வெண்ணெயில் குழப்பி கடித்த இடத்தில் நன்றாகத் தடவவேண்டும்.
மேலும் அம்மாம் பச்சரிசி - 10 கிராம்
தக்காளி வேர் - 10 கிராம்
நாயுருவி வேர் - 10 கிராம்
இவைகளைச் சிறுநீர் விட்டரைத்துக் கடிவாயில் பூசி வர விஷம் அறவே நீங்கும். அவதி அகலும்.
ஆடு தீண்டாப்பாளை வேர் - 30 கிராம்
கவுதும்பை வேர் - 30 கிராம்
வெள்ளெருக்கு வேர் - 30 கிராம்
மருக்காரை வேர் - 30 கிராம்
இவற்றைச் சிறுநீரில் ஊறவைத்து அரைத்து கடிவாயில் பூசி வர விஷம் நீங்கும்.
வசம்பு, வெள்ளைப்பூண்டு, நல்லதாளி, நிலப்பனங்கிழங்கு,திப்பிலி, வெள்ளைக் காக்கண வேர்ப்பட்டை இவை சம அளவு எடுத்து, குப்பைமேனி சாற்றில் அரைத்துக் கொள்ளவும். கழற்சிக்காயளவு உள்ளுக்குக் கொடுக்கவும். அதனையே மேலே தடவவும்.
நாள்பட்ட விஷத்திற்கு மருந்து
வெள்ளெருக்கன் வேர் - 20 கிராம்
சிறியா நங்கை வேர் - 20 கிராம்
வெள்ளைக் காக்கணம் வேர் - 20 கிராம்
நன்றாக அரைத்து 50 கிராம் நல்ல வெல்லத்துடன் சேர்த்து அரைத்து, 3 பாகமாக்கி 3 வேளை தினசரி சாப்பிடவேண்டும். குருவை அரிசிச் சாதம், புளியற்ற ரசம் (மிளகு ரசம்) சாப்பிடலாம். 3 நாள் 9 வேளை மருந்தில் நாள்பட்ட விஷம் அறவே நீங்கும்.
By: Iniyavan Thanjai
வயிறு' முன்னே சென்றால், ஆரோக்கியம், பின்னே செல்லும்

உடல் உறுப்புகளில் இதயத்தின் பங்கு முக்கியமானது இந்த இதயத்தை பாதுகாக்க ஆரோக்கியமான வழிமுறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுபவர்களுக்கு இதயநோய் எளிதாக வரும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். மாதத்திற்கு 100 கிலோ மீட்டர் தூரம் நடப்பவர்களுக்கு இதயநோய் வராது என்கின்றனர் மருத்துவர்கள்.
இதய நோய் என்பது மட்டுமல்ல, இதய வால்வுகள் தசை நார்கள் கூட பாதிக்கலாம். நாமெல்லாம் நினைப்பது போல மாரடைப்பு ஒன்றும் புதிய யுகத்தின் புதிய வரவல்ல, கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டு முன்னாலேயே திருமூலர் மாரடைப்பை பற்றி பாடியுள்ளார்.
`வயிறு' முன்னே சென்றால், ஆரோக்கியம், பின்னே செல்லும் என்று ஒரு பழமொழி உண்டு. எனவே வாயைக்கட்டினால், நோயைக் கட்டலாம்' என்பது சித்தர்வாக்கு. எனவே `உண்டியை சுருக்கி', ஆயுள் ரேகையை நீட்டலாம்.
வயிரின் சுற்றளவு ஆண்களுக்கு 90CM பெண்களுக்கு 80cm க்கு மிகாமல் இருக்க வேண்டும்
சாத்வீகமான குணங்கள்
நாம் என்ன உண்ணுகிறோமோ அது நமது உடல் நலம், மனநலம் இரண்டையும் தீர்மானிக்கிறது. பழங்கால காய்கறிகள் போன்றவை நமது உடலைப் பேணுவதுடன் அமைதியான சாத்வீகமான குணங்களை வளர்க்கும்.
இதய நோய்க்கான அஸ்திவாரம் சிறு வயதிலேயே உணரப்படுகிறது. எப்போது குழந்தை தாய் பால் குடிக்க ஆரம்பிக்கிறதோ அன்றே இதயத்தின் ரத்த நாளங்களில் கொழுப்பு படர ஆரம்பித்துவிடுகிறது. ஆரம்பித்து விடுகிறது. எனவே கண்டதையெல்லாம் சாப்பிட்டு எடையை ஏற்றிக் கொண்டால் சிறு வயதிலேயே ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் எல்லாம் `கியூ' வரிசையில் வந்து, மாரடைப்புக்கு அஸ்திவாரம் போட்டுவிடும்.
இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தை முதலே பெற்றோர்களும், பிட்ஸா, மசாலா பண்டங்களை உண்ணக்கொடுத்து குழந்தைகளின் மனம் மற்றும் உடல் நலத்தை கெடுத்துவிடுகின்றனர். அதிக கொழுப்பு உண்ண உணவுகள் ரத்தக் குழாய்களில் படியும் படி செய்து இளம் வயதிலேயே இதய நோய் ஏற்பட வழி வகுக்கிறது.
