Digital Time and Date

Welcome Note

Monday, April 16, 2012

திருடுவதில் புது உத்தி - இது வட நாட்டவர் ஸ்டைல்.



பல குற்றச் செயல்களின் மெனக்கெடல்களை பார்த்து, "ரூம் போட்டு யோசிப்பாங்களோ" என்று சிலர் வியந்து சொல்வதுண்டு. அப்படி தான் மதுரையில் நடந்த ஒரு திருட்டை காணும்போது - சொல்ல தோன்றுகிறது. பெங்களுரில் ரூம் போட்டு யோசித்து விட்டு - மதுரைக்கு புகை வண்டி ஏறி இருக்கிறார்கள் வட நாட்டு கொள்ளையர்கள்.
படிக்க, வேலைக்கு போக, சுற்றுலாவுக்கு என்று புகைவண்டி ஏறுவார்கள். இவர்கள் கொள்ளை அடிக்க வண்டி ஏறி இருக்கிறார்கள். அது குறித்த முழு விபரம். மதுரையில் நகைக்கடைகளில், மோதிரம் வாங்குவது போல் நடித்து, திருடிய உ.பி.,யை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
நகைக்கடைகளில் கற்கள் பதித்த மோதிரங்களை வாங்குவது போல் நடித்து, திருடி, அதற்கு பதில் அதே மாதிரியான போலி மோதிரங்களை வைப்பதாக துணைகமிஷனர் ராஜேந்திரனுக்கு புகார் வந்தது. இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் தனிப்படை, கடை கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மோசடி நபர்களின் அடையாளம் தெரிந்தது. 
தெற்காவணி மூல வீதியில் அவர்கள் சிக்கினர். உ.பி. லக்னோ ஆதர்ஸ்நகரைச் சேர்ந்த பத்திரிபிரசாத்,65, அண்ணன் மகன் கமல்சர்மா,36, என தெரிந்தது. கைதான இவர்களிடம் 10 போலி மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
எப்படி திருட்டு நடக்கிறது?: பத்திரிநாத், முழங்கால்களில் இறுக்கமாக "சாக்ஸ்' அணிந்து கொள்வார். தங்கமோதிரத்தை பார்ப்பது போல் நடித்து, இடது முழங்கால் "சாக்ஸில்' பதுக்குவார். அதற்கு பதில் வலது முழங்கால் "சாக்ஸில்' வைத்திருக்கும் போலி மோதிரத்தை அந்த இடத்தில் வைப்பார். கடைக்காரரும் "எண்ணிக்கை சரியாக இருக்கிறதா' என்று மட்டும் பார்ப்பது இவர்களுக்கு வசதியாக இருந்தது.
பெங்களூரூவில் 15 மோதிரங்களை திருடினர். திருடுவதற்காகவே ரயிலில் இவர்கள் முதன்முறையாக மதுரை வந்தது விசாரணையில் தெரிந்தது.
மிகவும் கில்லாடியாக இருக்கும் - இம்மாதிரியான வட மாநில கொள்ளையர்களிடம் -​தமிழக வியாபாரிகள் இனி உஷாராக தான் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment