Digital Time and Date

Welcome Note

Monday, March 26, 2012

'தெஹல்கா லீக்ஸ்'... அடப்பாவிகளா...!

உச்சநீதிமன்றம் நியமித்த Special Investigation Team (SIT), உச்சநீதிமன்றத்திடம்  சமர்ப்பித்த அறிக்கையை நைசாக 'சுட்டு' தெஹல்கா நேற்று முன்தினம் வெளியிட்டுவிட்டது..! குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கண்டறிந்துள்ளது.

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 3000 முஸ்லிம்கள் துடிக்கத்துடிக்க சங்பரிவார பயங்கரவாதிகளால் கண்டந்துண்டமாக வெட்டியும், பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டும், குழந்தைகள் கூட நெருப்பிலிடப்பட்டும் கொல்லப்பட்டனர்.


கோத்ராவில் நிகழ்ந்த ரயில் தீ விபத்தை ஒரு சதியாக மாற்றி முஸ்லிம்களின் மீது பழிபோட்டு சமூக விரோதிகள் இந்தக்காரியத்தை செய்து முடித்தனர் என்றும்  கோத்ரா விபத்தை முஸ்லிம்களின் சதி என நிரூபிக்க முடியாமல் கெடுமதி படைத்த சங்பரிவார் “சபர்மதி எக்ஸ்பிரசை எரிக்க நான் தான் பெட்ரோல் சப்ளை செய்தேன்” என ஒரு முஸ்லிம் இளைஞரை மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைத்தது, உள்ளிட்ட படுபயங்கர சதித்திட்டங்களை இரு ஆண்டுகளுக்கு முன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்தியது.

அத்தோடு தீவிர ஹிந்துத்துவாதிகள் போல் வேடமிட்டு சட்டைபட்டன் அளவே உள்ள துல்லிய கேமராவோடு குஜராத் இனப்படுகொலையாளர்களை ரகசியமாக படம்பிடித்த தெஹல்கா ஆஜ்தக் ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய investigative journalism மூலம் கொலைகாரர்களின் வாக்குமூலங்களைவெளியிட்ட தெஹல்கா செய்தியாளர்களது குஜராத் இனப்படுகொலை குறித்த செய்திகள் உலகையே உலுக்கியது.

கோத்ரா ரயில் விபத்து, விபத்தாகவே அறியப்பட்ட சில மணி நேரத்தில் மோடி வந்து பார்வையிட்டபின் அது திட்டமிட்ட சதியாக மாற்றப்பட்டதும், 'உங்களுக்கு மூன்று நாள் மட்டும் தருகிறேன் இதற்குள் நினைத்ததை சாதித்துக் கொள்ளுங்கள்' என மோடியே வன்முறையாளர்களுக்கு முழு ஆதரவை வழங்கியதும் விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள் அந்த கொடூரச்செயல் குறித்து சிறிதும் மன உறுத்தலின்றி வெறித்தனமாக நேரடி வாக்குமூலமாகவே தெஹல்காவின் வீடியோவில் கூறியதையும் இந்த உலகம் மறக்க முடியாதது.

முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்துப் பார்த்தோம், பிறகு எரித்தோம் என்றான் ஒரு வெறிநாய். 

பள்ளிவாசல்களை பெட்ரோல் டாங்கர்களால் தரை மட்டமாக்கி னோம் என்றான் ஒரு மதவெறி மிருகம்.

நாங்கள் இங்கே ஆயுதத் தொழிற்சாலையே உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றான் ஒரு மனிதப்பதர்.

குறிப்பிட்ட நாளில் பயன்படுத் துவதற்காக பஞ்சாப்பிலிருந்து இரண்டு லாரிகள் நிறைய வாள்களை வரவழைத்தோம் என்றான் கோழை ரத்தம் ஓடும் ஓர் ஈனநாய்.

கடுமையாக தாக்கி படுகாயமடைந்ததோடு உயிருக்கு போராடிய அப்பாவிகளை உயிரோடு சாக்கடையில் போட்டு மூடிய கொடூரமும்.

