Digital Time and Date

Welcome Note

Saturday, December 29, 2012

வரலாற்றில் இன்று

டிசம்பர் 28

1065 - லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலாயம் (Westminster Abbey) திறந்துவைக்கப்பட்டது
1612 - கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.

1832: ஜோன் சி கல்ஹோன், அமெரிக்க உப ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய முதல் மனிதரானார்.

1836 - தெற்கு அவுஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன.

1836 - மெக்சிகோவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.

1846 - அயோவா ஐக்கிய அமெரிக்காவின் 29வது மாநிலமாக இணைந்தது.
1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவுக்கு உரிமை கோரியது.

1869 - சிங்கப்பூரில் Chewing gum தடை செய்யப்பட்டிருக்கிறது. வில்லியம் எஃப் சிம்பிள் ( William F Semple ) என்பவர் அதற்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1879: ஸ்கொட்லாந்தில் ரயில் பாலமொன்று உடைந்து 75 பேர் பலி.

1885 - இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர்.

1891 - யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டன.

1895 - பிரான்சின் லூமியேர சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.

1908: இத்தாலியின் சிசிலி தீவின் மெசின்னா நகரில் 7.2 ரிக்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதால் 75 ஆயிரம் பேர் பலி.

1918: சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கொன்ஸ்டன்ஸ் மார்கிவிக் பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் எம்.பியானார்.


1929 - நியூசிலாந்தின் காலனித்துவ காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட சமோவாவின் 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.

1930 - மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.

1958 - கியூபாவின் 1937 : இந்திய டாடா குழும தலைவர் ரத்தன் டாடா பிறந்த தினம்

1940 : இந்திய அரசியல் தலைவர் ஏ.கே.அந்தோணி பிறந்த தினம்
சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.

1981 - அமெரிக்காவின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எலிசபெத் கார் வேர்ஜீனியாவில் பிறந்தது.

1983 - யுனெஸ்கோ எனும் அமைப்பிலிருந்து விலகியது அமெரிக்கா.

2005 - இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜான்ஜுக் என்பவர் உக்ரேனுக்கு நாடுகடத்த ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2006 - எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுத் துருப்புக்களும் சோமாலியா தலைநகர் மொகடிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இஸ்லாமிய போராட்ட அமைப்பின் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.

2007 - நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

2010: அல்ஜீரியாவில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பம்.