Digital Time and Date

Welcome Note

Sunday, August 26, 2012

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் மறைவு

 
கிருத்துவ ஆண்டு 632 ஜுன் மாதம் 8ஆம் நாள் தமது 63ம் வயதில் அல்லாஹ்வின் இறைத்தூதர் அவர்கள் இவ்வுலக வாழ்வை விட்டு பிரிந்து சென்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் வைத்துதான் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் வஃபாத்தானார்கள். அதே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். மதினாவில் மஸ்ஜிது நபவி பள்ளியை ஒட்டியுள்ள இந
்த இடத்தில்தான் பெருமானார் அடக்கஸ்தலம் இருக்கிறது. அபுபக்கர் சித்தீக், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மண்ணறைகள் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் மண்ணறைக்கு பக்கத்தில் தான் இருக்கிறது.



பெருமானாரின் காலம் முதல் இன்று வரையிலும் மதீனாவில் உள்ள ஒரு பொது அடக்கஸ்தலம்தான் இது. இதில்தான் பெருமானாரின் மனைவியரும், நபிதோழர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கிருத்துவ ஆண்டு 570ல் ஏப்ரல் மாதத்தில் மக்காவில் அப்துல்லாஹ் ஆமினாவிற்க்கு மகனாக பிறந்து சிறுவயதிலேயே அனாதையாக வளர்ந்து எழுதப் படிக்க அறியாமலும் உண்மையாளன் என்று எதிரிகளாலும் போற்றப்பட்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் தமது நாற்பது வயது வரையிலும் இவ்வுலகத்திற்க்கு எவ்வித அற்புதத்தையும் எடுத்துக் கூறவில்லை. நாற்பது வயதிற்க்கு பிறகு தனக்கு அல்லாஹ்விடமிருந்து தமக்கு கிடைத்தாக எடுத்தறிவித்த வாசகங்களின் வரலாற்று சம்பந்தமான உண்மை ஆதாரங்களைத்தான் நாம் இதுவரையிலும் பார்த்தோம்.

திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி.

No comments:

Post a Comment