ரத்த சோகை ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் ரத்தம் அதிக அளவில் வெளியேறிக் கொண்டே இருப்பது. விபத்து தவிர, இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. ரத்த சிவப்பணுக்கள் தொடக்கம் சீராக இல்லாத நிலையில் ரத்த சோகை உண்டாகும். வலுவற்ற பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையினாலும் ரத்த சோகை உண்டாகும்.
ரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் ரத்த சோகை ஏற்படும். பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. ரத்தத்தில் பித்தம் அதிகரித்து ரத்தம் சீர்கேடு அடைகிறது. இதனால் தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது.
மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் ரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைக்கீரை, அரைக்கீரை, ஆரைக்கீரை, புதினா, கொத்த மல்லி, கறிவேப்பிலை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதன் மூலம் ரத்தத்தில் ஹீமோ குளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment