கக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும் கலைஞன்-விஜய் மீது பாரதிராஜா தாக்கு
ஆரம்பித்துவிட்டது மறுபடியும் ஒரு மன அதிர்வு போராட்டம். இந்த முறை
கம்பம்,தேனி, இடுக்கி என்று மலையாள கரையோரத்தில்தான் இந்த
மனப்போராட்டமும்,மல்லுகட்டும்.
முல்லை பெரியாறு பிரச்சனையில் இன்னும் தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்கள்
யாரும் குரல் கொடுக்கவில்லையே என்று பேரார்வத்தோடு கவனித்து வருகிறார்கள்
ரசிகர்கள். பாதி ஹீரோயின்கள் மலையாளிகள் என்பதாலும், தங்களது லொக்கேஷன்
பிரதேசமான கேரளத்தை பற்றி வாயை திறந்தால் மறுபடியும் அந்த ஏரியா பக்கம் தலை
வைத்து படுக்க முடியாதே என்பதாலும் தங்கள் வாயை இறுக்க மூடிக் கொண்டு
மவுனம் காக்கிறார்கள் ஹீரோக்களும்.
இந்த நிலையில்தான் இங்குள்ள முக்கியமான ஹீரோ ஒருவரை பற்றி அதிரடியாக
விமர்சனம் செய்து ஒரு பெரும் புயலை கிளப்பியிருக்கிறார் பழம்பெரும்
இயக்குனர் பாரதிராஜா. முன்னணி புலனாய்வு இதழ் ஒன்றில்
பேட்டியளித்திருக்கும் அவர் கூறியிருப்பது இதுதான்-
கறுப்பு பணம், ஊழல்வாதிகளுக்கு எதிராக தலைநகரில் அன்னாஹசாரே உண்ணாவிரதம்
இருந்தார். இங்கே தமிழ்சினிமாவில் கக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும்
ஒரு கலைஞன் விமானம் ஏறி டெல்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு
தெரிவித்தார். ஏன் இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு
துடிக்கும் தமிழன் அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அந்த நடிகனுக்கு
தேனிக்கு செல்லும் வழிதான் தெரியாதா?
பாரதிராஜா யாரை சொல்கிறார் என்பது இன்னுமா புரியவில்லை?இவருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் விஜய்யும் அவரது ரசிகர்களும்?
No comments:
Post a Comment