Digital Time and Date

Welcome Note

Thursday, August 9, 2012

கண்ணியம் மிக்க இரவு...ஆம் இறையருள் பூரணமாக இறங்கும் இரவுக்கு தயாரா?

இந்த லைலத்துல் கத்ர் இரவு எப்போது,அதைப் பற்றிய தவறான
எண்ணங்களை களைவது எப்படி என்பதை குர்ஆன்
- ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்வோம்.

லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த
ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் பெற்றுள்ளதாக
திருக்குர்ஆன் கூறுகிறது.

"நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில்
இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன்
இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும்
வரை இருக்கும். (திருக்குர்ஆன் 97 : 1-5)"

திருக்குர்ஆன் அருளப்பட்ட இரவு ஆயிரம் மாதங்களை விட
சிறந்தது என்று இங்கே அல்லாஹ் கூறுகிறான். மேலே நாம் குறிப்பிட்ட
வசனத்தில் ரமளான் மாதத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது எனவும்
இறைவன் கூறுகிறான். அந்த ஓர் இரவு நிச்சயம் ரமளான் மாதத்தில் தான்
அமைந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

அந்த இரவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் வரும் ஒற்றையான
இரவுகளில் அமைந்திருக்கும் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள்
அறிவுறுத்தியுள்ளார்கள். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும்,
சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட
இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த
இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள்
ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச்
சிறப்பு வைகறை உதயமாகும் வரையிலும் இருக்கும்
என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.

லைலத்துர் கத்ர் என்பது 27 வது இரவு மட்டுமே என்கின்ற
தவறான கருத்து இந்தியத் துணைக்கண்டத்திலும் இன்னும் சில
நாடுகளிலும் பரவலாக நிலவுகிறது. 
 
இதனைப் பற்றிய ஹதீஸ்:


எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர்
அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்:
உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்:
புகாரி, முஸ்லிம்.

லைலத்துல் கத்ர் இரவு ரமலான் மாதத்தின் 27ஆம் இரவில்தான் என
இஸ்லாத்தில் பெரும்பான்மையான மக்கள் விளங்கி வைத்துள்ளனர்.

அவர்கள் அவ்வாறு விளங்கிக் கொண்டதற்கு காரணத்தையும்
கூறுகின்றனர். லைலத்துல் கத்ர் இரவு பற்றி அல்லாஹ் இறக்கிய
மேற்படி அத்தியாயத்தில் லைலத்துல்கத்ர் என்ற வார்த்தை மூன்று முறை வருகிறது.

மேற்படி மூன்றை ஒன்பதைக் கொண்டு பெருக்கினால் இருபத்திஏழு.
எனவே இருபத்தி ஏழாம் இரவில்தான் லைலத்துல் கத்ர் என்று, குர்ஆனிலும்,
ஹதீஸிலும் இல்லாத ஒரு 'அரிய?..!' விளக்கத்தைத் தருகின்றனர்.

மேற்படி விளக்கத்தைத் தருவதோடு மட்டுமில்லாமல்
இஸ்லாமிய மார்க்கத்தை ஓர் சடங்கு மார்க்கமாக கருதிய பலர்,
ரமளான் மாதத்தின் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் (அதாவது வெள்ளி, திங்கள், மற்றும் 27ஆம் இரவு ஆகிய நாட்களில்) பள்ளிகளில் நிரம்பி வழிவர்.

குறிப்பாக இருபத்தி ஏழாம் இரவில் மாத்திரம் அதுவரை கண்டிராத கூட்டம்
பள்ளியில் அலைமோதும். அன்றைய இரவில் பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டும்,
பண்டங்கள், பழங்கள் குவியவும் காரணமாக அமையும். அந்த
நிலை சரியானதுதானா என்பதை இந்த கட்டுரையில் ஆய்வு செய்வோம்.

'தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம்
அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம். நிச்சயமாக
(அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில்
முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.' (அத்தியாயம் 44 ஸுரத்துத் துகான் - 2முதல் 4வரையிலான வசனங்கள்) என
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்.

No comments:

Post a Comment