டிசம்பர் 02
உலக அடிமை ஒழிப்பு நாள்
1804 - பாரிசில் மாவீரன் நெப்போலியனுக்கு பிரான்சின் மன்னராக முடிசூட்டப்பட்டது
1848 - முதலாம் பிரான்ஸ் ஜோசப் என்பவன் ஆஸ்திரியாவின் பேரரசன் ஆனான்.
1851 - புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு தலைவன் சார்ல்ஸ் லூயி பொனபார்ட் இரண்டாம் குடியரசைக் கலைத்தான்.
1852 - மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் பேரரசன் ஆனான்.
1908 - பூ யி தனது இரண்டாவது அகவையில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.
1942
- சிகாகோ பல்கலைக் கழகத்தில் டாக்டர் Dr. Enrico Fermi தலைமையில்
செயல்பட்ட விஞ்ஞானிகளின் குழு நீடித்த, கட்டுப்படுத்தப்பட்ட அணு
தொடர்வினைச் செயலை (nuclear chain reation) முதன்முதலில் செய்து காட்டினர்
1946
- பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, மற்றும் லியாகத்
அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த
அழைத்தது.
1956 - பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஆதரவாளர்களும்
கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற படகில் கியூபாவை
சென்றடைந்தனர்.
1961 - பிடெல் காஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்சிச-லெனினிசவாதி எனவும் கியூபா கம்யூனிச நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார்.
1971
- ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விடுதலை பெற்றது.
அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய் மற்றும் உம் அல் குவைன் ஆகியன
இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக ஆக்கப்பட்டது
1975 - பத்தே லாவோ என்பவர் லாவோசின் ஆட்சியைப் பிடித்து லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைத்தார்.
1976 - பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவரானார்.
1988 - பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்றார் Benazir Bhutto. இஸ்லாமிய நாட்டின் முதல் பெண் பிரதமர்.
1990
- ஒன்றுபட்ட ஜேர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது
பொதுத்தேர்தலில் அதன் வேந்தர் ஹெல்முட் கோல் தலைமையிலாண கூட்டணி வெற்றி
பெற்றது.
1993 - ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
2002 - இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.
2006 - பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
No comments:
Post a Comment