கை கூப்பி என்னை கொன்று விடாதீர்கள் என கதறிய இளைஞர் அன்சாரியின் கோலமும் யார்தான் மறக்க முடியும்.

தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரியின் வீட்டுக்குள் தஞ்சமடைந்த ஏழை மக்கள் உள்ளிட்ட 72 பேரையும் இரக்கமின்றி காவல்துறை உதவியுடன் கொன்று குவித்தனர் பயங்கரவாதிகள்.

உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தன் வீட்டில் அடைக்கலம் தேடி வந்த அப்பாவிகளைக் காப்பாற்ற முதியவர் இஹ்சன் ஜாஃப்ரி தம் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரிடம் தொலை பேசியில் கெஞ்சினார்.

காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், ஏன் பிற கட்சி அரசியல் தலைவர்களைக் கூட தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உதவி கோரினார், கெஞ்சினார், கதறினார். முதலமைச்சர் மோடியை (!?!?!?!?!) கூட தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உயிர்களை காப்பாற்றக்கோரி கெஞ்சியதாகவும் தற்போதைய செய்திகள் வெளிவந்துள்ளன.

எத்தனைக்கெஞ்சியும், கதறியும் ஒரு நன்மையும் விளையவில்லை. இஹ்சன் ஜாஃப்ரி உள்பட 72 பேர் துள்ளத்துடிக்க கொல்லப்பட்டனர். முதியவர் ஜாஃப்ரி துண்டு துண்டாகக் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது ஆணுறுப்பையும் வெட்டிச்சிதைத்து நெருப்பிலிட்டு கொளுத்தினர். இஹ்சான் ஜாஃப்ரி வாழ்ந்த குல்பர்க் சொஸைட்டி பங்களா மயான அமைதி குடிகொண்ட சாம்பல்மேடாக மாறிவிட்டது.

குஜராத் இனப்படுகொலைகளில் குறிப்பாக இஹ்சான் ஜாஃப்ரி கொல்லப்பட்ட குல்பர்க் படுகொலைகளில் மோடியின் நேரடிசதி இருப்பதாகவும் மோடியின் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்திய தண்டனைச்சட்டம் 120B 114r/w 302 IPC மற்றும் தவறாக தகவல் களை உருவாக்கி வழங்குதல் (177IPC) தவறான அறிக்கைகள், தவறான ஆதாரங்கள் கொடுத்தல் (199 IPC) குற்றம் இழைத்தவர்கள் குறித்த தவறான தகவல்களை வழங்குதல் (203 IPC), வழிபாட்டுத் தலங்களை சிதைத்தது தொடர்பான குற்றச் செயல் (295 IPC) உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி உள்ளிட்ட 62 பேர் மீதும் சுமத்தப்பட்டன.

2002 பிப்ரவரி 27 ஆம் தேதி தலைநகரில் மோடி தலைமையில் கூடிய உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் படுகொலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக உத்தரவிடப் பட்டதை முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி தனது பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டார். இந்த பிரமாண வாக்குமூலம் உள் ளிட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஜாகியா ஜாஃப்ரி தனது 100 பக்க குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்துள்ளார்.

அந்த குற்றச்சாட்டுப்பட்டியலில் ஜாகியா ஜாஃப்ரி விடுத்திருக்கும் வினாக்கள் அனைத்தும் எரிமலை ரகத்தைச் சேர்ந்தவை.

கோத்ரா ரெயில் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பது உண்மை. அது மட்டுமின்றி பலியானவர்களின் சிலரின் உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருந்தும் எல்லா பிணங்களையும் வைத்து அகமதாபாத்தில் வெறியூட்டும் ஊர்வலம் நடத்தியது ஏன்? --உள்ளிட்ட முக்கிய வினாக்களை ஜாக்கியா ஜாஃப்ரி தனது குற்றச்சாட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

