டிசம்பர் 11
1789 - ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.
1792
- பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் நாட்டுத்துரோகக்
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டான்.
1816 - இந்தியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமானது.
1907 - நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் தீயில் எரிந்து சாம்பரானது.
1917 - பிரித்தானியப் படைகள் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து ஜெருசலேமை மீட்டன.
1927 - சீனாவின் குவாங்சூ நகரை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றி அதனை குவாங்சூ சோவியத் என மாற்றியிருப்பதாக அறிவித்தனர்.
1931
- ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, மற்றும் தென்னாபிரிக்கா
ஆகியவற்றுக்கு தமது முழுமையான அரசியலமைப்புகளைப் பேணும் சட்டமூலம்
வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 பிரித்தானிய நாடாளுமன்றத்தில்
கொண்டுவரப்பட்டது.
1936 - ஐக்கிய இராச்சியத்தின் மன்னன் எட்டாம் எட்வேர்ட் முடி துறந்தான்.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியும் இத்தாலியும் ஐக்கிய அமெரிக்காமீது போரை அறிவித்தன
1946 - UNICEF எனப்படும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சிறுவர்கள் அவசர நிதி அமைப்பு நிறுவப்பட்டது
1957 - சிங்கப்பூரின் புதிய கவர்னராக Sir William Goode நியமிக்கப்பட்டார்.
1958 - அப்பர் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1964
- நியூயோர்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் சே குவேரா
உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது
குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
1972 - அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கியது.
1981 - எல் சல்வடோரில் இராணுவத்தினர் நாட்டின் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.
1981 - ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார் பெருவின் Perez De Cuellar.
1988 - முதல் போட்டியிலேயே 100 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார் டெண்டுல்கர்
No comments:
Post a Comment