Digital Time and Date

Welcome Note

Saturday, February 25, 2012

தெரிஞ்ச சினிமா.... தெரியாத விஷயம்...பாகம் 01

கண்ணதாசன் என்றாலே, அவருடன் சேர்த்து அந்த தும்பைபூ வேஷ்டியும் சட்டையும் ஞாபகம் வந்துவிடும் நம்மையறிமலே. 
ஆனால் நாம் கற்பனை செய்து கூட பார்க்காத ஷார்ட்ஸ் அண்ட் ஷர்ட் , டை, ஷூ , என்று கலக்கலான ஆடை அலங்காரத்தில் இளம் கண்ணதாசன் ...


*********************************************************************************************





மக்கள் நாயகன் ராமராஜன் - நளினி திருமண படம் .
*************************************************************************************************
அன்னை இல்லம் - நடிகர் திலகம் நடிப்பில் நூறு நாட்களை கண்ட படம். இந்த படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். இவர் எப்படி தேர்வானார் இந்த படத்திற்கு, என்பது பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல். 
இந்த படத்திற்கு யாரை இசையமைக்கப் போடலாம் என்ற கேள்வி வந்த போது மெல்லிசை மன்னரா அல்லது கே.வி. மகாதேவனா என்று??? பெரும் குழப்பம் நிலவி இருக்கிறது. 
இதையடுத்து சீட்டு குலுக்கிப் பார்த்து பின்னர் கே.வி.எம் பெயர் வந்ததாம்.
***********************************************************************************************
 மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனின் குடும்ப படம் ..
*************************************************************************************************
எல்லோரும் எம்.ஜி,ஆர். காலில் விழுந்து வணங்கியதை பார்த்திருப்போம். ஆனால் எம்.ஜி.ஆர் யார் காலிலாவது விழுந்து வணங்குவதை பார்த்து இருக்கிறீர்களா ??? அவர் அப்படி காலில் விழுந்து வணங்கிய பெருமைக்கு உரியவர்கள் இருவர்.
ஒருவர், கத்திச் சண்டை, இரட்டை வேட நடிப்பு இவற்றில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா. மற்றொருவர் இந்திப்பட இயக்குனர் சாந்தாராம்.
இயக்குனர் சாந்தாராமின் காலில், எம்.ஜி.ஆர் விழுந்து வணங்கும் புகைப்படம் இங்கே உங்களுக்காக.
************************************************************************************************
பொது இடங்களுக்கோ, பத்திரிகை புகைபடங்களுக்கோ தன்னுடைய குடும்பத்தை காண்பிக்க விரும்பாதவர் கவுண்டமணி. அப்படிப்பட்ட கவுண்டமணியின் திருமண புகைப்படம் உங்களுக்காக.
**********************************************************************************************
தமிழ் சினிமாவை தன் நடிப்பால் வேறொரு தளத்துக்கு அழைத்து சென்ற நடிகவேள் "எம்.ஆர்.ராதாவின்" 105- வது பிறந்தநாள் அன்று.
*************************************************************************************************
"கல்யாண சமையல் சாதம்....காய்கறிகளும் பிரமாதம்" அன்றில் இருந்து இன்று வரை கடோத்கஜன் என்றால் அது நம்ம எஸ்.வி.ரங்காராவ்:-தான். 
பணக்கார அப்பாவாக, மனம் கவர முதலாளியாக, அட்டகாச அரக்கனாக...இப்படி குணச்சித்திர வேடத்தில் வெளுத்து கட்டிய இவர், நடனத்திலும் வெளுத்து கட்டி இருக்கிறார். அதுவும் நாட்டிய பேரொளி பத்மினியுடன். 
1966 - வருடம் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட "மோகினி பஸ்மாசுரா" படத்தில் பத்மினியும், எஸ்.வி.ரங்காராவும் போட்டி போட்டு நடனமிடும் காட்சி இதோ.
***********************************************************************************************

No comments:

Post a Comment