2006 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் மோடி மீதான குற்றச்சாட்டுக்களை மோடியின் வீட்டுக்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஜாகியா ஜாஃப்ரி கோரினார். ஆனால் மோடியின் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கூட பதிவு செய்ய மறுத்தது. மோடி, மீதான காவல்துறையின் புறக்கணிப்பைக் கண்டு சற்றும் அஞ்சாமல் ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றம் சென்றார். தனது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள், அரிஜித் பசாயத் மற்றும் ஏ.கே.கங்குலி இருவர் கொண்ட பெஞ்ச் ஜாகியாவின் கோரிக்கைகள் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழுவை ---Special Investigation Team (SIT)---  நியமித்தது. இக்குழு மூன்று மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) தனது விசாரணையின் முக்கியப் பகுதியாக குஜராத் முதல்வர் மோடியை விசாரிக்க அழைப்பாணை (சம்மன்) அனுப்பிது. 

ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு கொடுத்திருக்கும் அழைப்பாணையை ஏற்று மோடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையின் முன்பு நேர் நிற்பாரா (!?!) என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.

குஜராத் இனப்படுகொலையின் சூத்ரதாரியே மோடி தான் என மனித உரிமை ஆர்வலர்கள் பல்வேறு மட்டங்களிலும் போராட்டக்குரல் எழுப்பியபடி இருப்பினும் மோடி நல்லவர்போல் வேடமிட்டு தருக்குடன் நடமாடினார்.

மோடி ரொம்ப நல்லவர் என ஊடகங்கள் பல (தமிழ் நாட்டின் சில பத்திரிக்கைகள் உள்பட) வலிந்து பொய்ப்பிரச்சாரத்தை பரப்பின. இருப்பினும் மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையினை ஏற்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மோடியை தங்கள் நாட்டின் உள்ளே நுழைய அனுமதி மறுத்தன.

இந்தியா விடுதலைப் பெற்று 62 ஆண்டுகளாகியும் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு ஒரு முதலமைச்சருக்கு இனப்படுகொலைக் குற்றஞ்சாட்டி சம்மன் அனுப்பப்பட்ட நிகழ்வு அதுவே முதல் முறை. 

2010 மார்ச்சில் ஒன்பது மணிநேரங்கள் நடந்த அந்த விசாரணையில் பல கேள்விகளுக்கும் விடையளித்த மோடியின் பதில்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை உச்ச நீதி மன்றத்தில் கடந்த வருடம் மே மாதம் சீலிடப்பட்ட உரையில் தரப்பட அன்றே பிரபல பத்திரிகைகளில் மோடி குற்றமற்றவர் என்றும் அதவானி தன் வலைத்தளத்தில் 'தர்மம் வென்றது' என்று என்னன்னவோ எழுதி மோடியை புகழ்ந்து ஆனந்தக்கூத்தாடினார்.

ஆனால், இவை அத்தனையையும் மவுனமாய் வேடிக்கை பார்த்தது SIT..!?!

ஆனால், அந்த அறிக்கை இப்போது தெஹல்காவால் 'சுடப்பட்டு' ( TEHELKA has scooped the sensational 600-page inquiry report into Modi’s alleged role in the 2002 massacre.) இப்போது வெட்டவெளிச்சமாக்கப்பட்டு விட்டது..! 
இப்போதும், இவை அத்தனையையும் மவுனமாய் வேடிக்கை பார்க்கிறது SIT..!?!

பாரபட்சமாக நடந்துக் கொண்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும், பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்தும் கலவரத்திற்கு உதவியதாக மோடி மீது குற்றஞ்சாட்டி எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் கூறியுள்ளது. இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதிலும், வகுப்புவெறியை தூண்டிவிட்ட பத்திரிகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் மோடி தோல்வியடைந்தார் என அவ்வறிக்கை கூறுகிறது. மேலும் கலவரத்தை தூண்டும் விதமாக அவர் பேசினார் என்றும் குற்றம் சாட்டுகிறது.

இங்கே தொடர்ந்து அதைப்படித்துப்பார்த்தால் அதிர்ச்சியோ அதிர்ச்சி..! 

