Digital Time and Date

Welcome Note

Thursday, December 27, 2012

வரலாற்றில் இன்று

 டிசம்பர் 27

உலக வங்கி நிறுவப்பட்ட நாள்

1537 - ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது.

1703 - இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கு ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.

1831 - சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.

1845 - பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.

1864 - இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.

1918 - ஜேர்மனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.

1922 - ஜப்பானின் ஹோஷோ உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவிக்கப்பட்டது.

1923 - ஜப்பானிய மாணவன் ஒருவன் இளவரசர் ஹிரோஹிட்டோவைக் கொல்ல முயற்சித்தான்
1934 - பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.

1945 - 28 நாடுகள் ஒன்று கூடி World Bank எனப்படும் உலக வங்கியை நிறுவின. இன்டர்நேசனல் மானிட்டரி பண்ட் என்றழைக்கப்படும் அனைத்துலக பண நிதியமும் அமைக்கப்பட்டது

1949 - இந்தோனீசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.

1956 - தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1968 - சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

1978 - ஸ்பெயின் 40வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் ஜனநாயக நாடானது.

1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.

1985: பலஸ்தீன கெரில்லாக்கலால் ரோம், வியன்னா நகரங்களின் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

1993 - World Trade Organization எனப்படும் உலக வர்த்தக நிறுவனம் நிறுவப்பட்டது
1996 - தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.

 2002: ரஷ்யாவின் செச்னிய பிராந்தியத்தில் இரு வாகன குண்டுத்தாக்குதல்களில் 72 பேர் பலி.


2007: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார்

No comments:

Post a Comment