Digital Time and Date

Welcome Note

Tuesday, February 14, 2012

ஜிமெயிலில் புது வசதி: Preview Pane


தகவல் தொடர்பு சாதனங்களில் முக்கிய பங்கு வகிப்பது மின்னஞ்சல்கள் (ஈமெயில்கள்). நம்மில் பலருக்கு அதிகமான மின்னஞ்சல்கள் வரும். அவற்றில் தேவையில்லாத மெயில்களும் வரும். ஒவ்வொரு மின்னஞ்சல்களையும் திறந்து திறந்து படிக்கணும் என்றால் (என்னை போன்றவர்களுக்கு) கொஞ்சம் சிரமம் தான்.

நம்முடைய சிரமத்தைக்(?) கண்ட ஜிமெயில் தற்போது Preview Pane என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Microsoft Office Outlook-ல் உள்ளது போன்றாகும்.



உங்களுக்கு வந்துள்ள மின்னஞ்சல்களுக்கு வலது புறம் ஒரு Window இருக்கும். இடது புறம் உள்ள மின்னஞ்சல்களில் எதை க்ளிக் செய்கிறீர்களோ, அதனை வலது புறம் உள்ள விண்டோவில் படிக்கலாம், அங்கிருந்தே அந்த மெயில்களுக்கு பதில் அனுப்பலாம், மெயில்களை அழிக்கலாம்.


இந்த வசதியை பெற:

1. முதலில் https://mail.google.com/mail/#settings/labs (Gmail Lab)சென்று, அங்கு Preview Pane என்னும் Gadget-ஐ தேடவும்.

2. பிறகு அந்த gadget-ல் Enable  என்பதை தேர்வு செய்து, Save Changes என்னும் பட்டனை க்ளிக் செய்யவும்.



3. பிறகு உங்களுக்கு புது விண்டோ தெரியும். மின்னஞ்சல்களில் எதையாவது க்ளிக் செய்தால், அது வலது புறம் தெரியும்.

அவ்வளவு தான்..!

மீண்டும் பழைய மாதிரியே வேண்டுமானால், மின்னஞ்சல்களுக்கு மேலே வலது ஓரம் Toggle split Pane Button இருக்கும். அதை க்ளிக் செய்து எப்பொழுது வேண்டுமானாலும் மாறிக்கொள்ளலாம்.



அவ்வாறு வரும் Preview window-வை இரண்டு விதமாக பார்க்கலாம். Toggle பட்டனுக்கு பக்கத்தில், Drop Down Arrow-வை க்ளிக் செய்தால் மூன்று விருப்பங்கள் வரும்.



No Split - ப்ரிவீவ் விண்டோ இல்லாமல் சாதாரணமாக பார்க்க
Vertical Split - வலது புறம் ப்ரிவீவ் பார்க்க
Horizontal Split - கீழே ப்ரிவீவ் பார்க்க

இனி என் போன்றவர்களுக்கு மின்னஞ்சல்கள் படிப்பது எளிதாகிவிடும்

No comments:

Post a Comment