Reactions on Tehelka’s report : (இதைப்பற்றி சில பிரபலங்களின் கருத்துக்கள்)

மோடி குற்றவாளிதான் என்று தெளிவாக மோடியின்  வண்டவாளம் அனைத்தும் தண்டவாளத்தில்...! புட்டு புட்டு வைத்து இருக்கிறது SIT. 

(என்னால் முடிந்தவரை தெஹல்கா வெளியாக்கிய SIT அறிக்கையை தெஹல்காவிலிருந்து தமிழாக்கப்படுத்தி, கீழே  பின்னூட்டங்களாக 6 to 20 & 26-ல் கொடுத்திருக்கிறேன்)

எனக்குப்புரியவில்லை...! எனக்குப்புரியவில்லை...!

இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு இத்தனைக்காலம் உச்சநீதி மன்றம் சும்மா உட்கார்ந்திருந்தது ஏன் என்றே புரியவில்லை..!

தேஹல்காவில் வெளியான அறிக்கையை நீதிமன்றமோ, புலனாய்வு குழுவோ பிஜெபியோ மோடியோ பொய் என மறுக்காதது ஏன் என்றே புரியவில்லை..!

இந்த  அறிக்கை தேஹல்காவால் வெளியிடப்பட்டு இரண்டு நாட்களாகியும் எந்த ஊடகத்திலும் (பத்திரிக்கை / வெகுஜன தொலைகாட்சி) அதுபற்றியசெய்தி வரவில்லை என்பது ஏன் என்றே புரியவில்லை..!

எதிர்க்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க அருமையான வாய்ப்பு கிடைத்தும் காங்கிரசின் ஆகில இந்திய தலைவர் முதல்... காங்கிரசின் கிராம வார்டு கவுன்சிலர் வரை வாயை மூடிக்கொண்டு இருப்பது ஏன் என்றே புரியவில்லை..!

நாட்டை ஆள்வது காங்கிரசா அல்லது பிஜேபியா என்றே புரியவில்லை..!

பாராளுமன்றத்தை பலநாட்கள் தொடர்ந்து அல்லோலகல்லோல படுத்தி ராசாவை ராஜினாமா செய்யவைத்து மிகப்பெரிய ஊழல் அவமானக்கரையை திமுக மீது  ஏற்படுத்திவிட்ட பாஜகவை பழிவாங்க நல்ல வாய்ப்பு கிடைத்தும் திமுகவின் முதல்வர் முதல் முக்குச்சந்து தொண்டர் வரை மோடிபற்றி வாயை திறக்காமல் இருப்பது ஏன் என்றே புரியவில்லை..!
 
தமிழத்தை ஆள்வது மஞ்சள்துண்டா அல்லது காவித்துண்டா தெரியவில்லை..!

முந்தைய தெஹல்காவின் விடியோ ஆதாரங்களே 'தனியார்' என்பதால் தூங்கிக்கொண்டு இருக்க, இப்போது அரசே நியமித்த உச்சநீதிமன்றம் அமைத்த புலனாய்வுக்குழு அறிக்கையும் தூங்குமானால்... என்னதான் நடக்குது...?

ச்சே...! மூவாயிரம் அப்பாவி மக்களின் உயிருக்கு இவ்வளவுதானா மதிப்பு...?

ஆனால் தமிழக முஸ்லிம்கள் விடப்போவதில்லை....

குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பு உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட ”எஸ் ஐ டி” சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் மோடி அரசை உடனே டிஸ்மிஸ் செய்து மோடியை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 
 
இடம் – கலக்டர் அலுவலம்.
நாள் – 5-2-2011
...இன்ஷாஅல்லாஹ்.
நேரம் – மாலை 4.30

அழைப்பு : த.த.ஜ.