தொலைகாட்சியும் காரணம்
டி.வியும், கம்ப்யூட்டரும் இன்றைக்கு பெரும்பாலானவர்களின் பொழுது போக்காக உள்ளது. மணிக்கணக்கில் உட்கார்ந்து இருப்பதுதான் உடலுக்கு சரியாக உழைப்பில்லாமல் போய்விடுகிறது. இவற்றிலிருந்து வரும் கதிர் வீச்சு மற்றும் எலக்ட்ரோ ரேடியேஷன் ரத்தக் கொதிப்பை ஏற்படுத்துகிறது.
நூத்துக்கு நூறு
நூறு கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில் ஒரு 100 பேர் கூட 100 வருடம் வாழ்வதில்லை. நூறு வருடம் வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக் கூடாது எனத் தெரிந்து கொள்ள வேண்டும். 100 வயது வாழ முதல்படி, உழைப்பு, உணவுக் கட்டுப்பாடு, குறைந்த பட்சம் 8 மணி நேர உறக்கம் ஆகும். இது தவிர `100' மிகி கீழே சர்க்கரை 100 மி.கிக்கு குறைவாக எல்.டி.எல். கொலஸ்டிரால் என்ற செறிவு கொழுப்பு, 100 மி.மீட்டருக்கு குறைவாக ரத்தக் கொதிப்பு இருக்க வேண்டும். வாரத்திற்கு 100 நிமிடம் நடக்க வேண்டும், மாதத்திற்கு 100 கி.மீ. நடக்க வேண்டும். வாரத்திற்கு 100 நிமிடம் தியானம் செய்து மன அமைதி பெறலாம்.
20 – 20 பார்முலா
அசையாமல் பல மணி நேரம் உட்கார்வது காலில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தம் உறைய வாய்ப்பு தருகிறது. அவர்கள் பிறகு நடக்கும் போது இந்த ரத்தக் கட்டிகள் இதயத்திற்கு பம்ப் செய்யப்பட்டு மாரடைப்பினை விட கொடிய நோயான `பல்மனோ கொலஸ்ட்ரால்' என்ற நோயை ஏற்படுத்தி, நொடியில் மரணத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் இதனைத் தவிர்க்க அவர்கள் 20 -20-20 என்ற பார்முலாவை கடை பிடிக்க வேண்டும். 20 நிமிடத்திற்கு ஒருமுறை எழுந்து 20 அடி நடக்க வேண்டும் கண்களில் கண்ணீர் வற்றாமல் இருக்க, விழித்திரையை பாதுகாக்க 20 முறை தூரத்தில் கிட்டத்தில் பார்வையை செலுத்த வேண்டும். 20 முறை வேண்டும் எண்ணம் நல்லதாக இருக்க வேண்டும். அப்போது இதயம் பாதுகாக்கப்படும்.
இன்று மது, போதை என இளைஞர்கள் சுற்றுவதால் 30 வயதிற்குள் மாறிவரும் கலாச்சாரத்தால் பெற்றோர்கள் இறக்கும் முன்பே 20-30 வயது இளைஞர்கள் இறந்து போவது இனியொன்றும் பெரிய அதிசயமாக இருக்காது. வருமுன் காப்பதே சிறப்பு என்பதை நாம் உணர்த்த வேண்டும். இல்லையெனில் லப்டப் என்ற இதய சங்கீதம் `ரம்' `தம்' என மாறி மனிதனின் வாழ்க்கை அபஸ்வரமாக மாறி விடும்.
வாழ்வில் மிகவும் மனதை மயக்கும் விஷயங்கள் அறிவை மயக்கி அழிவிற்கு அச்சாரம் போட்டு விடும். உண்மையான நன்மையான `வானவில்' வண்ணமயமான பழங்கள் காய்கறிகள், ஆகியவையாகும், கண்ட கண்ட உணவுகளை ஒதுக்கி கனிகள் உண்டால் அதிலுள்ள புரோட்டின் உடலில் வயோதிகத்தை தடுத்து இருதய நோய் மற்றும் புற்று நோயிலிருந்து காப்பாற்றும்.
