தமிழகத்தில் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ளது நமக்கு தெரியும்.
இந்த நிறுவனம் உருவானதர்க்குப் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் எத்துனைப் பேருக்குத் தெரியும்.
ஒரு நாள் நள்ளிரவு...
ஜவஹர்லால் நேருவின் கல்கத்தா இல்லம்.
எங்கேயோ ஒரு நிகழ்ச்சி சம்பந்தமாக வெளியேச் சென்ற நேருஜி பின்னிரவு வரை
வீடு திரும்பவில்லை. நேருவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார் அந்தப்
பேரும் தொழிலதிபர்.
அவர் வள்ளல் அழகப்பச் செட்டியார்.
மிகவும் தாமதமாக வீடு திரும்பிய நேருஜி தன் வீட்டு வரவேற்பறையில் காத்துக் கொண்டிருந்த அழகப்பரைக் கண்டதும் ஆச்சர்யமடைந்தார்.
"அழகப்பரே.. என்ன இந்த நள்ளிரவில்?"
மத்திய அரசாங்கம் ஒரு மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க யோசித்துக்
கொண்டிருப்பதாக அறிந்தேன். எங்கள் காரைக்குடிப் பகுதி மிகவும்
பிந்தங்கியப் பகுதி. நான் முந்நூறு ஏக்கர் நிலமும், பதினைந்து லட்ச
ரூபாயும் நன்கொடையாகத் தருகிறேன். எங்கள் பகுதியில் அந்த ஆராய்ச்சி
நிலையத்தை அமைத்துக் கொடுங்கள் என்றார். கையேடு செக்கும்
கொண்டுபோயிருந்தார்.
தான் வாழும் ஊர் வளர்ச்சியடைந்து மக்கள் முன்னேற வேண்டும் என விரும்பிய அந்த நல்ல உள்ளம் எத்துனைப் பேருக்குத் தெரியும்?
No comments:
Post a Comment