ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ்
இதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பி
சாப்பிடும் பழம் ஆப்பிள்! நிறுவனம் தொடங்கி மூன்று மாதங்களாகியும் பெயர்
வைக்காமல் இருந்தார். தன் சகாக்கள், கடைசிநாள் மாலைக்குள் வேறு பெயர்களை
பரிந்துரைக்காவிட்டால் ஆப்பிள் என்று பெயர் சூட்டப்போவதாகச் சொன்னார்.
ஆப்பிள் கனிந்தது.
யாஹு
ஜொனாதன் ஸ்விஃப்ட்
எழுதிய ‘குலிவர்ஸ் டிராவல்ஸ்’ என்ற புத்தகத்தில் வரும் பாத்திரம் இது.
துறுதுறுவென்று இயங்கும் ஒரு மனிதனின் பெயரை, தன் இணையதளத்திற்கு
சூட்டினார்கள், யாஹுவை நிறுவிய ஜெர்ரியாங் மற்றும் டேவிட் ஃபிலோ.
ஜெராக்ஸ்
‘ஜெர்’
என்பது உலர்தலைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லை வேராகக் கொண்டது.
நகலெடுக்கும்போது மை காய்ந்திருக்கும் என்பதைக் குறிக்க சென்டர் காரிஸன்
இப்பெயரை வைத்தார். அதற்குமுன், நகலெடுத்தால், மை காய்வதற்குள் மண்டை
காய்ந்துவிடும்.
லோட்டஸ்
இதன் நிறுவனர் மிட்ச் கபூர்,
மகரிஷி மகேஷ் யோகியின் தியானமுறை பயிற்றுனர். பத்மாசனம் இட்டு அமர்கிற
யோகாசனத்தின் அடிப்படையில், லோட்டஸ் என்று தன் நிறுவனத்திற்குப் பெயர்
வைத்தார்.
அடோப் (ADOBE)
அடோப் நிறுவனர் ஜான் வார்னாக்-கின் வீட்டுக்குப் பின்புறம் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயர் அடோப்.
சன் மைக்ரோசிஸ்டம்ஸ்
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த நான்கு நண்பர்கள் இணைந்து Stanford University Network என்பதை சுருக்கி
SUN MICRO SYSTEMS என்று பெயர் வைத்தனர்.
No comments:
Post a Comment