Digital Time and Date

Welcome Note

Thursday, July 5, 2012

உலகப் பாரம்பரிய இடமாக மேற்குத் தொடர்ச்சி மலை அறிவிப்பு: இந்தியா வரவேற்பு

உலகப் பாரம்பரிய இடமாக மேற்குத் தொடர்ச்சி மலை அறிவிப்பு: இந்தியா வரவேற்பு

ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு சார்பில் உலகப் பாரம்பரிய இடமாக
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.  1,600 கி.மீ. தூரம் நீண்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் அமைப்பு, பருவமழையைத் தருவிக்கும் ஆற்றல், மிதமான வெப்பநிலை, பல்லுயிர் பெருக்கத்துக்கு ஏற்ற சூழ்நிலை ஆகியற்றை கருத்தில் கொண்டு உலகப் பாரம்பரிய இடம் என்ற அந்தஸ்தை வழங்குவதாக யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் குழு அறிவித்துள்ளது.
இமய மலையைவிட பழமையான மேற்குத் தொடர்ச்சி மலையில் உலகின் மிக அரிதான 325 வகை உயிரினங்கள் உள்ளன.  யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பை மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், ""இதை வரவேற்கிறோம். மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறோம்'' என்றார்.

No comments:

Post a Comment