Digital Time and Date

Welcome Note

Tuesday, March 27, 2012

அமெரிக்கா உலகை ஆண்ட காலம் முடிந்துவிட்டது – அஹ்மத் நஜாத்!

அமெரிக்காவும், நேட்டோவும் உலக நாடுகளுக்கு கூடுதல் காலம் கட்டளை பிறப்பிக்க இயலாது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். உலகை ஆண்ட அமெரிக்காவின் காலம் முடிந்துவிட்டது. தங்களது கொள்கையை மாற்ற அவர்கள் தயாராகவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஆப்கானின் பொருளாதார நிலைக்குறித்து தாஜிகிஸ்தானில் நடந்த மாநாட்டில் உரைநிகழ்த்தினார் நஜாத். தெற்கு-மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு துணைச்செயலாளர் ராபர்ட் ப்ளேக்கின் தலைமையில் அமெரிக்க குழுவும் இம்மாநாட்டில் பங்கேற்கிறது. ஆனால், நஜாத் உரை நிகழ்த்த எழுந்தவுடன் அரங்கை விட்டு வெளியேறிய இக்குழுவினர் பின்னர் அவர் உரையை பேசி முடித்ததும் அரங்கிள் நுழைந்தனர்.

நஜாத் தனது உரையில், காலனி மயமாக்கலை லட்சியமாக கொண்டு செயல்படும் நேட்டோ உறுப்பு நாடுகளின் கொள்கைதான் உலகத்தில் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று நஜாத் சுட்டிக்காட்டினார்.
ஆப்கானில் இருந்து வெளிநாட்டு ராணுவம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும். உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் அமெரிக்காவும், நேட்டோவும் ஆகும். தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்காவும், நேட்டோவும் ஆப்கானில் நுழைந்தன. இதே பேனரில் தான் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை சுற்றியும் இவர்கள் செயல்படுகின்றனர். நேட்டோவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு சீர்கெடவும் இதுதான் காரணம். இவ்வாறு நஜாத் கூறினார்.

No comments:

Post a Comment