Digital Time and Date

Welcome Note

Saturday, September 29, 2012

சவூதி இளவரசர் நாயிஃப் மரணத்தின் பின்னணியில் அமெரிக்கா - அதிர்ச்சியூட்டும் தகவல்..............!!


 

அண்மையில் மறைந்த சவூதி பட்டத்து இளவரசர் நாயிஃப் பின் அப்துல் அஸீஸ் மற்றும் எகிப்தின் முன்னாள் உளவுத்துறை தலைவரான உமர் சுலைமான் ஆகியோர் மரணமடைந்ததன் பின்னணியில் அமெரிக்க உளவு நிறுவனமான சி ஐ ஏ இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது,

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய ஃபரீத் ஸ
க்கரியா என்னும் இந்திய வம்சாவழி அமெரிக்கர் ஒருவர் அல்ஹகீகா என்னும் அரபுத் தொலைக்காட்சி ஓடைக்கு அளித்த செவ்வியொன்றில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். (மற்றொருவரின் ஆக்கத்தை தனது பெயரில் வெளியிட்ட காரணத்தால் டைம் இதழிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஃபரீத் ஸக்கரியா அண்மையில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்),

அல் ஹகீகா அரபுத் தொலைக்காட்சி ஓடையில் ஃபரீத் ஸக்கரியா இவ்வாறு நேர்காணல் அளித்துள்ளதாக ப்ரஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது,

ஹோஸ்னி முபாரக் ஆட்சிக்காலத்தில் எகிப்தின் உளவுத்துறை தலைவராக இருந்த உமர் சுலைமான் மரணிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் அப்பொழுது அவர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், சி.ஐ.ஏ (அமெரிக்க உளவுத்துறை) லேசர் கதிர்களின் மூலம் தன்னைக் கொல்லத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்ததாக அப்பேட்டியில் ஃபரீத் ஸக்கரியா கூறியுள்ளார். மேலும் சுலைமான் தன்னிடம் கூறுகையில், அந்நாள் சவூதி பட்டத்து இளவரசர் நாயிஃப் பின் அப்துல் அஸீஸையும் இதைப்போலவே அமெரிக்க உளவுத்துறை லேசர் கதிர்வீச்சால் கொலை செய்தது என்று கூறியதாக ஃபரீத் தெரிவித்துள்ளார்,

சவூதி பட்டத்து இளவரசர் நாயிஃப் பின் அப்துல் அஸீஸ், எகிப்தின் முன்னாள் உளவுத் துறை தலைவர் உமர் சுலைமான் ஆகிய இருவருமே அமெரிக்காவுக்கு மருத்துவச் சிகிச்சைக்குச் சென்ற போது மரணத்தை தழுவியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment