Digital Time and Date

Welcome Note

Monday, April 16, 2012

முகப்புத்தகத்தின் (FACEBOOK) மற்றொரு முகம்


Facebook பக்கமொன்றில் கடந்த வாரத்தின் மிக மோசமான நீலப்படக் காட்சிகளும் மிருகவதைக் காட்சிகளும் பயனாளர்களின் செய்தி ஊட்டப் பக்கங்களின் முன்பாகவும் மத்தியிலும் வெளியிடப்பட்டிருந்தன.
இதனால் இந்த சமூக வலையமைப்பினைவிட்டுப் பாரியளவில் வெளியேற்றம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்குப் பயனாளர்களின் blogகளெங்கும் இதுபற்றிய சீற்றமான கருத்துக்கள் உலாவின.
இந்த வெளியீடு பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு இன்னொரு எச்சரிக்கையாக உள்ளதாக சிறுவர் இணைய பாதுகாப்பு வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.
இணைய உலாவிகளைப் பலவீனமாக்கும் ஒரு காரணியாக spam தாக்குதல் உள்ளது. இந்தத் தாக்குதல் நவம்பர் 14 இல் பெருமளவில் செய்தி ஊட்டங்களில் தாக்கமேற்படுத்தியது.
Facebook இதுபற்றி 48 மணித்தியாலங்கள் வரையும் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவேயில்லை.
இதனால் கோபமடைந்த பல Facebook பயனாளர்கள் ருவிட்டருக்குச் சென்று தமது கோபத்தை வெளிப்படுத்தினர். சிலர் தமது கணக்குகளை நிறுத்தப்போவதாகவும் கருத்துத் தெரிவித்தனர்.
இதனைச் செய்த நபரை இனங்காணமுடியாததால் அனோனிமஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டார். இந்த அனோனிமஸ் எனப்படுபவர்கள் தான் பாரிய நிறுவனங்களின், வங்கிகளின் அரசாங்கங்களின் இணையத்தளங்களையும் முகவரியில்லாமல் தாக்குபவர்கள்.
இந்தக் குழுவின் தலைமைத்துவமற்ற நிலையினால் ஒருவர் செய்வது இன்னொருவருக்குத் தெரியாமல் போகின்றது.
Facebook இனை spam மற்றும் மோசமான விடயங்களிலிருந்து பாதுகாப்பதே தமது வேலை என்றும் இதனால்தான் கடந்த வாரம் இத்தாக்குதல் ஏற்பட்டபோது அது உடனடியாகவே தமது குழுவினால் விரைவாக அகற்றப்பட்டதாகவும் Facebook இன்பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
Facebook இவ்வருடத்தில் மென்பொருட் பாதுகாப்பு மற்றும் சிறுவர் ஒன்லைன் பாதுகாப்பு போன்றவற்றை முன்னேற்றும் புதிய பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கியிருந்தது.
தேசிய மொன்பொருட் பாதுகாப்பு விழிப்பு மாதமாகக் கருதப்பட்ட ஒக்ரோபர் முழுவதும் Facebook இனால் இவ்வாறான தாக்குதல்கள்பற்றிய கருத்துக்களைப் பரிமாறவும் தமது நிறுவனத்தின் புதிய பாதுகாப்புக் கருவிகள்பற்றிப் பயனாளர்களுக்கு விளக்கிக்கூறவுமெனத் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை ஒழுங்குபடுத்தவும் செய்தது.
தாம் இவ்வாறான தாக்குதல்களால் பாதிப்படையாத கருவிகளை உருவாக்குவதாகவும் இனிவருங்காலங்களில் இவற்றைத் தடுப்பதற்கான வழிகளைச் செய்வதாகவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் கருத்துத் தெரிவித்தார்.
சமூக வலையமைப்பு மற்றும் இணையப் பாதுகாப்புக் கல்வியைக் குடும்பங்களுக்கு விளக்கிவரும் வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில் Facebook போன்ற சமூக வலையமைப்புக்களைப் பாதுகாப்பதென்பது சாதாரண கணினிப் பாதுகாப்பென்பதைவிடவும் வித்தியாசமானதெனக் குறிப்பிட்டார்.
குடும்பக் கணினியுடன் நீங்கள் சில தளங்களைத் தடுத்து வடிகட்டும் மென்பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம்.
ஆனால் சமூக வலையமைப்புக்களில் இடம்பெறும் இவ்வாறான விடயங்களைப் பிள்ளைகளிடமிருந்து பாதுகாக்க இந்த வடிகட்டி உதவாது.
சமூக வலையமைப்பென்பது இன்னமும் குழந்தை நிலையிலேயே உள்ளது என்றும் சிறுவர் ஒன்லைன் பாதுகாப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இந்தப் பாதுகாப்புச் சட்டம் 1998இல் 13 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளினைப் பாதுகாக்கப் போடப்பட்டிருந்தது.
இதனால் 2006 இல் Xanga என்ற இணையத்தளம், 13 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளைத் தமது கணக்குகளில் இணைக்க அனுமதித்தமைக்காக அதற்கு சமஸ்டி வர்த்தக சம்மேளனத்தினால் 1மில். டொலர்கள் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
எனினும் இந்தச் சட்டம் சமூக வலையமைப்பிற்குள் சிறுவர்கள் அந்த வயதிற்குள் நுழைவதை மட்டுமே தடுக்கின்றதென்றும் அவ்வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment