Digital Time and Date

Welcome Note

Monday, January 7, 2013

புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா...

புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா...

அல்லாஹ் இவ்விறை இல்லத்தை கட்டப் பணித்த போது கிஸ்வாவைப்பற்றி ஏதும் குறிபபிடவில்லை எனினும் பண்டை காலம் தொட்டே கிஸ்வா போர்த்துவதை ஒரு வைபவமாகப் பல அரசர்களும் நடத்தி வந்ததாக வரலாற்றிலே காண முடிகிறது. கிஸ்வாவைப்பற்றி சில தகவல்களை தொகுத்துத் தருகிறார். கடடுரை ஆசிரியர் டாக்டர் பாக்கவி அவர்கள்.

முதல் கிஸ்வா

1. கி.பி 400-ல் யமன் நாட்டை ஆண்ட ஹுமைரி மன்னன் மக்கா வந்த போது அங்குள்ள மக்கள் அவரை சரிவர மரியாதை செலுத்தாததால் கஃபாவை இடித்துத்தள்ள எண்ணிய சமயம் கடுமையான நோய்க்குள்ளானார். அறிஞர்கள் பலரின் ஆலோசனையின் பேரில் உம்ரா செய்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்க நோய் நீங்கப் பெற்றார். பின்னர் கண்ட கனவின் பலனாக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் பொருட்டு கிஸ்வாவை போர்த்தியதாக ஆதாரங்கள் உள்ளன. இந்த கிஸ்வா உலர்ந்த பனை ஓலையாலும் நூலாலும் நெய்யப்பட்டதாக இருந்ததாம்.
2. பெருமானார்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு செய்த ஹஜ்ஜின் போது யமன் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினார்கள்.
3. கலீபா உமர்(ரலி) அவர்கள் கி.பி 634-ல் (ஹிஜ்ரி 13) எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினாhகள்.

4. கலீபா உத்மான்(ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் ரமளான் பிறை 27-லும் துல்ஹஜ் மாதம் ஹஜ்ஜுக்கு முன்னரும் இருமுறை கிஸ்வா அணிவிக்கப்பட்டது.

5. கலீபா முஆவியா(ரலி)யின் காலத்தில் முஹர்ரம் 10-ம் நாள் அன்று பட்டுத்துணியாலும் ரமலான் கடைசியில் கபாத்தி என்ற கட்டித் துணியாலும் போர்த்தினார்கள்.

6. இவர் காலத்தில் தான் ”லாயிலாஹ இல்லல்லாஹ்” ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை’ என்ற அரபி வாக்கியம் பொறித்த கிஸ்வாக்கள் பயன்படுத்தப்பட்டன.

7. காலப் போக்கில் ஒரு முறை அணிவித்த கிஸ்வாவை அகற்றாமலேயே அதன் மீது மீண்டும் கிஸ்வாவை அணிவித்து வந்தனர். இதனால் கஃபாவின் மீது பெருத்த பளு சேரவே ஹிஜ்ரி 160-ல் (கி.பி.775) கலீபா அல்மஹ்தீ அல் அப்பாஸி பழைய கிஸ்வாக்களை அகற்றிவிடப் பணித்தார்.

சிகப்பு, பச்சை,வெள்ளை கிஸ்வாக்கள்

8. சிகப்பு, பச்சை, வெள்ளை ஆகிய நிறங்களில் தான் ஆரம்ப காலங்களில் கிஸ்வாக்கள் போர்த்தப்பட்டு வந்தன்.

கறுப்பு நிற கிஸ்வா

கலீபா அல் நாஸிருல் அப்பாஸி காலத்தில் தான் (ஹிஜ்ரி 575 – கி.பி.1179) முதன் முதலில் கறுப்புநிறம் பயன்படுத்தப்பட்டது. அதுவே இன்று வரை தொடர்கிறது.
9. கி.பி.1342 – ஹிஜ்ரி 743 ல் எகிப்தை ஆண்ட சுல்தான் கலாவூன் கிஸ்வா தயாரிப்பிற்காகவும் கஃபாவின் பராமரிப்புக்காகவும் எகிப்து நாட்டு மூன்று விவசாய கிராமங்களின் வருமானத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
10. சுல்தான் கலாவூன் ஆட்சிக்கு 300 ஆண்டுகட்கு பிறகு வந்த உத்மானிய சுல்தான் சுலைமான் மேலும் ஏழு கிராமங்களின் வருமானங்களை வழங்கினார். கஃபாவுடன் மதீனா ரௌலா ஷரீபும் பராமரிப்பில் சேர்க்கப்பட்டது.
11. பல நூறு ஆண்டுகளாக கிஸ்வாக்கள் எகிப்திலிருந்து மக்காவிற்கு கொண்டு வரப்பட்டன. இவைகளை கொண்டுவர 15-க்கு மேற்பட்ட ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன.