Thursday, May 24, 2012
▂ ▃ ▅ ▆ █ பேரிக்காயும் அதன் நன்மைகளும்.... █ ▆ ▅ ▃ ▂

▂ ▃ ▅ ▆ █ பேரிக்காயும் அதன் நன்மைகளும்.... █ ▆ ▅ ▃ ▂ (¯`•¸•´¯) Nutrition Facts of Pear Fruit(¯`•¸•´¯) இது உங்களுக்கு பிடித்திருந்தால் முடிந்தவரை மற்றவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் பிறருக்கும் உதுவுங்கள் If u Agree With this Post Share to known others Also பேரிக்காயும் அதன் நன்மைகளும்.........! விளையக்கூடியது. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு: வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள். இதயப் படபடப்பு நீங்க: இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு: கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து. தாய்ப்பால் சுரக்க: பிறந்த இளம் குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்போது தாய்ப்பால் கொடுப்பது குறைந்து வருகிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். வாய்ப்புண் குணமாக: வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும். வயிற்றுப் போக்கு: உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும். சிறுநீரக கல்லடைப்பு நீங்க: இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது. * உடல் சூட்டைத் தணிக்கும். * கண்கள் ஒளிபெறும். * நரம்புகள் புத்துணர்வடையும். * தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும். * குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும். பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் உண்டு அதன் மருத்துவப் பயன்களை முழுமையாகப் பெறுவோம். Nutrition Facts of Pear Fruit : Pear is a very delicious fruit that is quite closely related to apples and quinces. The skin of the fruit can be yellow, green, brown or red in color, or even a combination of two or more of these colors. The inside flesh, on the other hand, is white to cream-colored and is very juicy and sweet. The flesh surrounds a core that comprises of seeds. Pears have a large, round bottom, which narrows down as we move towards its topmost portion. The fruit comes in large number of varieties, differing in terms of size, shape, color, taste and storage qualities. In the following lines, we have provided health and nutrition benefits of pears. Nutritional Value of Pears Given below is the amount of nutrients in 100 gm of pears: Carbohydrates - 15.46 g Sugars - 9.80 g Dietary fiber - 3.1 g Protein - 0.38 g Thiamin (Vitamin B1) - 0.012 mg Riboflavin (Vitamin B2) - 0.025 mg Niacin (Vitamin B3) - 0.157 mg Pantothenic acid (Vitamin B5) - 0.048 mg Vitamin B6 - 0.028 mg Folate (Vitamin B9) - 7 μg Vitamin C - 4.2 mg Calcium - 9 mg Iron - 0.17 mg Magnesium - 7 mg Phosphorus - 11 mg Potassium - 119 mg Zinc - 0.10 mg Health & Nutrition Benefits of Eating Pears Being rich in vitamin C, pears have antioxidant properties and are said to protect body cells from oxygen-related damage caused by free radicals. The presence of fiber in pears helps prevent constipation and also ensures regularity of bowel movement. Studies have revealed that eating pears help protect women against postmenopausal breast cancer. Pear is described as a hypoallergenic fruit that is less likely to produce an adverse response than other fruits. Regular consumption of pears might lower the risk of age-related macular degeneration, the main cause of vision loss in older adults. It has been seen that pears help lower blood pressure and also reduce the chances of a stroke. The high content of pectin in pears makes them useful in lowering of cholesterol levels. Pears have been found to be good for colon health. Pear juice, being rich in fructose and glucose, serves as a very quick source of energy. Drinking a glass of pear juice is believed to be helpful in bringing down fever. The antioxidant properties of pears make them good for strengthening of the immune system. Consumption of pear juice helps relieve pain in various inflammatory conditions. The presence of boron in pears helps the body retain calcium and thus, reduces the risk of osteoporosis. The foliate in pear prevents neural tube defects in infants. Health benefits of pears Pear fruit is packed with health benefiting nutrients such as dietary fiber, anti-oxidants, minerals and vitamins which are necessary for optimum health. Pears provide about 3.1 g of dietary fiber per 100g. Regular eating of pears may offer protection against colon cancer. Most of the fiber is non soluble polysaccharide (NSP), making them a good bulk laxative. Also, the gritty fiber content binds to cancer causing toxins and chemicals in the colon, protecting its mucous membrane from contact with these compounds. In addition, pear fruit is one of the very low calorie fruits, just provides 58 cal per 100g. Just a few sections a day in the diet can bring significant reduction in weight and blood LDL cholesterol levels. It contains good quantities of vitamin C. Fresh fruits provide about 7% of RDA per 100 g. They are rich in antioxidant flavonoids phyto-nutrients such as beta carotene, lutein and zea-xanthins. These compounds along with vitamin C and A help body protect from harmful free radicals. The fruit is a good source of minerals such as copper, iron, potassium, manganese and magnesium as well as B-complex vitamins such as folates, riboflavin and pyridoxine (vitamin B-6). Although not well documented, pears are among the least allergenic of all fruits and are therefore recommended by health practitioners as safe alternative in the preparation of food products for allergy sufferers. Pears have suggested being useful in treating colitis, chronic gallbladder disorders, arthritis and gout. ★ ✩ ✮ ✯ பேரிக்காயும் அதன் நன்மைகளும்.... ✯ ✮ ✩ ★ (¯`•¸•´¯) Nutrition Facts of Pear Fruit(¯`•¸•´¯) இது உங்களுக்கு பிடித்திருந்தால் முடிந்தவரை மற்றவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் பிறருக்கும் உதுவுங்கள் If u Agree With this Post Share to known others Also
Subscribe to:
Posts (Atom)
