Digital Time and Date

Welcome Note

Wednesday, April 18, 2012

ஜெ -கலைஞர் ரகசிய ஒப்பந்தம்



இது ஏதோ புதிய சேதின்னு உ.வ பட்டுராதிங்கண்ணே. எதிர்கட்சியா இருக்கிறச்ச ஆளுங்கட்சியோட “ஒத்து” போற மேட்டரை கலைஞரின் நீண்ட அரசியல் வரலாற்றில் பார்க்கலாம். எம்.ஜி.ஆர் காலத்துலயே “ஒரு சில” விஷயங்களை” கண்டுக்காம விட்டுர்ரது கலைஞரோட ஸ்டைல். பல்கேரியா,பால்டிக்கா ஊழல்லருந்து பல விஷயங்களை இதுக்கு உதாரணமா சொல்லுவாய்ங்க. இப்படி கண்டுக்காம விடனும்னா கலைஞரை கண்டுக்கிடனும்னு ஒரு விதி பிரச்சாரத்துல இருக்கு.
இப்பம் ஜெ மேட்டர்ல கூட இது தொடருது போல. என்ன ஒரு வித்யாசம்னா ஆளுங்கட்சியா இருக்கிறப்பயே ஒப்பந்தம் தொடர்ந்து கிட்டுதான் வந்தது. மிடாஸுக்கு டாஸ்மாக் ஆர்டர்.
லேட்டஸ்டா சொல்லனும்னா சசிகலா மேட்டரை சொல்லலாம். கலைஞர் “ஃப்ரீயா” இருந்திருந்தா இந்நேரத்துக்கு கிளிச்சிருப்பாரு. சசிகலா மேட்டர் என்ன சாதாரண மேட்டரா? கூட்டு கொள்ளையில பங்கு தகராறு. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டங்கறாப்ல ஜெ-சசி முட்டிக்கிறாய்ங்கன்னா கலைஞருக்கு இன்னா மேரி சான்ஸு.ஆனால் தாத்தா எதுவும் கண்டுக்கறாப்ல இல்லை.
மேட்டர் இன்னாடான்னா அம்மா கலைஞரை கண்டுக்கினாங்க போல. இந்த அணு உலை மேட்டரை எடுத்துக்கங்க. தினமலர்ல வர்ர செய்திக்கும் – கலைஞர்/ சன் நியூஸ்ல வர்ர செய்திக்கும் அதனோட தொனிக்கும் பெருசா வித்யாசமே இல்லை.
பரிதி இளம்வழுதி கட்சிக்குள்ள போர்க்குரல் எழுப்பறாரு. அவர் வீட்ல ரெய்டு நடக்குது. இதெல்லாம் ஒப்பந்தமில்லாம வேறென்ன?
கலைஞரோட சைக்காலஜி வித்யாசமான சைக்காலஜி. தாத்தா தெனாலிராமன் பூனை மாதிரி.ஒரு தாட்டி நாக்கு வெந்து போனா அந்த திக்கு திசைக்கு கூட போகமாட்டாரு. எமர்ஜென்சி காலத்துல இந்திரா காந்தியை எதிர்த்து பொங்கல் வச்சுக்கிட்டதுலருந்து சென்ட்ரல் கவர்மென்டுன்னாலே தாத்தாவுக்கு குளிர்.சுரம்.
விடுதலைப்புலிகள் மேட்டர்ல அளவுக்கு மீறி இழைஞ்சு ஆட்சிய பலி கொடுத்ததுலருந்து விடுதலைப்புலிகள் மேட்டருன்னா நடுக்கம்.
எம்.ஜி.ஆரே உசுரோட வந்து கலைஞரண்ணே .. நான் இருக்கேன் மோதிப்பார்த்துரலாம்னா கூட தாத்தா அம்பேலுதேன்.
தமிழ் நாடா நாதியத்து கிடக்குது . கட்சியா கலகலத்து கிடக்குது. குடும்பமா நிலை குலைஞ்சு கிடக்குது. கு.ப குடும்ப நலம் கருதியாவது சசி கலா மேட்டர்ல தூள் பண்ண வேண்டிய தாத்தா ” எவனோ செத்தான் எனக்கென்ன போச்சு”ன்னு இருக்கிறாருன்னா இன்னா அருத்தம்.
அம்மா அய்யாவை கண்டுக்கிட்டாய்ங்க போல. இந்த மேட்டர்ல அம்மா மட்டும் ஒழுங்குன்னு நினைச்சுராதிங்க. அம்மாவுக்கு ஆதி நாட்கள்ளருந்தே ஒரு கொள்கை. கொய்யால கண்ணால வீடா கண்ணால பொண்ணா இருக்கனும். கருமாதி வீடா பொணமா இருக்கனும். ரெண்டும் இல்லியா நான் கொட நாடு போறேன்.
ஜா -ஜென்னு கட்சி பிளந்து கிடந்த சமயம் எம்.எல்.ஏ பதவிக்கு ராஜினாமா லெட்டர் எளுதி வச்சிருந்த பார்ட்டிதானே அம்மா. அப்பாறம் பார்த்தா ரஜினி மாதிரி முட்டி தேஞ்ச சனம் தைரியலட்சுமின்னு லாலி பாடறாய்ங்க.
நம்ம சன நாயகத்துல எரியற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு பார்த்து ச்சூஸ் பண்ற நிலைமை தான் இருக்கு. இதுல ரெண்டு கொள்ளியுமே மொள்ளமாரி கொள்ளியா இருக்கு.
சரி ஒளியட்டும் இதுக்கப்பாறம் எதுனா சாய்ஸ் இருக்கான்னு பார்த்தா விசயகாந்த். வை.கோ. வை.கோவாச்சும் அவார்ட் ஃபிலிம் மாதிரி .விசயகாந்துக்கு என்ன கேடு.
பலீஞ்சடுகுடு விளையாட வேண்டிய நேரத்துல பார்ட்டிய காணவே காணோம். இதான் தமிழ் சனங்க தலை எழுத்து போல.

No comments:

Post a Comment