வார்த்தைகள், தகவல்கள், விளக்கங்கள், எதுவும் தேவையில்லாத ஒரு இளமைகால புகைப்படம் உங்களுக்காக !

*****************************************************************************************************
கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த
ஆசிர்வாதம் வாங்கிய போது எடுத்த படம் .

*****************************************************************************************************
சாண்டில்யன்' எழுதிய "ஜீவ பூமி" - இந்த நாவலை ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன .
'ரதன் சந்தாவத் சலூம்பரா' என்ற ராஜபுத்திர வீரனாக நடிகர்திலகமும், மேவார்
நாட்டு இளவரசியாக சரோஜாதேவியும் , மொகலாய மன்னர் இரண்டாம் அக்பர்
சக்கரவர்த்தியாக நம்பியாரும் ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்பும் துவங்கியது.
படத்தின் ஸ்டில்களும் 'பேசும் படம்' போன்ற பத்திரிகைகளில் வெளியாகின.
கே.வி.மகாதேவன் இசையில் இரண்டு பாடல்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சித்தூர் ராணி பத்மினி' படம்
வெற்றிவாய்ப்பை இழக்கவே, கிட்டத்தட்ட அதேமாதிரியான கதைக்களத்தைக்கொண்ட
'ஜீவபூமி' படம் எடுத்தவரையில் கைவிடப்பட்டது.
மனோரமா அறிமுகமானது இந்த படத்தில் தான் .
தகவல் கேட்ட நமது "TCTV (தெரிந்த சினிமா, தெரியாத விஷயம்)" குடும்ப உறுப்பினர் எம்.எஸ்.தேவராஜன். அவர்களுக்கு நன்றி ...

No comments:
Post a Comment