‘மஹ்மல்’ என்று அழைக்கப்படும் அழகிய பல்லாக்குகளை ஒட்டகங்கள் மேல் வைத்து அவைகளில் கிஸ்வாவின் பகுதிகளை கொண்டு வருவர்.
12. இந்த ஊர்வலம் புறப்படும் போது எகிப்தே விழாக்கோலம் பூணும், அது மக்கா வந்தடைந்ததும் இசைத் தாளங்களுடன் ஆடிப்பாடி மக்கா வாசிகள் அந்த ஒட்டகங்களை வரவேற்பர்.
13. ஹிஜ்ரி 843 – (கி.பி 1924) ல் மன்னர் அப்துல் அஸீஸ் இப்ன் ஸவூது இப்படி ஆடிப்பாடி கிஸ்வாவை கொண்டுவரும் நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு முரணாகயிருப்பதைக் கண்டித்ததால் மீனாவில் வைத்து எகிப்தியர்களுடன் மோதல் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு முதல் கிஸ்வாவை எகிப்து அனுப்புவதை நிறுத்திக் கொண்டது.

சவூதியில் கிஸ்வா தயாரிப்பு

14. அவ்வாண்டே மன்னர் அப்துல் அஸீஸ் இந்தியாவிலிருந்து கை தேர்ந்த தொழிலாளிகளை கொண்டு வந்து கிஸ்வா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார்.

15. 1927 –ல் (ஹிஜ்ரி 1346) இறுதியில் சவூதி தொழிற்சாலையில் தயாரிக்கப்;பட்ட கிஸ்வா போர்த்தப்பட்டது. இது பத்து ஆண்டுகள் தொடர்ந்தது.

16. 1950-ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு பின்பு எகிப்து மீண்டும் கிஸ்வாவை அனுப்பும் உரிமையப் பெற்றது. இது 1962 வரை தொடாந்தது.

17. அதன் பின்னர் மன்னர் ஸவூது பின் அப்துல் அஸீஸ் ஆட்சியில் மீண்டும் கிஸ்வாவை மக்காவிலேயே தயாரிக்கத் தொடங்கினார்.

18. சுமார் 240 சவூதி கைவினைஞர்கள் பணிபுரியும் இந்த தொழிற்சாலை பிற பள்ளி வாசல்களில் விரிக்க பயன்படும் விரிப்புகளையும் தயாரித்து வருகிறது.

19. கிஸ்வாவை தயாரிக்க 670 கிலோ தூய வெள்ளைப்பட்டு நூல் பயன்படுத்தப்படுகிறது. இந்நூலுக்குப் பின்னர் உயர்தர கறுப்புச் சாயம் பூசுகின்றனர்.

650 சதுர மீட்டர்

20. ஒரு கிஸ்வா 47 பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் 14 மீட்டர் நீளமும் 95 செ.மீ அகலமும் கொண்டது. அதன் மொத்த பரப்பு 650 சதுரமீட்டர்.

10 கோடி செலவில் கிஸவா (120 கிலோ தங்கமும் வெள்ளியும்)

21. 120 கிலோ தங்கமும் வெள்ளியும் (1க்கு 4 விகிதத்தில்) கலந்த இழைகளால் திருகுர்ஆன் வசனங்கள் மிக நுட்பமான முறையில் பின்னப் படுகின்றன. கிஸ்வா தயாரிக்க ஆகும் மொத்தச் செலவு 170 லட்சம் ரியால்கள் (சுமார் 10 கோடி ருபாய்)

தங்கத்தில் கதவு

22. கஃபாவின் கதவுகள் தரைமட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளன. இவை தங்கத்தினால் செய்யப்பட்டவை. இந்த வாயிற் பகுதியை மறைக்கும் திரை (7.5 ஒ 4 மீட்டர்) அளவுடையது. அதுவும் சிறந்த வேலைப்பாடுகளால் ஆனவை. கஃபாவின் உள்ளே செல்ல நகரும் ஏணிப்படிகளை பயன்படுத்துகின்றனர்.

23. கஃபாவின் உட்சுவர்களையும் அதன் கூரைப் பகுதிகளையும் பச்சை நிற பட்டுத் துணியால் அலங்கரிக்கின்றனர். அவைகளிலும் திருக்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்படுகின்றன.

24. ஒவ்வொரு ஆண்டும் ஷாபான் மாத்திலும், துல்ஹஜ்ஜு மாதத்திலும் கஃபாவின் உட்தளம் சந்தனத்தாலும், உயர்ரக வாசனைத் திரவியங் களாலும் கழுகப்படும். உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாமியப் பிரதி நிதிகளும் தலைவர்களும் பங்கேற்று கழுக வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

புதிய கிஸ்வாக்கள்

25. ஹஜ்ஜுக்கு முன்பாக கழுகும்போது புதிய கிஸ்வா அணிவிக்கப்படும்.

26. பழைய கிஸ்வா பல சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு முஸ்லிம் பிரதிநிதிகள், இஸ்லாமிய கலாசாலைகள், தொல் பொருட்காட்சியங் களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்படுகிறது.

