![]() |
ஆபாசமாக மீடியாக்களில் வளம் வந்தவர் நித்யானந்தா இவருக்கு முன்பு காஞ்சி சங்கரச்சாரி இப்படி நீண்டு கொண்டே போகும் ஹிந்து கடவுள்கள். அந்தவரிசையில், இந்த ஆதீன பதவி ஒன்றும் புதிதல்ல இவர்களுக்கு.(செக்ஸ் சாமிகளுக்கு) நடிகை ரஞ்சிதாவுடன் ஆபாச லீலைகளை அரங்கேற்றிய நித்தியானந்தாவுக்கு தமிழகத்தின் மிகப்பெரிய ஆதீனமாக கருதப்படும் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீன பதவி வழங்கப்பட்டுள்ளது. பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூட்டல் நிகழ்ச்சி நடந்துள்ளது. மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்தார். பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் மதுரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு சன்னிதானம். அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார். மதுரை ஆதீன மடத்தின் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார் என்றார் அவர். ஆபாச லீலைகள் புரிந்து அசிங்கப்பட்ட ஒருவருக்கு மதுரை ஆதீன பட்டம் வழங்கப்பட்டதன் பின்னணி என்ன? கோயில் நிர்வாகத்துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில்: எல்லாம் அரசியல் பின்னணிதான், (சென்ற மாதம் அசோக் சின்காவை சந்தித்துவந்தார் நித்யானந்தா) மேலும் அவர் கூறுகையில் அடுத்தது பி ஜே பி, ல் சீட் கொடுத்து அரசியல் பிரவேசமும் உண்டு என்றார் அவர்., என்ன கருமமோ அந்த மாதிரியான தொழில் சொய்தால்தான் இதுபோன்ற பதவிகள் தேடி வருமோ? இந்த சர்ச்சை ஹிந்து மக்கள் இடையே பெரும் எதிர்பையும் ஏற்படுத்தி உள்ளது மற்றும் அவர்களை சிந்திக்கவும் வைத்து உள்ளது ,நம் நாடு எங்கே பொய் கொண்டு இருக்கிறது ....... மரபுகளை மீறி கோடிக்கணக்கில் பணம் கொடுத்து இளைய ஆதீனம் பதவி பெற்ற நித்தியானந்தாவைக் கைது செய்யக்கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயத்திடம் வழக்கறிஞர்கள் இருவர் இன்று மனு அளித்தனர். திருஞான சம்பந்தர் நிறுவிய மடத்துக்கு, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தத்தில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது எனவும் அவர்களது மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், ‘நீதிமன்றத்தில் குற்றவழக்கு நிலுவையில் உள்ள ஒருவரை ஆதீனமாக நியமித்தது, சைவ சமயத்தை கேலிக்கூத்து ஆக்கும் செயல். ஆகவே முறைகேட்டில் ஈடுபட்ட நித்தியானந்தாவை கைது செய்வதுடன், பணம் வாங்கிக்கொண்டு இளைய ஆதீனம் பதவியை வழங்கிய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி மதுரை ஆதீன மடத்தை அரசுடமையாக்க வேண்டும்’ எனவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment