"கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு ஆக்சிடெண்ட்
ஆச்சி, அதுல என் படிப்பு நரம்பு கட்டாயிடிச்சு, அதுக்கு முன்னாடி எல்லாம்
நான் நிறைய படிப்பேன்.இப்ப படிக்க முடியறதில்ல...பொன்னியின்
செல்வன்,துணையெழுத்து எனக்கு புடிச்ச புத்தகங்கள்"என முன்பு படித்ததை
மட்டுமே பெருமைபேசிக்கொண்டிருந்த காலம் இப்போது மாறி இருக்கிறது.
ஒரு குழந்தையின் வரவிற்கு பின் ஒரு ஆண் அல்லது பெண்ணின் வாழ்க்கை புரட்டிப்
போடப்படுவது போல,இந்த வலைப்பூ வந்த பிறகு எங்கள் வாழ்க்கைப் பாதை மிக
மாறியிருக்கிறது.
எங்கள் வலைப்பூ ஒரு குழந்தை.
உலகத்து சந்தோஷங்களை எங்களுக்கும், எங்கள் சந்தோஷங்களை உலகத்திற்கும்
அடையாளம் காட்டிய உயிரோவியம்.
எங்கள் வலைப்பூ ஒரு குழந்தை,
சூல் கொள்ளாது சுமந்த குழந்தை,
மனதில் சுமந்த குழந்தை. உயிர் கொண்ட ரோஜா.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.
நீங்கள் எங்களின் வலைப்பூ குழந்தையைக் கொண்டாடுகிறீர்கள்.
இங்கே நாங்கள் மற்றவர்களால் கொண்டாடப்படுகிறோம்.
வலைப்பூவால் எங்களுக்கு ஒரு சமூக அங்கீகாரம்கிடைத்திருக்கிறது.
ஆசிரியர்களைப் பார்த்து , பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிக் கொண்டிருந்த
நாங்கள் இப்பொழுதெல்லாம், அவர்களுடன் கதைத்து,கலாய்த்து, உரையாடி,
வலைப்பூவுக்கான உரம் சேர்க்கிறோம்.
நிறைய படிக்கிறோம் , நிறைய யோசிக்கிறோம்...
வகுப்பறையில் அமைதிக்காக்கிறோம். வலைஉலகில் வாலாட்டுகிறோம்..
வகுப்பறையில் வாலாட்டினால் நறுக்கப்படுகிறது.
வலைப்பூவில் வாலாட்டினால் வாக்குகள் விழுகிறது.
எப்படியோ ஆன்லைனில், ஆள் இல்லாது அநாதையாய் கிடந்த எங்கள்
ரோஜாப்பூந்தோட்டத்தில்; இப்போது ஆட்கள் நடமாட்டம் தென்படுகிறது.
கொஞ்சம் நம்பிக்கையும் சுடர் விடுகிறது.ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தும்
பதிவுலகில்,இந்த வாயுள்ள பிள்ளைகள், வார்த்தைகள் உள்ள பிள்ளைகளாய்
பிழைத்துக்கொள்வோம் என நம்பிக்கையும் வருகிறது.
பயப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் இழப்பதற்கு ஒன்றுமில்லை.
இனி அச்சமடையவும் ஒன்றுமில்லை, ஏனெனில் வலைஉலகில் நாங்கள் அநாதைகளும்
அல்ல...
எது எப்படியோ, புத்தகம் வாசித்தலை நிறுத்தியதால் இற்றுப்போயிருந்த "படிப்பு
நரம்பு" மீண்டும் முழுவேகத்தில்;புது ரத்தம் பாய்ச்சப்பட்டு...
அதற்காகவும், ஆரம்பம் முதல் தொடரும் உங்களின் அன்புக்காகவும்,தமிழர்கள்
வாழும் திசைகள் எட்டும் நோக்கி எங்கள் நன்றி கலந்த வணக்கங்கள்.
(.... அது சரி, பதில் வணக்கம் சொல்லாம போனா எப்படி?வணக்கத்த வார்த்தைல
சொல்லுங்க)
No comments:
Post a Comment