Digital Time and Date

Welcome Note

Wednesday, November 28, 2012

வரலாற்றில் இன்று

நவம்பர் 28



  • 1520 - தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.
  • 1729 - மிசிசிப்பியில் நட்சே இந்தியர்கள் குழந்தைகள், பெண்கள் உட்பட 239 பிரெஞ்சு இனத்தவரைக் கொன்றார்கள்.
  • 1821 - பனாமா இசுபெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.
  • 1843 - அவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
  • 1893 - நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.
  • 1905 - ஐரிசு தேசியவாதி ஆர்தர் கிறிபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் ஃபெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.
  • 1912 - அல்பேனியா ஒட்டோமான் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1918 - புக்கோவினா ருமேனிய இராச்சியத்துடன் இணைய முடிவு செய்ததூ.
  • 1922 - வானில் வண்ணப் புகையைப் கொண்டு எழுத்துக்களை உருவாக்கும் கலை முதன் முறையாகச் செய்து காட்டப்பட்டது. Cyril Turner கண்டுபிடித்த அந்த முறை வர்த்தக ரீதியில் பயன்படத் தொடங்கியது.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: செர்மனியையும், சப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க சனாதிபதி பிராங்கிளின் உரூசுவெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்சுடன் சேர்ச்சில், இரசிய அதிபர் சோசப் தாலின் ஆகிய மூவரும் டெஃக்ஹ்ரானில் சந்தித்துப் பேசினார்கள்.
  • 1948 - உடனடியாக ஒளிப்படம் எடுத்துக் கொடுக்கும் Polaroid Camera முதன் முதலாக பா
  • சுட்டன் நகரில் விற்பனைக்கு வந்தது.
  • 1958 - சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.
  • 1960 - மவுரித்தேனியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
  • 1964 - நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
  • 1967 - சுயமரியாதைத் திருமணச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
  • 1975 - கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1989 - பனிப்போர்: செக்கொசிலவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிசுட் கட்சி அறிவித்தது.
  • 1990 - ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
  • 1990 - லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.
  • 1991 - தெற்கு ஒசேத்தியா சியார்சியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
  • 2006 - நாசாவின் நியூ அரைசன்ஸகு தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது

No comments:

Post a Comment