Digital Time and Date

Welcome Note

Monday, April 16, 2012

இதைப்படிச்சா கண்டிப்பா உங்களுக்கு காரோ பைக்கோ வாங்கத்தோணும்






வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணங்களில் ஒன்று கார் வாங்குவது. பெரும் கனவுகளுடன் கார் வாங்க ஷோரூம்களுக்கு செல்லும்போது அங்கு தரும் ராஜ உபச்சாரம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். ஆனால், சில டீலர்களில் கார் வாங்கிய பிறகு வாடிக்கையாளர் சேவை என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.
கார் வாங்குவதற்கு முன் அந்த டீலரை பற்றிய விபரங்களை நன்கு தெரிந்து கொண்டு செல்வது அவசியம். வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிறது, அலுவலகத்திலிருந்து மூன்றாவது கட்டிடம் என்று ஏதாவது ஒரு காரணத்தை நமக்கு நாமே சமாதானத்திப் படுத்திகொண்டு சென்று வாங்கினால் ஆபத்து சமயங்களில் படாதபாடு பட வேண்டியதாகிவிடும்.
பெரும் கனவுகளோடு வாங்கிய காரை சில சமயங்களில் ஏண்டா வாங்கினோம் என்ற அளவுக்கு கசப்பான அனுபவமாக அமைந்துவிடும். பெங்களூரை சேர்ந்த வாசகர் ராஜேஷ் இதுபோன்று தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்நது கொள்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூர், மைசூர் சாலையிலுள்ள ஹூண்டாய் ஷோரூமில் ஐ10 கார் வாங்கினேன். கார் வாங்கும்போது கிடைத்த மரியாதை என்னை சிலிர்க்க வைத்தது. மேலும், நான் ஆசை ஆசையாய் தேர்வு செய்து வாங்கிய ஐ10 காரின் அழகு எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.
போக்குவரத்து நெரிசலில் ஓட்டுவதற்கும், பார்க்கிங் செய்வதற்கும் மிக எளிதாக இருந்தது. ஆனால், எனது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. கார் வாங்கி 15 நாளில் சிக்னலில் திடீரென நிறுத்த முயன்றபோது முன்னால் நின்ற லாரி மீது இடித்துவிட்டது. இதில், எனது கார் சேதமடைந்துவிட்டது.
உடனடியாக, காரை டீலருக்கு காரை ஓட்டிச்சென்றேன். அங்கு காரை சரிசெய்து தருவதற்கு 3 நாட்கள் ஆகும் என்று தெரிவித்தனர். நானும் ஒப்புக்கொண்டு காரை விட்டு வநதுவிட்டேன். ஆனால், அதற்கு பிறகு போனில் தொடர்பு கேட்டபோது சரியான தகவல் இல்லை. 
எனவே, 3 நாட்கள் கழித்து ஷோரூமுக்கு சென்று விசாரித்தபோது ஏதேதொ காரணங்களை கூறினர். பின்னர் சர்வீஸ் சூப்பர்வைசரிடம் சிறு வாக்குவாதம் செய்துவிட்டு வந்துவிட்டேன். இன்னும் 3 நாளில் கொடுப்பதாக சமாதானம் செய்தனர்.ஆனால், 10 நாட்கள் ஆகியும் சரிசெய்து தரவில்லை. பின்னர், ஷோரூமுக்கு அலையாய் அலைந்து சண்டை போட்ட பிறகு ஒரு வழியாக 15 நாட்களில் காரை டெலிவிரி கொடுத்தனர்.
நானும் கார் கைக்கு கிடைத்த மகிழ்ச்சியில் வீட்டிற்கு ஓட்டி வந்துவிட்டேன். வீட்டிற்கு வந்து பார்த்தால்தான் காரில் அவர்கள் முழுமையாக எந்த ரிப்பேரும் செய்யவில்லை என்று தெரிந்தது. பிரேக் டேஞ்சர் லைட்டுகள் எரியவில்லை, உள்பக்கத்திலிருந்து பின்பக்க கதவை திறக்கம முடியவில்லை, சைல்டு லாக் வேலை செய்ய வில்லை என அடுத்தடுத்து எலக்ட்ரிக்கல் பிரச்னைகள். 
உடனடியாக டீலருக்கு போன் போட்டு விபரத்தை தெரிவித்தேன். அவர் நாளை மெக்கானிக்கை அனுப்பிவைத்தப்பதாக கூறினார். ஆனால், மறுநாள் மதியம் வரை மெக்கானிக் வராததால் ஷோரூம் சூப்பர் வைசரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டியதாகிவிட்டது.
அதன்பிறகு ஒரு மெக்கானிக் வந்தார். புதிய பேட்டரி ஒன்றை எடுத்து வந்து எல்லாவற்றையும் சோதனை செய்து சரிசெய்ய முயற்சித்தார். ஆனால், எந்த பலனும் இல்லை. காரை சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்தால்தான் சரிசெய்ய முடியும் என்று கூறி விட்டார்.
இந்த பிரச்னைகள் ஒருபுறம் இருக்க தற்போது கார் செல்ப் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணுகிறது. அலுவலக பணிகள் காரணமாக காரை எடுத்துச் செல்ல முடியவில்லை. நேரம் கிடைக்கும்போதுதான் காரை சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த பிரச்னையால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஏண்டா கார் வாங்கினோம் என்று ஆகிவிட்டது என்று ஒரே மூச்சில் கூறி முடித்தார்.
இந்த கசப்பான அனுபவம் ராஜேஷுக்கு மாத்திரமல்ல. பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பின் கிடைக்கும் சேவை இந்த அளவில்தான் உள்ளதாக தெரிகிறது. கார் மட்டுமின்றி இருசக்கர வாகனங்கள் வாங்குவோருக்கும் இதுபோன்ற பிரச்னைகளை அன்றாடம் சந்திப்பதாக கூறுகின்றனர்.
இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க கார் வாங்குவதற்கு முன் டீலரின் சேவை குறித்து ஓர் முழுமையான விசாரணையை போட வேண்டியது அவசியம். விற்பனைக்கு பின் நிறைவான சேவை வழங்கும் டீலரை தேர்வு செய்து வாங்கினால் இதுபோன்ற கசப்பான அனுபவங்களை தவிர்க்கலாம்.
தற்போது மார்க்கெட் போட்டியில் ஷோரூமுக்கு வரும் வாடிக்கையாளரை தக்கவைப்பது டீலர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. அதேவேளை, விற்பனைக்கு பின் சேவையிலும் டீலர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கூறுகின்றனர்.
மேலும், அனுபவமில்லாத மெக்கானிக்குளாலும், அதிக பணிச்சுமை,ஆட்கள் பற்றாக்குறை ஆகியவையால் நிறைவான சேவையை வழங்க முடியாமல் டீலர்கள் தவிக்கின்றனர். அது அவர்கள் பிரச்னை. நமக்கு நிறைவான சேவை தேவையென்றால் டீலரை பற்றி தெரிந்து கொண்டு வாங்குவதுதான் புத்திசாலித்தனம்.

No comments:

Post a Comment