Digital Time and Date

Welcome Note

Tuesday, February 14, 2012

Gmail-ல் இருந்தவாறே பிளாக்கரில் post செய்ய !!

நண்பர்களே..! வெளியூர் செல்லும்போதே அல்லது பயணத்தின் போது நமக்குத் தோன்றும் எண்ணங்களை மொபைல் மூலம் உடனடியாக பதிவிட இம்முறை பெரிதும் பயன்படும். இனி ஜிமெயில் இருந்தாவாறே உங்கள் பிளாக்கரில் இடுகைகளை இடலாம். இதற்கு பிளாக்கரில் ஒரு அருமையான வசதி உள்ளது.
உங்கள் பிளாக்கர் செட்டிங்சில் ஒரு சிறிய மாற்றம் செய்யதாலே போதும்.

இதை செயல்படுத்த,

  • உங்கள் பிளாக்கரின் அக்கவுண்டில் உள் நுழைந்துகொள்ளுங்கள்..
  • Settings செல்லவும்.
  • அங்கு Email & Mobile என்பதை கிளிக் செய்யவும்.



  • அந்த பக்கத்தில் கீழே இருக்கும் Postings Options என்பதே தேடுங்கள். அதன்  கீழ் இவ்வாறு இருக்கும்.. 
  • அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன்  secretwords என்று மெல்லிய எழுத்துக்களுடன் கூடிய ஒரு பெட்டி இருக்கும். அதில் உங்களுடைய ரகசிய வார்த்தை ஒன்றை உங்கள் விருப்பப்படி தட்டச்சிடுங்கள். 
  •  நான் ரகசிய வார்த்தையாக 12345 என்பதைக் கொடுத்திருக்கிறேன்.. 
  • உங்களுடைய ரகசிய வார்த்தையை தட்டச்சிடும்போதே publish email immediately என்பதை தானாவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும்..

  • இந்த மின்னஞ்சல் முகவரிதான் நமக்கு ஜிமெயிலிருந்து புதிய பதிவொன்றை இட பயன்படும் முகவரி ஆகும். இதுதான் மிகவும் முக்கியம்.
  • இதில் உள்ள palanivel.nhai.12345@gmail.com என்பதே நாம் ஜிமெயிலிருந்து பதிவை இட பயன்படுத்தக்கூடிய மின்னஞ்சல் முகவரி ஆகும். 
  • பிறகு கீழ் உள்ள Save settings என்பதை கிளிக் செய்து கொள்ளவும்..

அவ்வளவுதான்..செட்டிங்ஸ் முடிந்தது.

இனி ஜிமெயில் வழியாக போஸ்ட் செய்வது எப்படி? என்று பார்ப்போம்..

  • உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை திறந்து கொள்ளவும்.. 
  • compose என்பதை கிளிக் செய்யவும்.. 
  • To என்ற இடத்தில் நீங்கள் செட்டிங் செய்த மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும். 
  • நான் என்னுடைய palanivel.nhai.123@gmail.com என்பதை கொடுத்திருக்கிறேன்..
  • subject என்பதில் நீங்கள் இட வேண்டிய பதிவின் தலைப்பை தட்டச்சிட்டவும்..
  • பதிவிட வேண்டிய பகுதியை எப்போதும்போல நீங்கள் தட்டச்சு செய்யும் பெட்டியில் தட்டச்சு செய்துகொள்ளுங்கள். வேண்டிய மாற்றங்களை (format- bold, italic, color,)செய்துவிடுங்கள். (தலைப்பு போன்றவற்றிற்கு வண்ணம் கொடுத்தல் போன்றவை)


  •  பதிவை எழுதி முடித்துவிட்டு இறுதியாக send என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். 
  • உடனே உங்களுடைய இடுகை ஜிமெயிலிருந்து உங்கள் பிளாக்கரில் ப்ப்ளிஷ் ஆகியிருக்கும். .

நன்மைகள்..

1. முக்கிய நன்மை பிளாக்கர் கணக்கில் உள்நுழையாமலேயே உங்களது இடுகளை பிளாக்கிரில் வெளியிடலாம்.

2. Mobile மூலம் இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு அற்புதமான பயனுள்ள வாய்ப்பு. அவசர இடுகைகள் ஜிமெயில் மூலம் இடலாம்.

3. இந்த இடுகையும் இம்முறையில் வெளியிடப்பட்டதே..!!

பிளாக்கரில் இது ஒரு சிறப்பான அம்சம்.. நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்..! உங்கள் கருத்துகளையும் மறக்காமல் கூறுங்கள்.!!

No comments:

Post a Comment