Digital Time and Date

Welcome Note

Wednesday, January 23, 2013

பைல்ஸ் பிரச்சனையா? வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!

அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூல நோய் என்றும் அழைப்பர். இத்தகைய பைல்ஸ் பிரச்சனை வந்தால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித டென்சன் இருக்கும். ஏன் தெரியுமா? ஆம், மலவாயில் புண் வந்தால் பின்னர் எப்படி இருக்கும். அதிலும் பைல்ஸ் என்பது சாதாரணமானது அல்ல. அது வந்தால், மலவாயில் கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் கடுமையான வலி ஏற்படுவதோடு, இரத்தப்போக்கு, அரிப்பு போன்றவை ஏற்படும். இந்த பிரச்சனை வருவதற்கு உடலில் அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம்.

எனவே மலச்சிக்கல் வந்தால், அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். அதற்கான மருந்து வீட்டிலேயே இருக்கிறது. அது என்னவென்றால், உணவுகள் தான். குறிப்பாக பைல்ஸ் வந்துவிட்டால், அதனை மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று, அதற்கான மருந்துகளையும் உட்கொள்ளலாம். இல்லையெனில் ஒருசில வீட்டு மருந்துகளைக் கொண்டும் சரிசெய்யலாம். இப்போது அந்த பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முள்ளங்கி ஜூஸ்

பைல்ஸ் இருந்தால் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகிவிடும். அதிலும் எடுத்தவுடன் ஒரு டம்ளரை குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து குடித்து வந்தால், சரியாகிவிடும்.

மாதுளை தோல்

இந்த சிவப்பு நிற மாதுளைப் பழத்தின் தோல் பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்யும். அதற்கு மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால், சரியாகிவிடும்.

இஞ்சி மற்றும் எலுமிச்சை ஜூஸ்

நீர் வறட்சியும் பைல்ஸ் பிரச்சனைக்கு ஒரு காரணம். எனவே தினமும் இரண்டு முறை இஞ்சி மற்றும் எலுமிச்சையை நீரில் கலந்து ஜூஸ் போன்று இரண்டு முறை குடித்து வந்தால், உடலில் வறட்சி குறைந்து, பைல்ஸ் சரியாகிவிடும்.

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் உலர்ந்ததை வாங்கி, அதனை இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் பாதியை குடித்துவிட்டு, மீதியை மாலையில் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் குணமாகிவிடும்.

வெங்காயம்

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், பைல்ஸால் ஏற்படும் இரத்தப் போக்கை சரிசெய்துவிடலாம். அதுமட்டுமின்றி, அவை மலவாயில் ஏற்படும் வலியையும் குணமாக்கும்.

சரியான நிலை

மலம் கழிக்கும் போது சரியான நிலையில் லேசாக அடிவயிற்றை அழுத்தும் படியாக உட்கார்ந்து செல்ல வேண்டும். அவ்வாறு சரியான நிலையில் உட்கார்ந்து செல்வதால், மலக்குடலுக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுத்து, கஷ்டப்பட்டு செல்ல வேண்டி இருக்காது. இதனால் பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

உடற்பயிற்சி

மலச்சிக்கலை தடுத்து, இரத்த சுழற்சியை சீராக்க, தினமும் நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் மிகவும் கடினமாக இருக்கும் உடற்பயிற்சியான எடை தூக்குதல் போன்றவற்றை செய்யவே கூடாது. அதற்கு பதிலாக வாக்கிங், ஜாக்கிங், நீச்சல் போன்ற லேசான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

மஞ்சள்

மசாலா பொருட்களில் காயங்களை குணப்படுத்தும் பொருள் அதிகம் உள்ளது. எனவே மஞ்சளை சூடான நீரில் கரைத்து, தினமும் குடித்து வந்தால், பைல்ஸ் இயற்கையாக சரியாகிவிடும்.

வாழைப்பழம்

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். அதிலும் இதை இரவில் ஒரு டம்ளர் சூடான பால் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மறுநாள் காலையில் எந்த ஒரு கஷ்டமுமின்றி கழிவுகளை வெளியேற்றலாம்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் காராமணி, உளுத்தம் பருப்பு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

tamil.boldsky.com

வரலாற்றில் இன்று

ஜனவரி 23


நிகழ்வுகள்

1368 - சூ யுவான்ஷாங் சீனாவின் பேரரசனாக முடிசூடினான். இவனது மிங் பரம்பரை 3 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது.

1556 - சீனாவின் சாங்சி மாநில நிலநடுக்கத்தில் 830,000 வரையானோர் இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.

1570 - ஸ்கொட்லாந்தில் உள்நாட்டுப் போர் வெடித்தது.

1639 - பெருவைச் சேர்ந்த யூதக் கவிஞர் பிரான்சிஸ்கோ மல்டொனால்டோ டி சில்வா எரியூட்டிக் கொல்லப்பட்டார்.

1719 - புனித ரோம் பேரரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு உருவாக்கப்பட்டது.

