அக்குபஞ்சர் சிகிச்சையில் நோய் மட்டும் குணமாக்கப்படுவதில்லை. மிகமிக
முக்கியமான ஒன்று அக்குபஞ்சரில் அதிகம் அமைந்துள்ளது. மற்ற எந்த
மருத்துவத்திலும் இல்லாத ஒன்று இந்த அக்குபஞ்சரில் அமைந்துள்ளது. அதை
கூறுவதற்க்கு முன் சில விஷயங்களை சொல்லிவிட்டு வருகிறேன்.
நோய்
வருமுன் காக்க வேண்டும் என்று சிலர் பாதுகாக்கின்றோம். அதையும் தாண்டி சில
நோய்கள் வந்துவிடுகின்றன. அதுவும் சரி ஏற்றுக்கொள்ளக் கூடியதே, ஏன்னென்றால்
இது இயற்கையான சில விஷயங்கள் ஆகும். ஆனால், பிறக்கும் குழந்தைகளுக்கு கூட
பிறக்கும் போதே நோய்களுடன் பிறக்கின்றன. சில நோய்கள் நமக்கே தெரியாமல்
நம்மை கஷ்டப்படுத்துகிறது ஏன்? என்ன காரணம்? எந்த தவறும் செய்யாத பிறந்த
குழந்தைக்கு ஏன் இந்த தண்டனை? இது எல்லோருக்கும் இருக்கும் கேள்வி ஆகும்
அது
தான் "கர்மவினை" ஆகும். அது என்ன கர்மவினை?. கர்மவினை என்றால் பல
பிறவிகளில் செய்த பாவங்கள் தான் இந்த பிறவிகளில் கஷ்டங்களாக
வெளிப்படுகின்றன. அதை யாரலும் தடுக்க முடியாது. ஆனால் கர்மவினை
முடிந்தவுடன் தானாகவே அதற்கான விடைகள் கிடைத்து நோய்கள் சரியாகிவிடும்.
அதுவரை நம்மை படுத்திவிடும்.
(பல பிறவிகளில் செய்த பாவங்கள் தான்
இந்த பிறவிகளில் கஷ்டங்களாக வெளிப்படுமா? அது எப்படி? என்று கேட்பவர்கள்
பின்னூட்டம் இடுங்கள் விடை தருகிறேன். ஏனென்றால் அது பற்றி பேச
ஆரம்பித்தால் அதற்க்காக தனி Blog- எழுதவேண்டும்.)
இந்த கர்மவினைக்கும் அக்குபஞ்சருக்கும் என்ன சம்பந்தம் என்றால், முழுமையாக தீர்வு அக்குபஞ்சரில் மட்டும் தான் இருக்கின்றன்.
அது என்ன தீர்வு என்றால் கர்மவினையை அழிக்கும் புள்ளிகள் நம் அக்குபஞ்சரில் மட்டும் தான் உள்ளன.
கர்மவினைக்கான
புள்ளிகளை போட்டுவிடும் போது பல பிறவிகளில் நாம் செய்த பாவங்கள் அழியும்
என்பது மிக மிக உண்மையான விஷயம் ஆகும். பல நாட்கள் தூக்கம் இல்லாமல்
கஷ்டப்பட்டவர்கள் கூட இந்த இடத்தில் ஊசிகளை போட்டு விட்டால், Depression
குறைந்து தூக்கிவிடுவார்கள் மற்றும் நோய்களும் சரியாகிவிடும்.
இது எந்த மருத்துவத்திலும் கிடையாது. இந்த புள்ளிகளை கைகளால் தொடக்கூடாது. ஊசிகள் மட்டும் போட்டுக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து
ஒருவாரம் போட்டால் நிறைய வித்தியாசம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே
இந்த மருத்துவத்துறை எனக்கு கிடைக்கக கூட நாம் பல பிறவிகளில் புண்ணியம்
செய்து இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்ள பெருமைபடுகிறேன். இதை
படிக்கும் ஒவ்வொருவருமே புண்ணியம் செய்தவர்கள் தான்.
No comments:
Post a Comment