UNO வில் கிஸ்வாவின் ஒரு புகுதி

27. கஃபாவின் வாசல் திரையினைப் போன்ற வேலைப்பாடுகள் அமைந்த (9 ஒ 2.5 மீட்டர்); அளவுடைய திரைச் சீலையை 1983-ம் ஆண்டு சவூதி மன்னர் ஃபஹ்து உலக முஸ்லிம்கள் சார்பில் அமெரிக்காவில் உள்ள உலக நாடுகள் மன்றத்து (UNO) வரவேற்பு அறையில் தொங்விட அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்.

Dr. Ahmad Baqavi Ph.D.

இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!




பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணம் என்ன என்று நாங்கள் ஓட்டெடுப்பு நடத்தினோம்..ஓட்டளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றிகள். அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடை தான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார்கள் .பார்க்கும் ஆண்களை சபலபடவைக்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுற்றமாக்கு நாடு தானாகவே சுற்றமாகும்

அப்படி அரை குறை ஆடை அணிவது நம் சகோதரியாக கூட இருக்கலாம் நாம் பிள்ளைகளாக கூட இருக்கலாம் . முதலில் அவர்களுக்கு வீட்டில் ஒழுக்க நெறிகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலையா கடமை இருக்கிறது . வீட்டில் தந்தை அண்ணன் ,தம்பி , மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இருக்கிறார்கள் அவர்களை மீறி எந்த பெண்ணும் அரை குறை ஆடை அணிவது இல்லை முதலில் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொஞ்சம் ஆபாசமாக தெரிந்தால் கண்டிப்பாக கண்டிப்பது நமது கடமை .அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரை குறையாக ஆடை அணியவைத்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும் ,படத்திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இருக்கிறார்கள் அவர்களை பார்க்கும் போது தான் அரை குறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர்களின் தாய் தந்தை சகோதர்கள் மீது தான் தவறு என்று தெள்ள தெளிவாக தெரிகிறது . இவர்கள் தன்னுடைய சகோதிரிகளை அரை குறை ஆடை அணியவைத்து எப்படி அழைத்து வருகிறார்கள் என்று தெரியவில்லை ?உண்மையில் சிந்திக்க வேண்டிய விசையம் தான்

நம் தமிழ் நாட்டில் இன்று தாவணி என்று சொல்லுவார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொண்டு இருக்கிறது . இன்று நிறைய சகோதரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல்லுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வது என்பது தான் வாழ்க்கை .

பெண்கள் அரைகுறை ஆடை ,இறைவனின் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படைப்பு ,இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொருளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌனம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம் !

இன்று இந்தியாவில் பெண்களின் நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகாது ! இதிலிருந்து உடை கட்டுபாடும் இது போன்ற குற்றங்களை தடுபதற்கான ஒரு வழி என்பது நிதர்சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இயற்ற பட்டது பெண்களின் மீது acid உற்றினால் 3 லட்சம் அபரதாமம் ! என்ன ஒரு கடுமையான சட்டம் ,இந்த சட்டத்தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும்.. பெண்கள் கற்பழிக்க படுவதக்க்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள்ள முடியாது .

இன்று நாம் தொலை காட்சிகளில் நாம் குடும்பத்தோடு பார்க்க முடிகிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைகளோடு தொலை காட்சியே பார்க்க முடியவில்லை இன்று சாதாரண விளம்பரத்தில் கூட ஆபாசம் தொலைகட்சியே திறந்தாலே ஆபாசமாக தான் இருக்கிறது . கிரிக்கெட் ஐ .பி .எள் . விளையாட்டிலும் கூட ஆபாசம் தேவை படுகிறது. பெண்களை போதை பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது .உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டு தான் இருக்கிறது இவர்களை தண்டிக்க எப்படி பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடுமையான சட்டங்கள் வராதவரை இது போன்ற அனச்சாரங்களுக்கு முடிவிற்கே வராது..

தகவல்:- விழித்திரு தமிழா

தாஜ்மஹால் காதலின் சின்னமா.....?

இன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற்றிய வரலாற்றுத் தகவல்களை நாம் அறிந்துவைத்திருப்பது என்பது மிக மிக குறைவாகவே இருக்கிறது.
இந்த வரலாற்று தகவல்களை நோக்கும் போது தாஜ்மஹால் காதலின் சின்னமாக இருப்பதற்கு தகுதியானதா..? என எம் உள்ளத்தினில் வினா எழுப்பத் தோன்றுகிறது.

ஆகவே தான் தாஜ்மாஹால் தொடர்பாக நான் ரசித்த ஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

முதலில் இந்த தகவலை எனக்கு தந்துதவிய நண்பன் K R VIJAYAN அவர்களுக்கும் . அதே போன்று இந்த தகவலுக்கு சொந்தக்காரராக விளங்கும் RAMAKIRISHNAN (TAFAREG) அவர்களுக்கும் இவ்விடத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மொகலாய வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட பெண் மும்தாஜ். உலகெங்கும் தாஜ்மகாலின் வழியாக நினைவுகொள்ளப்படுகிறார். ஆனால், பேசப்படப்படாமல் போன முக்கியமான இரண்டு பெண்கள் இருக்கின்றனர். ஒருவர்... ஷாஜகானின் மூத்த மகளும், திருமணம் செய்துகொள்ளாமல் அரசாட்சியில் மன்னருக்குத் துணை நின்றவளும், மிகச் சிறந்த படிப்பாளியும், சூபி ஞான நெறியைப் பின்பற்றியவளுமான ஜஹானாரா பேகம். இன்னொருவர்... ஒளரங்கசீப்பின் மகளும் மெய்யியல் கவிஞருமான ஜெப்உன்நிசா. இந்த இரண்டு பெண்களும் சரித்திர வானில் தனித்து ஒளிரும் இரட்டை நட்சத்திரங்கள்.

