Digital Time and Date

Welcome Note

Sunday, April 29, 2012

பயங்கரவாத இயக்கத்தை புகழும் பயங்கரவாதியின் கடிதம் !!!



பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய இயக்கம் என மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த மஹாராஷ்ட்ரா முன்னாள் ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேயால் தடைச் செய்யவேண்டும் என பரிந்துரைச் செய்யப்பட்ட ஹிந்து ஜாக்ரதி சமிதியை குஜராத் முஸ்லிம் படுகொலை பயங்கரவாத முதல்வர் நரேந்திரமோடி புகழ்ந்து தள்ளிய கடிதத்தை டெஹல்கா பத்திரிகை வெளியிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு தானே தியேட்டர் குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு ஆகியவற்றில் தொடர்புடைய சனாதன் சன்ஸ்தான் அமைப்புடன் ஹிந்து ஜாக்ரதி சமிதியையும் தடைச் செய்யவேண்டுமென கர்காரே தான் கொல்லப்படுவதற்கு முன்பு மத்திய அரசுக்கு பரிந்துரைச் செய்திருந்தார்.

தானே குண்டுவெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் ஜாக்ரதி சமிதிதான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிந்து ஜனஜாக்ரதி சமிதியை புகழ்ந்தும், அவ்வமைப்புக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் மோடி தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

"இனிமேலும் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். தேசியவாதிகளான(?) சன்னியாசிகளும், தலைவர்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய நேரம் இதுவாகும். தேசத்தை பிரிக்கும் தீவிரவாதிகளை தோற்கடிக்க தேசத்துடனான உறுதியையும், ஆதரவையும் சக்திப்படுத்த வேண்டும்.

ஹிந்து ஜனஜாக்ரன் சமிதி அஹ்மதாபாத்தில் நடத்தும் ஜனஜாக்ரன் பேரணியும், தர்மசபையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதன் அமைப்பாளர்களுக்கு நான் அனைத்துவிதமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என குஜராத்தி மொழியில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் மோடி குறிப்பிடுகிறார்.

நவி மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹிந்து ஜன ஜாக்ரதி சமிதியின் உறுப்பினர்களுக்கு தாம்ஸ் மாவட்டத்தில் தனது ஆசிரமமான சபரியில் தலைமறைவாக வாழ ஏற்பாடுகள் செய்ததாக குண்டுவெடிப்புகள் வழக்கில் கைதான அஸிமானந்தா தெரிவித்திருந்தான்.

அஸிமானந்தவுடனான நரேந்திர மோடியின் தொடர்புக் குறித்து ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த இன படுகொலைக்கு காரணமான மோடி தொடர்ந்து உலக அரங்கில் அவமானப்பட்டு கொண்டு இருக்கிறான்

வாஷிங்டன்: எந்த ஒரு மாநில முதல்வரும் இந்த அளவுக்கு இதுவரை அவமானபட்டதில்லை அதுவும் இது நான்காவது முறை.

நரேந்திரமோடிக்கு விசா மறுத்ததில் மாற்றமில்லை என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க விசா வழங்குதுறையின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் புதனன்று வழமையான செய்தியாளர் சந்திப்பில் இச்செய்தியை உறுதிபடுத்தினார். "எங்கள் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை"என்றார் அவர்.

கடந்த இருவாரங்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ வால்ஷ் என்பவர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரிக்கு எழுதிய கடிதத்தில் இது பற்றி வினவியிருந்தார். அவ்வினவுக்கு விடையிறுக்கும் விதமாகவே நூலண்ட் இவ்வாறு கூறினார். "இவ்விதயத்தில் பொதுவான விதிமுறைகளின்படியே செயல்படுகிறோம்" ஒரு இனப்படுகொளை நடக்க காரணமானவராக இருக்கிறார் மோடி என்றார் அவர்.

இந்த அறிவிப்பிற்கு முன்னதாக, இந்திய அமெரிக்க முஸ்லிம் சங்கம் என்னும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைப்பு, மோடிக்கு விசா வழங்குவதில்லை என்று 2005ல் அமெரிக்கா எடுத்த முடிவை மாற்றக் கூடாது என்று கோரியிருந்தது.

தனது ஆட்சியில் ஒரு சமூகத்தையே கொன்று குவித்தான் (தமிழின இனப்படுகொலை) ராஜபக்சே, இதேபோல்தான் இந்த வந்தேறி மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரேந்திரமோடியின் உதவியுடன் படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் செய்தார்கள்., இந்த கொடிய செயல்களை முன்னின்று நடத்தி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழித்த நரேந்திர மோடியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அவனை தூக்கிலிட வேண்டும். மனிதாபிமானம் இன்னும் மீதமிருக்கிறது என்பதை நிரூபிக்க இது ஒன்றுதான் தற்போதைய தீர்வாகும்.

சத்தியமா சொல்லுறேன் இவன் எல்லாம் உருபடவே மாட்டான்

No comments:

Post a Comment