Digital Time and Date

Welcome Note

Wednesday, August 29, 2012

கதையல்ல நிஜம் – காஷ்மீரில் ஒரு தீவிரவாதி உருவான கதை!

கதையல்ல நிஜம் – காஷ்மீரில் ஒரு தீவிரவாதி உருவான கதை!அண்ணனை தீவிரவாதியாக சித்தரிப்பதற்காக ராணுவத்திடம் 5000 ரூபாய் லஞ்சம் கொடுத்து கையெறி குண்டு வாங்கி அவனது கடையில் வைத்தார் காசுமீர் மாநிலத்தின் எல்லைப்புற நகரான ரஜோரியைச் சேர்ந்த அவுரங்கசீப்.


கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஜம்மு காசுமீரிலுள்ள எல்லைப்புற மாவட்டமான ரஜோரியில் உள்ள டர்ஹாலி பாலத்திற்கருகில் உள்ள கடை ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் அவசர அவசர

மாக வெளியே வந்தார். ரோந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தவுடன் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். சிறிது நேரத்தில் சவுதிக்கு போய் நன்றாக சம்பாதித்து வந்துள்ள தனது அண்ணன் முகமது இக்பாலுக்கும், தனக்கும் ஏற்பட்ட சமீபத்திய தகராறால் கோபமடைந்த தான் பழிவாங்குவதற்காக அவனது கடையில் கையெறி குண்டு வைத்துவிட்டு திரும்புவதாக ஒத்துக்கொண்டார்.

ஏற்கெனவே நகர காவல்துறை அலுவலகத்திற்கு கடையை சோதனை போட்டால் தீவிரவாதியை பிடிக்கலாம் என்ற ரேஞ்சுக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துவிட்டுத்தான் வந்திருந்தார் அவுரங்கசீப். முகமது இக்பாலை அழைத்துக் கொண்டு அவரது கடைக்கு வந்த போலீசாருக்கு அவுரங்கசீப் தான் குற்றவாளி எனத் தெரிந்ததால் மேற்கொண்டு அவரை விசாரித்தனர்.

குடும்பச் சண்டைக்கு அண்ணனை பழிவாங்க நினைத்த அவுரங்கசீப் ராணுவ வேலைகளுக்கு அடிக்கடி ஒப்பந்த டெம்போ ஓட்டுநராக போய்வரும் தனது ஊரைச் சேர்ந்த முகமது ரசீதிடம் யோசனை கேட்டாராம். அவர் போலீசு கான்ஸ்டபிளான அப்துல் ராபின் மற்றும் எல்லைப்புற பாதுகாப்புப் படை ஜவான் முகமது ஹனீப் ஆகியோரிடம் அறிமுகப்படுத்தினார். ஈத் பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த அவர்கள் இருவரும் ரூ.5000 வாங்கிக் கொண்டு கையெறி குண்டை தந்திருக்கிறார்கள். தற்போது நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2000-ல் கிளிண்டனிடம் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை காட்டுவதற்காக காசுமீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்களை படுகொலை செய்த ராணுவம், அதனை நடத்தியவர்கள் என பத்ரிபால் கிராமத்தை சேர்ந்த 5 ஆடு மேய்ப்பவர்களைக் கொன்றதை நாடே அறியும். அதற்கு நீதிகேட்டு காசுமீர மக்கள் 2000 ஏப் 3-ல் அனந்தநாக் நகரில் நடத்திய போராட்டத்தில் 9 பேரை சுட்டுக் கொன்றது போலீசு. சமீபத்தில் உச்சநீதி மன்றம் இப்போலி மோதலை தான் விசாரிப்பதை விட ராணுவ கோர்ட் விசாரிப்பதுதான் சரி என வழக்கை கைவிட்டது. அநேகமாக அந்த வழக்கை ஊத்தி மூடிவிடுவார்கள். இப்போதும் ராணுவ வீரர் ஒருவர் போலி தீவிரவாதியை சித்தரிக்க முயன்ற குற்றத்துக்காக கைதாகி இருக்கிறார். ராணுவ நீதிமன்றத்தில் இதற்கெல்லாம் பெரிய தண்டனை எதுவும் கிடைத்து விடாது.

ஒருவேளை ரோந்து போலீசார் வருவதற்கு முன்னரே அவுரங்கசீப் கடையை விட்டு வெளியேறி இருந்தால் முகமது இக்பால் ஒரு தீவிரவாதியாகி இருப்பார். அப்சல் குருவுக்கு 2005-ல் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றமே குற்றம் சாட்டப்பட்டவர் தீவிவாத இயக்கத்தில் இல்லாவிட்டாலும், நேரடி சாட்சியம் இல்லாவிட்டாலும், சந்தர்ப்ப சாட்சியம் அவருக்கு எதிராக இருப்பதாலும், சமூகத்தின் ஒட்டுமொத்த மனச்சாட்சிக்கு சமாதானம் அளிப்பதற்காகவும் மரண தண்டனை தருவதாக ஒத்துக்கொண்டது. கடைசியில் இக்பால் எனும் தீவிரவாதி அப்சல்குரு போலல்லாமல் மயிரிழையில் செத்துப் பிழைத்திருக்கிறார்.

No comments:

Post a Comment