இன்று, தாஜ்மகாலைப் பார்க்கப் போகிறவர்களில் அதிகமானவர்களுக்கு மும்தாஜின் இயற்பெயர் அர்சுமந்த் பானு பேகம், அவள் 13 குழந்தைகளின் தாய், தனது 14-வது பிரசவத்தில் இறந்து போனாள் என்பது தெரியும்? 14 பிள்ளைகளைப் பெற்ற மும்தாஜின் நினைவாக, தாஜ்மகால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால், அதைத் தாய்மையின் சின்னம் என்றோ, சிறந்த மனைவியின் நினைவுச் சின்னம் என்றுதானே நியாயமாக அழைக்க வேண்டும்?

ஜஹானாரா பேகம், குரால்னிசா, தாரா ஷகோ, முகமது சுல்தான்ஷா, ரோஷனாரா, ஒளரங்கசீப், உமித்பக்ஷி, சுரையா பானு, சுல்தான் முராத், கௌஹரா எனும் மும்தாஜின் பிள்ளைகள் பெயர்கள்கூட தாஜ்மகாலுக்குள் போகிறவர்களுக்குத் தெரியாது என்பதுதானே நிஜம்.

காதலின் சின்னமாக திகலும் தாஜ்மஹாலை ஷாஜகான் தன் மூன்றாவது மனைவியான மும்தாஜுக்கே கட்டினார் என்பது எம்மில் பலருக்குத் தெரியாது. 1612-ம் ஆண்டு மே 10-ம் தேதி இவர்களது திருமணம் நடந்தது. அப்போது, மும்தாஜுக்கு வயது 19. மும்தாஜ் இறந்துபோனது 1631 ஜுன் 17-ம் தேதி. அப்போது அவளுக்கு வயது 38. அதாவது, 19 வருஷ இல்லறத்தில் 14 குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள். தொடர் பிரசவங்களால் உடல்நலிவுற்றுத்தான் இறந்துபோனாள்.

பிரசவ வலியில் அவள் விட்ட கண்ணீரும் வேதனைக் குரலும் தாஜ்மகாலுக்குள் கேட்கக்கூடுமா என்ன? தனி மனிதர்களின் துயரமும் வலியும் காலத்தின் முன்பு பெரிதாகக் கருதப்படுவதே இல்லை. காலம் எல்லாவற்றையும் உருமாற்றிவிடுகிறது. அவளது மரணத்தின்போது ஜஹானாராவுக்கு வயது 17. மனைவியை இழந்து துக்கத்தில் வாடிய தந்தைக்கு உறுதுணையாக இருந்தாள் ஜஹானாரா. தனிமையிலும் வேதனையிலும் ஷாஜகான் வாடிய காரணத்தால், அரசு நிர்வாகம் செயலற்றுப் போயிருந்தது. அதைச் சரிசெய்யத் தானே அரசு ஆணைகளை பிறப்பிக்கவும், அரசரின் ஆலோசனையின் பெயரில்முக்கிய முடிவுகளை எடுக்கவும் துரிதமாகச் செயல்பட்டாள் ஜஹானாரா.

நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை ஜஹானாராவுக்கு வழங்கினார் ஷாஜஹான். அது அவரது மற்ற இரண்டு மனைவிகளுக்கும், ஜஹானாராவின் சொந்த சகோதரிகளுக்கும்கூடப் பொறாமையை ஏற்படுத்தியது.

தந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுவும், ஒளரங்கசீப்பால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட தந்தைக்குத் தன்னைத் தவிர வேறு துணை இல்லை என்பதால், தன் வாழ்நாளை அப்பாவின் நலனுக்காகவே செலவழித்திருக்கிறாள்.

மும்தாஜ் இறந்த பிறகு ஜஹானாராவுக்கு ஒரு முக்கியக் கடமை இருந்தது. தனது சகோதரன் தாரா ஷகோவுக்கு நதிரா பானுவோடு நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நடத்தியாக வேண்டும். அது, அம்மாவின் இறுதி ஆசை. எனவே, அதைச் செயல்படுத்த தீவிரமாக முயன்றாள்.

தாராவுக்கும் அவளுக்குமான சகோதர பாசம் அளப்பறியது. அவள், தாரா ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினாள். அது, ஒளரங்கசீப்புக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவளை, தனது நாட்குறிப்பில் 'வெள்ளைப் பாம்பு’ என்று குறிப்பிடுகிறார் ஒளரங்கசீப். அந்தக் கோபம் ஜஹானாராவைவிட மூன்று வயது இளைய அவளது தங்கை ரோஷனாவுக்கும் இருந்தது. அவள் நேரடியாக ஜஹானாராவிடமே தனது வெறுப்பைக் காட்டினாள். ஒளரங்கசீப்போடு சேர்ந்துகொண்டு ஜஹானாராவின் பதவியைப் பறிக்கச் சதி வலைகளைப் பின்னினாள்.

ஆனால் மன்னரின் விருப்பத்துக்குரிய மகள் என்பதால், ஜஹானாராவின் அதிகாரத்தை எவராலும் பறிக்க முடியவில்லை. ஷாஜஹான் காலகட்டத்தில் அரசின் ஆண்டு வருவாய் 60 லட்ச ரூபாய். ஆனால், செலவோ ஒரு கோடிக்கும் மேல்! ஆகவே, அந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக ஷாஜஹான் நிறையத் திட்டங்களைத் தீட்டி நாட்டின் வருவாயை ஒன்றரைக் கோடியாக உயர்த்திக் காட்டினார். செலவினத்தை மிகவும் குறைத்தார். இந்தச் செயல்பாடு காரணமாக அரண்மனையிலேயே அவருக்குக் கடுமையான எதிர்ப்பு உருவாகியிருந்தது. அதைச் சமாளிப்பதுதான் ஜஹானாராவின் முக்கியப் பணியாக இருந்தது.

இன்னொரு பக்கம், ஷாஜகானுக்குப் பிறகு அரியணைக்கு யார் வருவது என்பதில் தாராவுக்கும் ஒளரங்கசீப்புக்கும் கடுமையான பகை வளர்ந்திருந்தது. தாரா பலவீனமானவன். அவனால் ஆட்சி செய்ய முடியாது என்று ஒளரங்கசீப் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தனக்கான ஆட்களைத் திரட்டி ஆட்சியைப் பிடிக்கும் ஏற்பாட்டில் இருந்தான். ஆனால், தாராவுக்கே பதவி கிடைக்க வேண்டும் என்று ஜஹானாரா உறுதியாக இருந்தாள். பதவிச் சண்டை குடும்பத்தில் கடும் பூசல்களை உருவாக்கியது.

தாரா, லாகூரின் புகழ்பெற்ற சூபி ஞானியான மையன்மிரின் சீடன். இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையே இணக்கத்தை உருவாக்க, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்காக உபநிஷத்துகளை, பாரசீக மொழியில் தாரா மொழி பெயர்த்து இருக்கிறார். அவரது சிறந்த நூலான மஜ்மஉல்பஹ்ரெயின் எனும் இரண்டு பெருங்கடல்களின் சங்கமம், சூஃபியிசத்துக்கும் இந்து மதக் கோட்பாடுகளுக்குமான பொதுத் தன்மையைப் பேசுகிறது.

ஸர்மத் என்ற ஞானியையும் பின்பற்றினார் தாரா. ஸர்மத் பிறப்பால் ஒரு யூதர். ஆனால், இஸ்லாம் மதத்தைத் தழுவியவர். அத்துடன் ராம லட்சுமணர்களின் பக்தர். அவரது சீடனாகத் தாரா இருப்பதை ஒளரங்கசீப் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை மத விரோதச் செயல் என்று கண்டித்தார். இந்தச் சகோதரச் சண்டைக்கு நடுவில் ஜஹானாரா மாட்டிக்கொண்டு தவித்தாள்.


இப்போது உள்ள 'பழைய தில்லி’ அன்று ஷாஜகானாபாத் என அழைக்கப்பட்டது. அந்த நகரை வடிவமைக்கும்போது ஜஹானாரா ஐந்து முக்கிய இடங்களை தானே முன்னின்று வடிவமைத்துத் தந்தார். அப்படி உருவாக்கப்பட்டதுதான் சாந்தினி சௌக்.


1644 மார்ச் 29-ம் தேதி தாராவின் திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டு இருந்தபோது ஜஹானாராவின் மெல்லிய பட்டு மேலாடையில் தீப்பற்றி அவளது தாடையிலும் பின் கழுத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவளது அழகான முகம் சிதைந்துபோனதை ஷாஜகானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிகிச்சை செய்யப் பல நாட்டு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். ஆனாலும், இளவரசியின் சிதைந்த முகத்தை முன்பு போல பொலிவுறச் செய்ய முடியவில்லை.


நான்கு மாதங்கள் தொடர் சிகிச்சை நடந்தது. இந்த நாட்களில், தனது மகள் நலம்பெற வேண்டும் என்பதற்காக தினமும் 1,000 வெள்ளி நாணயங்களை ஏழைகளுக்கு தானம் அளித்ததோடு, துறவிகளையும் ஞானிகளையும் வரவழைத்து பிரார்த்தனையும் செய்துவந்தார் ஷாஜகான். பல நாட்கள், மகளின் அருகில் அமர்ந்து வேதனையோடு கண்ணீர்விட்டார் என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.


எட்டு மாதத் தொடர் சிகிச்சை நடந்தது. ஈரானிய மருத்துவரின் முயற்சியால் அவள் குணம் அடைந்தாள் என்றும், ஆங்கில மருத்துவர் ஒருவரின் உதவியால் ஜஹானாரா நலமடைந்தாள் என்றும் இரண்டு விதத் தகவல்கள் கூறப்படுகின்றன. இரண்டையுமே உறுதி செய்யும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவள் நலமடைந்த சந்தோஷத்தில், 80,000 ரூபாய் தானத்துக்காகச் செலவிடப்பட்டது என்றும், மாமன்னர் தன் மகளுக்கு 139 அரிய வகை முத்துக்களையும் அரிய வைரம் ஒன்றையும் பரிசளித்தார் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களோடு சூரத் துறைமுகத்தின் வரி வசூல் முழுவதும் அவளது வருவாயின் கீழ் கொண்டு வரப்பட்டது என்றொரு துணைத் தகவலும் காணப் படுகிறது.

ஒரே விதியால் எழுதப்பட்ட இருவர் வாழ்க்கை!

இதைத்தான் பெர்னர் போன்ற ஆய்வாளர்கள் வேறு விதமாகக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, தன் மகளைக் குணப்படுத்திய ஆங்கிலேய மருத்துவருக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக, சூரத் துறைமுகத்தில் வரி இல்லாமல் பொருட்களை வணிகம் செய்துகொள்ளலாம் என்று ஆங்கிலேயர்களுக்கு அனுமதி அளித்தார் மன்னர் ஷாஜஹான். அப்படித்தான் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தனது வணிகத்தை ஸ்தாபிக்கத் தொடங்கியது என்கிறார்கள்.


ஜஹானாரா, தனது தாய் இறந்த பிறகு, அவளது சொத்தில் பாதியை உரிமையாகப் பெற்றிருந்தாள். அந்தப் பணத்தை, டச்சு வணிகர்களுடன் சேர்ந்து கப்பல் வணிகம் செய்தாள் என்றும் மகாஜன் வித்யாதரின் குறிப்பு கூறுகிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஆங்கிலேயருக்கு அவள் வணிகம் செய்ய உதவி இருக்கக்கூடும். மன்னரோடு மாளிகையில் வாழாமல் தனியே தனக்கென ஓர் அரண்மனை அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர் ஜஹானாரா. தனிமையில் வாழ்ந்த அழகியான ஜஹானாராவை, யூசுப் என்ற கவிஞன் காதலித்தான். அவளும் அவன் மீது மிகுந்த காதலுடன் இருந்தாள். தந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தால், அந்தக் காதல் முறிந்துபோனது என்றொரு கதையும் வரலாற்றில் உலவுகிறது.

1658-ம் ஆண்டில் ஷாஜகான் உடல் நலமற்றுப்போனார். பதவியைக் கைப்பற்ற நான்கு புதல்வர்கள் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. 1659-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி ஒளரங்கசீப்பின் ஆட்கள், தலை வேறு உடல் வேறாக தாராவை வெட்டிக் கொன்றார்கள். வயோதிகத்தைக் காரணம் காட்டி ஷாஜகானைச் சிறையில் அடைத்தான் ஒளரங்கசீப்.

தனிமையும் நோயுமாக தனது வயோதிகக் காலத்தைக் கழித்த ஷாஜகானுக்கு இருந்த ஒரே ஆறுதல் மகள் மட்டுமே. அவள், ஷாஜகானின் இறுதி நாள் வரை உடனிருந்து பராமரித்து வந்தாள். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு அவள் தனித்துவிடப்பட்டாள். ஒளரங்கசீப்பால் துரத்தப்பட்ட அப்பாவின் மற்ற மனைவிகளையும் அரண்மனைப் பெண்களையும் தனது பொறுப்பில் கவனித்தாள். ஒளரங்கசீப் அவள் மீது இரக்கம்கொண்டு மீண்டும் அவளுக்கு அரண் மனையின் உயரிய பதவியான முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை அளித்தார். அதைப் பெரிதாகக் கருதாமல் 16 ஆண்டுகள் அப்பாவின் நினைவில் வாழ்ந்த ஜஹானாரா, 1681-ம் ஆண்டு இறந்துபோனார்.

அவளுக்கு, நிஜாமுதீன் தர்காவில் கல்லறை அமைக்கப் பட்டது. 'என்னுடைய கல்லறையை அலங்காரமாக மூட வேண்டாம். அங்கே பசும்புற்கள் முளைத்து என்னை மூடட்டும்’ என்ற அவளது இறுதி வார்த் தைகள் அங்கே பொறிக்கப்பட்டுள்ளன.


ஜஹானாரா எழுதிய பெர்ஷியக் கவிதை களின் தொகுப்பு ஒன்று ஆன்ட்ரியா புடென்ஷோன் என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டு, 300 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளியிடப்பட்டு உள்ளது.

