உக்ரேய்னின் தலைநகர் கிய்வ்வில் அமைந்துள்ள மிகப்பெரிய மற்றும்
ஒரேயொரு உத்தியோகபூர்வ பள்ளிவாசலுமான அர்ரக்மா மஸ்ஜித் 17வருட நிர்மாணப்பணிகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டுள்ளது.அர்ரக்மா பள்ளிவாசலின்நிர்மாணப்பணிகள் 1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளிவாசலின்ஒரு பகுதி 2001ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள்பள்ளிவாசலை தொழுகைக்காகப் பயன்படுத்தி வந்தனர்.முற்றாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள அர்ரக்மா பள்ளிவாசலில் 1000பேருக்குத் தொழக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன. பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கான அங்கீகாரம் மற்றும் ஆவணங்கள் வழங்குவதற்கு உள்நாட்டு அதிகாரிகள் தயக்கம் காட்டியதன்ஷ
காரணமாகவே பள்ளிவாசலின் நிர்மாணப்பணிகள் நிவைடைய தாமதமானதுஎன உக்ரேய்னின் முப்தி செய்க் அஹ்மத் தமீம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உக்ரேய்னில் 2மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.அவர்களில்
60,000பேர் தலைநகரர் கிய்வ்வில் வசிக்கின்றனர்.உக்ரேய்னின்
தலைநகரின் வரலாற்றுரீதியான ததர்கா மாவட்டத்தில் இப்பள்ளிவாசல்
அமைந்துள்ளது. மேலும் இப்பிரதேசத்தில் 19நூற்றாண்டின் நடுப்பகுதி முதல்முஸ்லிம்கள் வாழ்ந்துவருகின்றனர்.
No comments:
Post a Comment