பிற்சேர்க்கை : ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட  முழக்கங்கள்... (நன்றி : tntj.net

தூக்கிலிடு! தூக்கிலிடு!
நரேந்திர மோடியை தூக்கிலிடு!
மரண வியாபாரி மோடிக்கு
உதவியாக இருந்தவர்கள்
குஜராத் அரசு செயலர்கள்
காவல்துறையின் ஓநாய்கள்
அத்தனை பேரையும் உடனடியாய்
பதவி நீக்கம் செய்து விடு!
சட்டப் படியாய் அவர்கள் மீது
வழக்குப் பதிவு செய்து விடு!
கயவர்கள் சேர்ந்த சொத்தை எல்லாம்
உடனே ஜபதி செய்திடு!
காவி கும்பலின் ரவுடித்தனத்தால்
வெட்கிக் குனியுது மனிதஇனம்!
பசுவதைக்கெதிராய் கோஷம் போட்டு
மனிதனைக் கொல்லும் பாதகனே!
இரக்கமற்ற அரக்கனே! இரக்கமற்ற அரக்கனே!
இரக்கம் என்பது மனிதப் பண்பு
மிருகத்திற்கும் அது உண்டு
நீ மனிதனுமில்லை மிருகமுமில்லை
என்ன இனம் நீ சொல்லடா?
கயவர் குலம் தான் உன் குலமா?
மௌனமென்ன மௌனமென்ன?
ஜெயலலிதா அம்மையே
போயஸ் தோட்டம் அழைத்து வந்து
விருந்து கொடுக்கப் போறாயா?
மௌனமென்ன மௌனமென்ன?
கருனாநிதி முதல்வரே
டெல்லி சென்று மோடியோடு
போஸ்கொடுக்க தெரியுதோ?
எமதருமை ஹிந்து மக்களே! எமதருமை ஹிந்து மக்களே!
காவி என்ற சொல்லுக்கு
களங்கம் சேர்க்க விடவேண்டாம்
சாது என்ற பேரிலே சூது செய்ய விடவேண்டாம்
டிஸ்மிஸ் செய்! டிஸ்மிஸ் செய்!
மத்திய அரசே டிஸ்மிஸ் செய்!
அரசியலமைப்பிற் கெதிராய் நடந்த
மோடி அரசை டிஸ்மிஸ் செய்!
சுப்ரீம் கோர்ட்டே! சுப்ரீம் கோர்ட்டே!
வெட்கமாக இல்லையா?
எட்டு ஆண்டு ஆன பின்னும்
விசாரணை இன்னும் முடியலையா?
ரகசியம் என்ன ரகசியம் என்ன?
சுப்ரீம் கோர்ட்டே ரகசியம் என்ன?
சிறப்பு புலனாய்வு அறிக்கையை
மறைக்கும் அளவிற்கு ரகசியம் என்ன?
நீதியும் உண்மையும் ரகசியத்தோடு
ஒன்று சேர முடியாதே!
முஸ்லீம்கள் மீது எத்தனையோ
பொய்வழக்கு போட்டீர்கள்
அத்தனை வழக்கிலும் உடனடியாய்
கைது செய்து அடைத்தீர்கள்!
மோடி என்றால் தனிநீதி
முஸ்லீம்களுக்கு எது நீதி!
அத்துல் பிஹாரி வாஜ்பாயி
அத்வானி, மோடி, கட்காரி
ஆர் எஸ் எஸ் அயோக்கியர்கள் அனைவரும்
இரத்தம் குடிக்கும் கட்டேரி!
வேதம் ஓதும் சாத்தான்கள்
சுப்ரமனிய சாமியே, இரட்டை வேட சோவே
எரிக்கபட்ட உயிர்களுக்கும்
துடிதுடித்த உயிர்களுக்கும்
பரிதவித்த உறவினருக்கும்
பதில் சொல் பதில் சொல்
பயங்கரவாத அமெரிக்காவே
உன்னை பார்த்து பயங்கரவாதி என்றதுவே
வெட்கமாக இல்லையா வெட்கமாக இல்லையா
திருப்பி அனுப்பட்டாயே
அனுமதி மறுக்கப்பட்டாயே
செருப்படிகள் பட்டாயே
வெட்கமாக இல்லையா வெட்கமாக இல்லையா?

Thanks for the sources : Tehelka, intjonline, tntj.net

No comments:

Post a Comment