Digital Time and Date

Welcome Note

Monday, March 26, 2012

கௌரவம் பாராத மாமனிதர் பகுதி



நபிகள் நாயகம் அவர்களின் வீட்டு உபயோகப் பொருட்கள்


... கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 6456


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும்.

இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது?

மரத்தின் நிழல் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.
இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.
நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991


பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள்.


ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம்
இருந்தது ஒரே ஒரு பாய் தான்.


'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகல் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்' என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 730, 5862


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாயின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?' என்று நான் கூறினேன்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?' எனக் கேட்டார்கள்.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இரண்டாவது
ஜனாதிபதியாகப் பதவி வகித்த உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 4913


கூளம் நிரப்பப்பட்ட இந்தச் சாதாரண தலையணை கூட அவர்களிடம் ஒன்றே ஒன்று தான் இருந்துள்ளது. அதிக மதிப்பில்லாத அற்பமான தலையணை கூட ஒன்றே ஒன்று தான் அவர்களிடம் இருந்தது என்ற இந்தச் செய்தி பதவியைப் பயன்படுத்தி எந்தச் சொகுசையும் நபிகள் நாயகம் அனுபவிக்கவில்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.

வலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த இந்த வாழ்க்கையை மிக மிக ஏழ்மை நிலையில் இருப்பவர் கூட வாழ முடியுமா?

ஜசகல்லாஹ் கைர் வாஞ்சூர்

தொடர்பு உடையவை :


கௌரவம் பாராத மாமனிதர் பகுதி -7
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்
பிறர் தவறு செய்யும்போது கன்டித்த விதம் : http://www.facebook.com/photo.php?fbid=237481176347169


கௌரவம் பாராத மாமனிதர் பகுதி -6
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் : http://www.facebook.com/photo.php?fbid=222387337856553


கௌரவம் பாராத மாமனிதர் - Part 5
அதிசய மனிதர் முஹம்மத் (ஸல்) : http://www.facebook.com/photo.php?fbid=200353423393278


கௌரவம் பாராத மாமனிதர் - Part 4
(நபிகள் நாயகத்தின் அரண்மனை ) : http://www.facebook.com/photo.php?fbid=165134426915178


கௌரவம் பாராத மாமனிதர் - Part 3
( மாமன்னரின் எளிய வாழ்க்கை) : http://www.facebook.com/photo.php?fbid=163075517121069


கௌரவம் பாராத மாமனிதர் - சம்பவம் 2
(கடனைக் கேட்பவருக்கான உரிமை) : http://www.facebook.com/photo.php?fbid=154483547980266


கௌரவம் பாராத மாமனிதர் - சம்பவம் 1 : http://www.facebook.com/photo.php?fbid=125008170927804


முன்மாதிரி அரசியல் தலைவர் : http://www.facebook.com/photo.php?fbid=127301107365177


இறுதி நபியின் இறுதிப் பேருரை : http://www.facebook.com/photo.php?fbid=142619529166668


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள் - Part 1 : http://www.facebook.com/photo.php?fbid=140511936044094


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள் Part-2 : www.facebook.com/photo.php?fbid=140949772666977


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள் Part-3 : www.facebook.com/photo.php?fbid=141338659294755


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகள் Part-4 :
http://www.facebook.com/photo.php?fbid=148482035247084

No comments:

Post a Comment