மறைந்த நடிகை எஸ்.என்.லட்சுமி அவர்கள் 1,500 படங்களுக்கு மேல்
நடித்துள்ளார் என்பது ஒரு ஆச்சர்யம் என்றால், பாக்தாத் திருடன் படத்தில்
டூப் போடாமல் புலியுடன் சண்டை போட்டு எம்.ஜி.ஆரிடம் பாராட்டு பெற்றார்
என்பது மற்றொரு ஆச்சர்யம்.
பாக்தாத் திருடனில் இவரது தைரியமான நடிப்பை பார்த்துவிட்டு தன்னுடைய "நல்ல
தங்கை" படத்தில் இவருக்கென்று பிரத்யேக கதாபாத்திரத்தை அளித்துள்ளார்
என்.எஸ்.கே.

*********************************************************************************
**************************
கமலுடன் படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீதேவி - மொத்தம் 24 படங்கள்
நடித்திருக்கிறார்கள் இருவரும். அதே போல் மலையாளத்திலும் மொத்தம் ஐந்து
படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

*********************************************************************************
**************************
கண்ணதாசன் - தேவர்...
தமிழ் திரை பட வரலாற்றில் கடைசி வரை பிரியாமல் இருந்த ஒரு கூட்டணி
கண்ணதாசன் - தேவர் கூட்டணி . தேவர் இருந்த வரை கண்ணதாசன் பாடல்கள்
இல்லாத தேவர் பிலிம்ஸ் படங்களே இல்லை என்று கூறலாம் .

*********************************************************************************
**************************

*********************************************************************************
**************************
ரஜினிகாந்த் - கமல் ஹசன் இருவரும் இனி இணைந்து நடிக்க மாட்டோம் என்று சொன்ன
பின் ஒரு ஹிந்தி படத்தில் அமிதாப் உடன் இணைந்து நடித்தனர் . ஆனால்
இருவரும் இணைந்து வரும் காட்சி ஒன்று கூட இந்த படத்தில் இல்லை என்பது ஹை
லைட் .

*********************************************************************************
**************************
நவராத்திரி - நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூறாவது படம். இந்த
படத்துக்காக சிவாஜியின் நவரசங்களை வெளிப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட
அட்டகாசமான விளம்பரம் .

*********************************************************************************
**************************
என் இனிய பொன் நிலாவே - அப்பிடின்னு நடிகை சமந்தா கிட்ட பாட முடியாது.
கராத்தே, குங்-ஃபூ -னு ஜாக்கிசான் தங்கச்சி அவங்க ! ஸ்கூல்- யூனிஃபார்ம்ல
ஒரு கராத்தே டிஸ்ப்ளே பண்ணிட்டு இருக்கிறது சின்ன வயசு சமந்தா.

*********************************************************************************
**************************
பிராட் பிட் - அஞ்சலினா ஜூலி தம்பதியின் ஆறு குழந்தைகளையும் கவனித்து
கொள்வதற்கு, தனித்தனியா ஆறு "nany"-க்கள் (அதாவது ஆறு ஆயா-மா)
வைத்திருக்கிறார்களாம்.
ஒவ்வொரு nany-க்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ????? ஒன்பது லட்சம் டாலர்கள். நம்ம ஊர் பணத்தில் நாலரை கோடி ரூபாய் !

No comments:
Post a Comment