1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1793 - ரஷ்யாவும் பிரஷ்யாவும் போலந்தைப் பிரித்தனர்.

1833 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.

1870 - மொன்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1874 - விக்டோரியா மகாராணியின் மகன் எடின்பரோ கோமகன் அல்பிரட் ரஷ்யாவின் மூன்றாம் அலெக்சாண்டரின் ஒரே மகளான மரீயா அலெக்சாந்திரொவ்னாவை திருமணம் புரிந்தார்.

1924 - விளாடிமிர் லெனின் ஜனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

1937 - லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் ஜோசப் ஸ்டாலின் அரசைக் கவிழ்க்க முயன்றதாக 17 கம்யூனிஸ்டுகளின் மீது மாஸ்கோவில் விசாரணைகள் ஆரம்பமாயின.

1943 - இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாசிகளிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.

1943 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலிய, மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் பப்புவாவில் யப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர். இது பசிபிக் போரில் யப்பானியரின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.

1950 - இஸ்ரேலின் சட்டசபை ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது.

1957 - சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

1973 - வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.

1996 - ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.

1998 - யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி துணை இராணுவக்குழுவின் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதில் அம்முகாமில் இருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

2002 - அமெரிக்க ஊடகவியலாளர் டானியல் பேர்ள் கராச்சியில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் கொலை செய்யப்பட்டார்.

2005 - திருச்சி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1876 - ஒட்டோ டியெல்ஸ், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனியர் (இ. 1954)

1897 - சுபாஷ் சந்திர போஸ், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் (இ. 1945)

1907 - ஹிடெக்கி யுக்காவா, நோபல் பரிசு பெற்ற யப்பானியர் (இ. 1981)

1915 - ஆர்தர் லூயிஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர் (இ. 1991)

1918 - கேர்ட்ரூட் எலியன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (இ. 1999)

1929 - ஜோன் போல்யானி, நோபல் பரிசு பெற்ற கனடியர்

1930 - டெரெக் வால்கொட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்

இறப்புகள்
1873 - இராமலிங்க அடிகள், ஆன்மீகவாதி (பி. 1823)

1944 - எட்வர்ட் மண்ச், நோர்வே நாட்டைச் சேர்ந்த ஓவியர் (பி. 1863)

1989 - சல்வடோர் டாலி, ஸ்பானிய ஓவியர் (பி. 1904)

Tuesday, January 22, 2013

வரலாற்றில் இன்று

ஜனவரி 22





  • 1798 - நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
    1840 - பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.
    1863 - ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.
    1879 - தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
    1889 - கொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது.
    1901 - 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.
    1905 - சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சார் மன்னருக்கெதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
    1906 - பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
    1941 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் டோப்ருக் நகரை நாசிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.
    1942 - சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் ஜப்பானியரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமுற்றது.
    1952 - உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது.
    1957 - சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.
    1964 - கென்னத் கவுண்டா வட றொடீசியாவின் முதலாவது அதிபரானார்.
    1973 - நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
    1980 - நோபல் பரிசு பெற்ற சோவியத் இயற்பியலாளர் அந்திரே சாகரொவ் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
  • 1984 - ஆப்பிள் மெக்கின்டோஷ் (mac) கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1992 - சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.
  • 1999 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
  • 2003 - பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.
  • 2004 - ஆர்க்குட் தொடங்கப்பட்டது.



பிறப்புகள்


Monday, January 21, 2013

வரலாற்றில் இன்று

ஜனவரி 21


1789: அமெரிக்காவின் முதலாவது நாவல் பொஸ்டன் நகரில் அச்சிடப்பட்டது.

1793: பிரான்ஸின் 16 ஆம் லூயி மன்னன் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டார்.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் ஐக்கிய அமெரிக்காவின் செனட்டில் இருந்து விலகினார்.

1899: ஒபெல் நிறுவனம் தனது வாகன உற்பத்தியை ஆரம்பித்தது.

1908: நியூயோர்க் நகரில் பெண்கள் பொது இடத்தில் புகைபிடிப்பதை தடைசெய்யப்பட்டது.

1911: முதலாவது மொன்டே கார்லோ பந்தயம் நடைபெற்றது.

1921: இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

  • 1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.
  • 1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.

  • 1941 - இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.

    1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.

  • 1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில்வெள்ளோட்டம் விடப்பட்டது.
    1960: ஜமைக்கா விமான விபத்தில் 37 பேர் பலியாகினர்.

  • 1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
  • 1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.

  • 1976 - ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லக்கூடிய கன்கார்டு ரக விமானம் முதன் முதல் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அந்த விமானம் ஆங்லோ பிரெஞ்சு கூட்டணியில் உருவானது.

  • 1981: ஈரானில் அமெரிக்கத் தூதரகத்தில் 444 தினங்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

    1999: அமெரிக்க கரையோரக் காவல் படையினர் 4300 கிலோகிரோம் கொகேய்ன் போதைப் பொருளை கைப்பற்றினர்.

  • 2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.
  • வரலாற்றில் இன்று

    ஜனவரி 20