 வெங்கி

விவேகானந்தர் பொன்மொழிகள்

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்

மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.

பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.

காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.

உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.

நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.

சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு

நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம். ஆனால் மதகோட்பாடு இருக்க இயலாது. மத்த்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.

குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றர்கள் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.

செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனை விட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்து வாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.

நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.

மரணத்தை வென்று, அதறக்குமேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதைனைத் தெரிந்து கொள்ளத்துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.

மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.

இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும் - பயத்தை உண்டு பண்ணுகிற எதையும் நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது.

மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.

மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மத்த்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டுமே.

கடவுளை தாம் விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மதப்பழகப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம்.

தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும்.

பணி செய் அதற்குப் பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ணாதே அவ்வாறு உழைக்கும் பணி தெய்வத்திற்குச் செய்யும் திருத்தொண்டைப் போன்றது.

உடல் இன்பமே பெரிதன்று. வறுமையில் வாழ்ந்தாலும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று கஷ்டத்தில் வாடுவதை விட, பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு, தன் நலத்தைக் குறைத்து, பிறர் நலத்தை பேண வேண்டும்.

இறைவனே இன்று உலகாமகப் பரந்து விரிந்து நிற்கின்றான். கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய். அதுவும் ஒழ்க்கத் தோடு பணி செய். ஒழுக்கம் என்பது தன்னலமற்ற சேவை. அதுவே சிறப்பு. அந்த சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும்.

நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்ய்க்கூடாது?

உடல் வலிமையுடையவன், வலிமை குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.

செல்வம் படைத்தவன், செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்ததை விட வேண்டும்.

முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போடு நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தது. ஆனாலும் ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோக்ஷமில்லை.

பாவம் என்பது ஒன்று உண்டு என்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.

நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும்.

இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.

எப்போதும் விரிந்த மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவது மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.

எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.

யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.

குருவுக்குப் பணிந்து நடந்தாலும் பிரம்மச்சரிய ஒழுக்கத்தை நன்கு கடைப்பிடித்தலம் வெற்றிக்கு வழிகளாகும்.

சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.

போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே, மிருகத்தைப் போல வாழாதே!

இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே! என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லவலிமை பெற்றவன், உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.

பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது. கருத்து இதுதான் - எது வந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகமும் நமக்கு எதிராக எழுந்து எதிர்த்து நிறகட்டும். குறிக்கோளும் கொள்கையும் மாறாமல் முன்னேறிச் செல்.

நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனத் இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

நீ வீணாக அழுவதேன்? மரணமோ, நோயோ உன்கில்லை. நீ அழுவதேன்? துன்பமோ, துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன் அழ வேண்டும்? மாற்றமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் என்ன வேண்டுமானாலும் இரு. பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலடியில் பணிந்து கிடக்கும்.

பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடைய வழிகளை நுட்பமாகத் தேடுகிறான். தனது உடம்பால் உழைத்து இறைவனை அடைய நினைப்பவன் சேவாமார்க்கத்தை நாடுகிறான். சமூக சேவையில் இறைபணியைத் தேடுகிறான். மந்திரப் பூர்வமாக நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும் பூஜிக்கிறான்.

கர்மயோகம்: தனது கடமைகளைச் செய்வதாலும் அதற்குரிய செயல்களை ஆற்றுவதாலும் இறை உணர்வைப் பெறுவது.

பக்தியோகம்: தனது அந்தரங்கமான பக்தி உணர்வால், இறைவனை நினைந்து அவரைத் தனக்கே உரியவராக அடைய முற்படுவது.

ராஜயோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி இறைவன்பால் தனது சிந்தனையை வழிப்படுத்தி, இறை உணர்வைப் பெறுவது.

ஞானயோகம்: தனது அறிவாற்றலால் பல்வேறு சாஸ்திர நூல்களைப் படித்தும் ஞானபோதனைகளைப் பெற்றும், இறைவனை உணர்ந்து அவரை அடைய முற்படுவது.

இந்தச் சீதையெனும் இலட்சியத்தைப் போன்று வேறில்லை. எது எது பரிசுத்த மனதோ, எது எது புனிதமானதோ பெண்ணினத்திலே பெண்மை என்ப்போற்றப்படுவது எதுவோ, அதற்குப் பெயர்தான் சீதை! குரு ஒருவர் ஒரு பெண்மணியை ஆசீர்வதிக்க வேண்டுமென்றாலும், ஒரு குழந்தையை வாழ்த்த வேண்டுமென்றாலும், சீதையைப் போல் இரு என்ற கூறி ஆசீர்வதிப்பார்.

மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.

பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் த்த்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.

ஒரு கழுதை மீது நூலகத்தை ஏற்றிவிட்டால் அது பண்டிதன் ஆகிவிடாது. நூல்கள் நிறைய படிப்பதனால் எவனும் பயன்பெற முடியுமா?

நம் நாட்டுப் பொன்னை பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன காலமேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் இருக்கிறது.

ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான்.

உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது.

எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும்.

பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.

விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.

கல்வி என்பது ஒருவனுடைய மூளயல் பல விஷயங்களைத் திணிப்பதுன்று, அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும்.

ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்.

ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின், அவனது பெருஞ்செய்ல்களைப் பார்க்க வேண்டாம். அவன் தன் சாதாரணக் காரியங்களை எங்ஙனம் செய்கிறான் என்பதை கவனிக்க வேண்டும்.

நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, அல்லது யாராக இருந்தாலும் சரி. உன்னைடைய சுகதுக்கங்களை மறந்து நீ வேலை செய்க. இது ஒன்றே இப்பொழுது நீ கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடமாகும்.

எல்லாப் பேய்களும் நம்முடைய மனத்திலே தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும்.

இன்பங்களை அனுபவிக்கும் ஆசையை முற்றிலும் மனத்திலிருந்து நீக்காமல் ஆன்மிக வாழ்வில் எதையுமே அதையமுடியாது.

இன்பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால் தியாகம் செய்ய முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுகிறாய்.

மனிதன் இயற்கையை எதிர்த்துப் பொராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான்.

வெற்றிப் பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான். பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?

மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.

நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம்.

பெண்ணுக்குரிய அச்சம், நாணம் போன்ற பண்புகளை இந்தியப் பெண்களிடம் மட்டுமே நாம் பார்க்கமுடியும். அத்தகைய அற்புதமான குணங்களை உடைய பெண்களை முன்னேற்ற உங்களால் முடியவில்லை.

நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையாம கல்வி.

நூல்நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்றுவிடாமல் படிக்கும் புத்திசாலியைவிட, ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்து கொண்டாலே போதும், நீயே மெத்தபடித்தவனாக இருப்பாய்.

பூரணத்துவம் பெற்ற மனிதன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெறுவதற்கு எந்தப் பொருளை அதைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.

எல்லா ஒழுக்கத்திற்கும், எல்லா ஆன்மீக உணர்விக்கும் பிரம்மச்சரியமே ஆதாரம்.

வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின்ம மனநிலை நமக்குத் தேவையே இல்லை. மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்துநிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.

கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது.

சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான். பெய்ர்கள் வேறு. ஆனால் இருப்பது ஒன்றுதான்.

அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.

துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.

வழிபாடுகள் எந்தப் பெயரிலும் இருந்தாலும் சரி. எந்த வித்த்தில் இருந்தாலும் சரி. அவை அனைத்தும் ஒரே கடவுளக்குச் செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும்.

தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய்.

இந்தியாவின் பாமர மக்களாகிய இந்த ஏழை எளியவர்களை நாம் உயர்த்த வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு உரிய கருத்துக்களை நம்பிக்கயோடும், சிரத்தையோடும், அன்பான சொற்களால் அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு. இதுவே உனது கடமையாக்க் கொள்.

எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தல் பலவீன்னாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய்.

மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மத்த்தின் அடிப்படை இலட்சியமாகும்.

இறைவனை ஒவ்வொரு உயிரிலும் காண்பவன் ஆத்திகன்.

எவன் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான் நாத்திகன்.

--
விவேகானந்தர்.......

வரலாற்றில் இன்று

ஜனவரி 06

1721: பிரிட்டனில் 'சௌத் ஸீ' குமிழ் மோசடி குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்தது.

1752 - ஆம் ஆண்டு வரை சிலநாடுகளில் இன்று தான் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வந்தது.

1838: சாமுவேல் மோர்ஸ் இலத்திரனியல் டெலிகிராவ் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டார்.

1929: அன்னை திரேஸா இந்தியாவில் வறிய மக்களுக்கான தனது சேவையை ஆரம்பிப்பதற்கு கல்கத்தாவை சென்றடைந்தார்.

1931: தோமஸ் அல்வா எடிஸன் தனது கடைசி காப்புரிமைக்கு வி;ண்ணப்பித்தார்.

1950: சீன மக்கள் குடியரசை பிரிட்டன் அங்கீகரித்தது. அதற்கு பதிலடியாக சீனக் குடியரசு (தாய்வான்) பிரிட்டனுடனான இராஜதந்திர தொடர்புகளை துண்டித்தது.

1953: முதலாவது ஆசிய சோசலிஷ மாநாடு பர்மாவின் தலைநகர் ரங்கூனில் நடைபெற்றது.

1959 - உலகின் முதல் செயற்கைக் கோள் ஏவப்பட்டது. ரஷ்யாவின் காஸ்மிக் ராக்கெட் எனும் அந்தச் செயற்கைக் கோள் புவியை விட்டு 800 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மேலே சென்று சுற்றுப் பாதையை அடைந்தது.

1994: அமெரிக்க ஸ்கேட்டிங் வீராங்கனை நான்ஸி கேரிங்கன், தனது போட்டியாளரினால் ஏவப்பட்ட குழுவினால் முழங்காலில் அடித்து காயப்படுத்தப்பட்டார்.