Digital Time and Date

Welcome Note

Sunday, April 29, 2012

கோழிக்கறி சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சிறுமிக்கு ரூ.40 கோடி நஷ்ட ஈடு தர கோர்ட் உத்தரவு.




ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரை சேர்ந்தவர் மோனிகா சமான். கடந்த 2005-ம் ஆண்டு 7வயது சிறுமியாக இருந்தபோது இவள் தனது குடும்பத்தினருடன் அங்கு கே.எப்.சி. என்ற துரித கோழிக்கறி உணவு கடைக்கு சென்றாள். அங்கு ஏற்கனவே வறுத்து பேப்பரினால் சுற்றப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கோழிக்கறியை சாப்பிட்டாள்.

... அவருடன் குடும்பத்தினரும் சாப்பிட்டனர். அதை சாப்பிட்ட அவர்களுக்கு சல்மோனல்லா என்ற நச்சு தாக்கியது. இதனால் சிறுமி மோனிகா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மூளை பாதிக்கப்பட்டது. அதில், மிகவும் பாதிக்கப்பட்ட மோனிகா நடக்க முடியாமலும், பேச முடியாமலும் படுக்கையில் விழுந்தாள். எனவே அவளது வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கியது.

இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் நியூ சவுத்வேல்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கே.எப்.சி. நிறுவனம் பாதிக்கப்பட்ட சிறுமி மோனிகா குடும்பத்துக்கு ரூ.40 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. இந்த நிறுவனம் தனது பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டு சிறுமிக்கும் அவரது குடும்பத்தினரின் உடல் நல கேட்டை விளைவித்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்து இருப்பதாகவும் எனவே, இது குறித்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கே.எப்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.
See More

No comments:

Post a Comment