Digital Time and Date
Welcome Note
Sunday, December 2, 2012
201 நாடுகளுக்கு விமானத்தில் பறக்காமல் உலகை சுற்றி வந்த வாலிபர் உலக சாதனை படைத்தார்
லண்டன்: நான்கு ஆண்டுகளில் விமானத்தில் பறக்காமல் கடல் மற்றும் தரைவழி என பஸ், ரயில் ஆகியவற்றின் மூலம் 201 நாடுகளுக்கு பயணித்து பிரிட்டனைச்சேர்ந்த வாலிபர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பல லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து உலகை சுற்றி வந்த முதல் வாலிபர் என்ற பெருமையினை பெற்றுள்ளார்.
பிரி்ட்டனைச் சேர்ந்தவர் கிராஹம் ஹக்கிஸ் (33). இவர் பிரிட்டனின் லிவர்பூல் மாகாணத்தைச் சேர்ந்தவர். கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதியன்று தனது பயணத்தை துவக்கினார். மொத்தம் 201 நாடுகளுக்கு இவர் சுற்றுப்பயணம் செய்தார். எந்த சூழ்நிலையிலும் வேறு நாட்டிற்கு செல்ல இவர் விமானத்தை பயன்படுத்தவே இல்லை. கடந்த 2009-ம் ஆண்டு புத்தாண்டு அன்று (ஜனவரி 1-ம் தேதி) தனது பயணத்தை துவக்கி மொத்தம் 1,426 நாட்களில் 1லட்சத்து 60 ஆயிரம் மைல்கள் ( 2 லட்சத்து 46 ஆயிரம் கிலோ மீட்டர்கள்) பயணித்துள்ளர். இவற்றில் சில நாடுகளுக்கு கடலில் படகு மூலமாகவும், பக்கத்து நாடுகளுக்கு ரயில், பஸ், டாக்ஸி போன்ற வாகனங்கள் வாயிலாகவும் மொத்தம் 201 நாடுகளுக்கு சென்றார். இறுதியில் ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானை நேற்று சென்றடைந்தார்.
தற்போது அந்நாட்டின் தலைநகர் ஜூபாவில் தங்கியுள்ளார்.வரும் ஜனவரி மாதம் அதே புத்தாண்டு அன்று தாய்நாடு திரும்ப உள்ளார். இதன் மூலம் பல லட்சம் கிலோமீட்டர் பயணித்து உலகம் சுற்றிய முதல் வாலிபன் என்ற சாதனையையும், விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற உள்ளதாக டெய்லிமெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் தனது செலவிற்காக வாரத்திற்கு 100 டாலர் செலவிட்டுள்ளார். தவிர பயணத்தின் போது ஆப்ரிக்க நாடான காங்கோ நாட்டிற்கு சென்ற போது அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து அநாட்டின் கேப்வெர்தே நகர் சிறையில் ஒரு வாரம் வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் ரஷ்யாவிற்குள் நுழைந்த போது இவரை உளவாளி என நினைத்து போலீசாரால் கைது செய்ததாகவும் தனது பயண அனுபவங்களை தெரிவித்துள்ளார்.தாம் மேற்கொண்ட இந்த மெகா பயணத்தை ஆவணப்படமாக தயாரித்துள்ளார். இவற்றை வெளியிட்டு அதன் வாயிலாக அறக்கட்டளை ஒன்றிற்கு நிதி திரட்டள்ளார்.
-தினமலர்...
Labels:
Information
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment